Sunday 27 July 2014

தென்வேட்டுவர் புலிகுத்தி நடுகல்

வேட்டுவ குலத்தவர்கள் தமிழ் மண்ணின் மூத்த போர்குடியினர் மற்றும் ஆண்ட பரம்பரை இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.



ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்.
ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே.
(தொல்காப்பியம் 21)
காவலியர்,மாவலியர்,பூவலியர்,வெட்டுவர்,வில் வேடுவர் இந்த 5 பிரிவு வேட்டுவர்களை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் ,இலக்கியங்கள் கூறுகிறது .
இன்று இந்த 5 பிரிவு வேட்டுவர்கள் இன்று வேட்டுவ கௌண்டர்,பூலுவ கௌண்டர் மற்றும் புன்னம் வேட்டுவ கௌண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.இன்று வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டில் பெரும் பான்மை இனத்தவராகவும் ,திருச்சி,தஞ்சாவூர்,மதுரை,தேனி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிறுபான்மை இனத்தவராகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வெட்டுகள்,செபெடுகள் ,சங்க இலக்கியங்கள் ,குருகுல காவியம் ,பஞ்சவர்ண ராஜகுல காவியம்,அப்பசிமார் காவியம், வேட்டுவ கலிவெண்பா போன்ற ஆவணம்களில் இருந்து சுமார் 300 வேட்டுவ குலத்தை கண்டுபிடித்து நாமக்கல் வெப்படை இல் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த வேட்டுவர் மாநாட்டில் பேராசிரியர் ரா தங்கமணி புத்தகம் வெளிட்டார். முக்கியமான வேட்டுவ குலத்தின் பெயர்களை கிழே தருகிறேன்

சேர வேட்டுவ குலம்,வில் வேட்டுவ குலம் ,பனைய வேட்டுவ குலம் ,அந்துவ வேட்டுவ குலம் ,வஞ்சி வேட்டுவ குலம் ,மலைய வேட்டுவ குலம்,மலைஅரையர் வேட்டுவ குலம் ,சோழ வேட்டுவ குலம் ,வளவன் வேட்டுவ குலம் ,வெண்கொற்றர் வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,சந்திர வேட்டுவ குலம் ,அக்னி வேட்டுவ குலம் ,சத்திரிய வேட்டுவ குலம் ,புலி வேட்டுவ குலம் ,மீன் வேட்டுவ குலம் ,முல்லை வேட்டுவ குலம் ,வேள் வேட்டுவ குலம் ,வேந்த வேட்டுவ குலம், குடுமி வேட்டுவ குலம் ,காடை வேட்டுவ குலம் ,வன்னி வேட்டுவ குலம்,பூவாணிய வேட்டுவ குலம்,மும்முடி வேட்டுவ குலம் இது போல் பல வேட்டுவ கூட்ட பெயர்கள் இருக்கிறது .

இன்று வேட்டுவ குலத்தினர் கொங்கு நாட்டில் ஆறுநாட்டார் மலை முருகன் கோயில்(கரூர் ),பாலமலை முருகன் கோயில் (கரூர் ) ,கபிலர்மலை முருகன் கோயில் (நாமக்கல் ),ஓதி மலை முருகன் கோயில் (இரும்பொறை,ஈரோடு,), கிணத்துகடவு பொன்மலை முருகன் கோயில் (கோவை ) மற்றும் பல காளி கோயில்களில் முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.
ஓதி மலை முருகன் கோயில்களில் அந்துவ வேட்டுவ குலத்தினர்(சேரர்) முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.

புரவிபாளையம் வேட்டுவ குலத்தை சேர்ந்த பாளையக்காரர் சிங்களர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.மேலும் மதுரை நாயக்கர் மன்னர்களோடு போர் செய்து தோல்வி அடைந்தார் என்று காடையூர் செப்பேடு கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் நாயக்க மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று வேட்டுவ பாளையகர்கள் வரலாறுகள் கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் ஒக்கிலியர்களோடு(கன்னடர் ) போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று தென்னிலை செபெடுகள் கூறிகிறது.
வேட்டுவ குலத்தவர்கள் களபிறர் மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று குருகுல வரலாறுகள் கூறுகிறது.
குடி மக்களுக்கு தீங்கு செய்த ஒட்டியர்களையும் மற்றும் சல்லியர்களை வெட்டி போட்டு குடிமக்களை பாதுகாத்தார்கள் என்று செபெடுகள் கூறுகிறது.
மழ கொங்கை ஆண்ட வேட்டுவ குறுநில மன்னன் அல்லால இளையன் நாமக்கல்,ஜேடர்பாளையம் என்னும் இடத்தில் காவேரி ஆற்றில் அணை கட்டி கால்வாய் வெட்டினார்.இன்று இந்த கால்வாய் ராஜா கால்வாய் என்று மக்களால் அழைக்கபடுகிறது. இந்த செய்தியை கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.
செம்ப வேட்டுவ குலத்தை சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ கொங்கால்வன் அணை கட்டி கால்வாய் வெட்டிய செய்தியை கொடிவேரி,பவானி ஆற்றங்கரை கல்வெட்டு கூறுகிறது .
வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும் வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக் கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
........ஊராளி வேட்டுவன் அழகன்
காளி அவன் இதில் பட்டான்.”

பாண்டியர் வில்லாற்றல் மிக்க வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
தேவற்கு யாண்டு 6 – வது
வடகரை நாட்டு உரகடங்கச்சதி
கண்ணையன் வேட்டுவரில்
அந்தியூரன்”

கோவில் கர்ப்பகிரகம் வடக்கு வெளி சுவர் - 'களந்தை பூலுவர் பெரும்பற்றார் சந்தரகுமார கோப்பன்ன மன்றடியார் கந்தசாமி கவுண்டர் கட்டிவைத்த கர்ப்பகிரகம் கோவில் முன் மண்டபம்'.
கோவை ,பேரூர் சிவன் கோவிலை கட்டியவர் வேட்டுவ குல தலைவர் புரவிபாளையம் ஜமீன். சூரிய வம்சம் படம் வேட்டுவர் அரண்மனையில் தான் படமாக்க பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:

“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”

இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.
பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்
குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .
சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது
(http://www.jeyamohan.in/?p=43096)
 

No comments:

Post a Comment