Sunday 21 August 2016

சோழன் பூர்வ பட்டயம்


கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .
சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
(மண்ணாடி-நில தலைவன் ).

கொங்கு வெள்ளாள கவுண்டர்ளின் வரலாற்று திருட்டு


வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் :
'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )
'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )
இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .
இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .
இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
                                                                வெள்ளாளர்களின் போலி பட்டயங்கள் மற்றும் போலி வரலாறுகள்:

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:

மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி வரலாறுகள் :
தீரன் சின்னமலை -போலி வரலாறு
பொன்னர் -சங்கர் கதை -போலி வரலாறு


வெள்ளாள கவுண்டர் சாதி -சூத்திரர்

தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் சாதிகள் உருவானது .தமிழ் மண்ணில் நான்கு வர்ண முறை கடைபிடிக்க வில்லை .ஆனாலும் தமிழ் புலவர்கள் தமிழ் மண்ணில் தொழில்கள் அடிப்படையில் உருவான சாதிகளை நான்கு வர்ணத்தில் (அந்தணர் ,சத்திரியர் ,வைசியர் ,சூத்திரர் ) வைத்து இலக்கியங்கள் உருவாக்கி உள்ளனர் . இதில் வெள்ளாளர் களை சூத்திரர் சாதியை சேர்ந்தவராக கூறி உள்ளார்கள் .
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சுமதிபார்கவா என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரம் கீழ் கண்டவாறு நான்கு வருணக் கடமைகளைப் பட்டியலிடுகின்றது.

அந்தணர் அறுதொழில்கள் : 1. வேதம் ஓதுதல், 2. வேதம் ஓதுவித்தல், 3. வேள்வி புரிதல், 4. வேள்வி செய்வித்தல், 5. ஈதல், 6. ஈதலை ஏற்றல்.
அரசனது தொழில்கள் : 1. பிரஜா பரிபாலனம் (குடிகாவல்), 2. ஈகை, 3. வேள்விகள் புரிவது, 4. வேதம் பாராயணம் செய்விப்பது, 5. விஷய சுகங்களில் மனத்தை அலையவிடாமல் உறுதியாக நிற்பது.
வைசியருக்கான தொழில்கள் : 1. ஆநிரைகாத்தல், 2. தானம் கொடுத்தல், 3. கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், 4. வட்டிக்கு விடுதல், 5. பயிர்த் தொழில் செய்தல்.
சூத்திரர்களுக்கான தொழில்கள் : ஏவலரான இவர்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்.
மேலே கூறப்பட்ட நெறி முறைகள் தமிழ்ச் சமுதாய மரபுகளுக்குப் பொருந்துகின்றனவா எனக் கீழே ஆராயப்படுகின்றது.
கி.பி. 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும், தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகளையும், தொழில்களையும் கீழ்கண்டவாறு தெளிவாக இலக்கணப்படுத்தியுள்ளது.
அந்தணர்க்கு உரிய மரபுகள் :
நூலே, கரகம், முக்கோல், மனையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. (மரபியல் : 71)
பொருள் : (நூல்) பூணூல், கமண்டலம், முக்கோல், இருக்கை மணை, ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை.
அரசர்க்கு உரிய மரபுகள் :
படையும், கொடியும், குடையும், முரசும்
நடைநவில்புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய. (மரபியல் : 71)
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றி வரூஉம் பொருளுமார் உளவே. (மரபியல் : 73)
பொருள் : அந்தணர்க்கு உரியன என்று முன்னே கூறப்பட்டவற்றுள் அரசர்க்கும் உரியனவாக ஒன்றிவரும் பொருளும் உண்டு.
அரசர்க்கு உரியன சில அந்தணர்க்கு இல்லை :
பரிசில், பாடாண் திணைத் துறைத் கிழமைப் பெயர்
நெடுந்தகை, செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே (மரபியல் : 74)
வைசிகன் பெறுவன :
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
மெய்தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான. (மரபியல் : 78)
பொருள் : எண்வகை உணவாவன : நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதும்பை இவற்றை உண்டாக்குகின்ற உழவுத் தொழிலும் வைசியர்க்குரியதாகும்.
வேளாண் மாந்தர் இயல்பு :
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி (மரபியல் : 81)
பொருள் : வேளாளருக்கு உழுது உண்ணும் வாழ்க்கை அல்லாது வேறு வகையான வாழ்க்கை இல்லை என்று கூறுவர் அறிஞர்.
வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்த்தனர் என்ப - அவர் பெரும் பொருளே (மரபியல் : 82)
பொருள் : வேந்தரால் ஏவப்பட்ட தொழிலால் படைக்கலம் கண்ணி (தலைமாலை) ஆகியவை வேளாளர்கள் பெறும் பொருள்கள்.
மேலே கூறப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்களால், சங்க காலத்தில் நான்கு வருணக் கோட்பாடு மனுநீதி அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டது என்பது நிரூபணமாகின்றது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் எந்த இடத்திலும் மேலே கூறப்பட்ட இலக்கண முறைக்கு மாறான மரபுகளைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய ஒரு புறநானூற்றுப்பாடல் தமிழ்ச் சமுதாயத்தில் அன்று வழக்கிலிருந்த நான்கு வருண பாகுபாட்டைக் குறிப்பிடுகின்றது.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழப்பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே (மரபியல் : 183)
சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர் காலத்தில் (கி.பி. 250 -
கி.பி. 590) இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மணிமேகலையும் நான்கு வருணத்தைக் கூறுகின்றது.
அருந்தவர்க் காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி.
(மணிமேகலை : 6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 7)
கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரமும் நால்வகை வருணங்களைக் குறிப்பிடுகின்றது.
கனக பாதமுங் களங்கமும் வந்துவும்
நால்வகை வருணத்து நலங்கே மொழியவும் (சிலம்பு-14-180-82)
பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு (சிலம்பு-22-110)
பால்வேறு தெரிந்த நால்வேறு வீதி (சிலம்பு ஊர் காண்காதை-212)
இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப (சிலம்பு கடலாடு காதை. 6-8-164-165)
புறப்பொருள் வெண்பா மாலை வேளாண் வாகைப் பற்றிக் கூறுவதாவது :
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று (வாகைத்திணை -10-165)
இங்கு மேல் மூவரும், வேளாளரும் சேர்த்து நான்கு வருணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வேளாளராகிய சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல இடங்களில் வேளாளரை நாலாவது குலம் எனக் குறிப்பிடுகின்றது.
குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும் (குலச்சிறையார்.4)
நாலாங் குலத்திற் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிற்றுக் கிழார். (29. ஏயர்கோன் - கலிக்காமநாயனார்)
வேத நெறியின் முறை பிறழாமிக்க ஒழுக்கத் தலைநின்ற
சாதி நான்கு நிலை தழைக்குந் தன்மைத் தாகித்தடமதில் சூழ் (37. சுழற்றியார்.4)
ஓங்கிய நாற்குலத் தொஏவாப் புணர்வில் தம்மில்
உயர்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம் (19. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். செ.103)
கி.பி. 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, நான்கு வருணத்தாருக்குரிய பெயர்களையும், அவர்களுடைய தொழில்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
பார்ப்பார் பெயர் :
அய்யர், வேதியர், இருபிறப்பாளர்,
மெய்யர், மிக்கவர், இறையோர், பூசரர்,
அந்தணர், நூலோர், அறுதொழிலாளர்,
செந்தீ வளர்ப்போர், உயர்ந்தோர், ஆய்ந்தோர்,
ஆதி வருணர், வேத பாரகர்,
வேள்வியாளர், விப்பிரர், தொழுகுலத்தோர்
முப்புரி நூலோர், முனிவர், என்று இவை
தப்பு இல் பார்ப்பார் தம் பெயர் ஆகும். (திவா : 167)
அந்தணர் அறு தொழில் :
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல் என்று இவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறு தொழில். (திவா : 2365)
அரசர் பெயர் :
புரவலன், கொற்றவன், பெருமாள், காவலன்,
அரசன், ஏந்தல், கோவே, குரிசில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன்,
இறைவன், அண்ணல், எனப்பதி னெட்டும்
அரசர் தொல் பெயர் ஆகும் என்ப. (திவா : 178)
அரசர் அறு தொழில் :
அரசர் அறுவகைச் செய்தொழில் ஓதல்,
விசையம், வேட்டல், ஈதல், பார்புரத்தல்,
(கரை இல்) படைக்கலம் கற்றல் ஆகும் (திவா : 2366)
செட்டிகள் பெயர் :
இப்பர், பரதர், வயிச்சியர், கவிப்பர்,
எட்டியர், இளங்கோக்கள், ஏர்த்தொழிலர், பசுக்காவலர், (ஒப்பு இல்) நாய்க்கர்,
வினைஞர், வணிகர் என்று (அத்தகு) சிலேட்டர்,
செட்டிகள் பெயரே.
வணிகர் அறு தொழில் :
வணிகர் அறுதொழில் ஓதல், வேட்டல்,
ஈதல், உழவு, பசுக்காவல், வணிகம் (திவா : 2367)
வேளாளர் பெயர் :
வினைஞர், சூத்திரர், பின்னவர், சதுர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், (வண்) களமர், உழவர்,
(சீர்த்த) ஏரின் வாழ்நர், காராளர்.
வேளாளர் அறுதொழில் :
வேளாளர் அறு தொழில் உழவு, பசுக்காவல்,
(தெள்ளிதின்) வாணிகம், குயிலுவம், காருகவினை, (ஒள்ளிய)
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.
திவாகரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வருணத்தாருக்குரிய தொழில்கள் மனுநீதியிலிருந்து சிறிது மாறுபடுகின்றது. வைசியருக்குரிய பசுக்காவல், வாணிகம் முதலியன வேளாளருக்கும் கூறப்பட்டுள்ளது. களப்பிரர் காலச்சமூக மாற்றத்திற்குப் பின் வேளாளரில் ஒரு பிரிவினர் இத்தொழிலுக்குரியோராகியுள்ளனர்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கலத்தை என்னும் பிங்கல நிகண்டில் காணப்படும் நான்கு வருணத்தாரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே பார்ப்போம்.
பார்ப்பார் :
அறவோர் பூசுர ரறு தொழி லாள
ரிருபிறப் பாள ரெரிவளர்ப் போரே
யாதி வருணர் வேதிய ரந்தணர்
வேள்வியாளர் மறையவர் விப்பிரர்
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர்
வேத பாரகர் முப்புரி நூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெய ராகும். (பிங் : 726)
அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இருபிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநூலோர், தொழுகுலர்.
அந்தணர் அறுதொழில் :
ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த
லீத லேற்ற லென்றிவை யாறு
மாதிக் காலத் தந்தணர் தொழிலே. (பிங் : 729)
அந்தணர் மாலை : கமலம்
அந்தணர் கொடி : வேதம்
மாலை கமல மறை கொடியாகும் (பிங் : 730)
அந்தணர்க்குரிய பொருள் :
தருப்பை, முஞ்சிப்
புல், சமித்து தருப்பையு முஞ்சியுஞ் சமித்து
மவர்க்கே (பிங் : 731)
அரசர் :
பார்த்தி பரிறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வ ரேந்தல் குரிசின் மகிபாலர்
தலைவ ரரசர் தம்பெய ராகும். (பிங் : 733)
(பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கள், வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர், முதல்வர், ஏந்தல், குரிசில், மகிபாலர், தலைவர்.)
எண்வகை மாலை :
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகை யென்
றித்தொடை யெட்டு மரசர்க்காமே. (பிங் : 734)
(வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.)
அரசர்கள் படை : அறுவகைத் தானை
அரசர்கள் கொடி : சிங்கம்
படையறு வகைத்தானை கொடி சிங்கமாகும் (பிங் : 735)
அரசர் அறு தொழில் :
ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல்,
வேட்டல், படை பயிறல்.
ஓதல் பொருத லுலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படை பயிற லறு தொழில். (பிங் : 767)
வைசியர் பெயர் :
தாளாளரிப்பர் தருமக் கிழவர்
வேளா ரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர் (பிங் : 773)
(தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளார், இளங்கோக்கள்)
வைசியர் முத்தொழில் :
கோக்களாக் காத்தலு மாப்பொரு ளீட்டலு
மேர்த் தொழின் மூன்று வைசியர் தந் தொழிலே. (பிங் : 774)
(கோக்களைக் காத்தல், பொருளீட்டல், ஏர்த்தொழில்)
தளவைசியர் :
நாய்கர், எட்டியர், வணிகர், பரதர்
நாய்க ரெட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவுந் தனவை சியர்க்கே ( பிங் : 776)
பூவைசியர் :
உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர்
உழவர் மேழியர் காராள ரிளங்கோ
புகல் பூ பாலர்பூ வைசியர் பெயரே. (பிங் : 777)
பூவைசியர் அறு தொழில் :
ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவுத் தொழில்.
ஓதல் வேட்ட லுபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவுத் தொழி லெனப்
புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே. (பிங் : 778)
சூத்திரர் :
பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகள் புதல்வர், உழவர், ஏரின் வாழ்னர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர்.
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர், வளமையர்,
மன்னமுத் தொழிலர், மண்மகள் புதல்வர்,
உழவ, ரேரின் வாழ்னர், காராளர்,
வினைஞர், மேழியர், வேளாளரென்றிவை,
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே. (பிங் : 780)
வேளாளர் பத்துவகைத் தொழில் : ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காத முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கம், விருந்து புறந்தருதல்.
ஆணைவழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கட னாற்றல் கரிலகத் தின்மை
யக்கல் போற்ற லோவா முயற்சி.
மன்னிறை தருத லொற்றுமை கோட
றிருந்திய வொழுக்கம் விருந்து புறந் தருதல்
வேளாண் மாந்தர் செய்கை டூரைந் தே.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, மனு நீதியிலிருந்து விலகிச் சென்ற திவாகரத்தின் வரையறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சூத்திரராகிய வேளாளரில் உயர்குடியினர் பூவைசியர் என்ற தகுதியை அடைந்துவிடுகின்றனர். பூவையருக்குரிய தொழிலில் ஓதலும், வேட்டலும் இடம் பெற்று விடுகின்றன.
இக்கால கட்டத்திலிருந்துதான் பிராமணரும் அரச வருணத்தினரும் வகித்து வந்த அமைச்சர் பதவி பெருவாரியாக உயர்குடி வேளாளருக்குக் கிடைத்து வந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஏவையாரின் தனிப்பாடல் ஒன்று ஒருபடி மேலே சென்று வேளாளரே அமைச்சர் பதவிக்கு உகந்தவர் எனக் கூறுகின்றது.
நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெசைமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே யரசு.
இப்பாடலின் பொருள்,
நூலெனிலோ கோல் சாயும் - பார்ப்பனர் மந்திரி ஆனால் நெளிவு சுழிவு இல்லாத ஆலோசனை வழங்குவர். எனவே அங்கு அரசனின் செங்கோல் சாயும்.
நுந்தமரேல் வெசைமராம் - உன்னுடைய அரச வர்ணத்தான் மந்திரியானால் ஓயாத போரினைத் தூண்டுபவனாக இருப்பான். எனவே நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டு, அமைதி கெடும்.
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - துலாக்கோல் பிடிக்கக் கூடிய வணிகன் (வைசிய வருணத்தவன்) மந்திரியானால், குடிகளிடமிருந்து அதிகவரி பெற்றுக் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பான். எனவே அங்குக் குடிசாயும்.
நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் அந்த அரசே யரசு - நாலாம் வருணத்தானாகிய வெள்ளாளன் நல்ல மந்திரியாகவும், எல்லா வழிக்கும் நல்ல துணையாகவும் இருப்பான். அப்படிப்பட்ட வெள்ளாளனை மந்திரியாகப் பெற்ற அரசே சிறந்த அரசு.
இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க் கினியரும் கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம் பூரணரும் தொல்காப்பியத்தின் கீழ்க்கண்ட பாடலுக்கு உரை எழுதும் பொழுது தெளிவாக நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்று எழுதுகின்றனர்.
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே (தொல் : பொருள் : கற்பியல் : 142)
நச்சினார்க்கினியர் உரை :
முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அ•து இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளருக்குத் தவிர்த்தது என்பதூஉம். தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று ... ........ . ......
இளம்பூரணர் உரை :
மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோ ராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறுவதாவது:
நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற்படுதிறனும் பண்ணெனப்படுமே. இம்மரபுப்படி,
அந்தணருக்கு - வெண்பா
அரசருக்கு - ஆசிரியப்பா
வணிகருக்கு - கலிப்பா
வேளாளருக்கு - வஞ்சிப்பா
ஆகும்.
நச்சினார்க்கினியரும், இளம் பூரணரும், அடியார்க்கு நல்லாரும் நான்கு வருணப் பாகுபாட்டை இயல்பாகக் கூறுகின்றனர். எனவே தமிழ்ச் சமூகத்தில் 13, 14ம் நூற்றாண்டுகளிலும் நான்கு வருணப் பாகுபாடு தெளிவாக நிலவியது புலப்படுகின்றது.
இவ்வாறு நான்கு வருணத்தவர் யார் யார் என்றும் அவர்களுடைய இயல்புகள் பற்றியும் ஏராளமான இலக்கியக் குறிப்புகள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனக் கருதப்படும் அரசர் மற்றும் வைஸ்ய வருணத்தாருக்கு உரியதாக இத்தனை விரிவான வரையறைகளை தமிழ் இலக்கண நூல்களும் நிகண்டுகளும் காலம்தோறும் கூறவேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதன் பின்னரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட நிகண்டுகளான உரிச் சொல் நிகண்டு (கி.பி. 14ம் நூற்றாண்டு), கயாதரம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), பாரதி தீபம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (கி.பி. 16ம் நூற்றாண்டு), அகராதி நிகண்டு (கி.பி. 1594) ஆகியவைகளும் ஏறக்குறைய இதே மாதிரியான சமூகச் சித்திரத்தையே கொடுக்கின்றன.
கி.பி. 1700 ல் இயற்றப்பட்ட வட மலை நிகண்டிலும் (பல் பொருள் சூடாமணி), கி.பி. 1732ல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட சதுரகராதியிலும் நான்கு வருணச் சமூகச் சித்திரத்தில் பெரிய மாற்றம் தெரிகின்றது.
வடமலை நிகண்டின் சமூகச் சித்திரம் :
அந்தணர் : முனிவர், பார்ப்பார்
அரசன் : பிரகஸ்பதி, மன்னன்
வேளாளர் : தனவைசியர், தியாகி, பூவைசியர்.
சதுரகராதி காட்டும் சமூகச் சித்திரம் :
அந்தணர் : பார்ப்பார், முனிவர்
அரசன் : இராசா, எப்பொருட்கு மிறைவன், வியாழன்
வேளாளர் : ஈகையாளர், பூவைசியர்
இவ்விரு நிகண்டுகளிலும் வைசியருக்குப் பொருள் கூறப்படவில்லை. வடமலை நிகண்டில் பூவைசியருடன் சேர்த்து தனவைசியரும் வேளாளரில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது வைசிய வருணம், சூத்திரவருணமாகிய வேளாளரில் சேர்க்கப்பட்டு விட்டது.
அரசருக்குரிய பெயரில் மன்னன்,ராஜா என்ற பட்டம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் அரசர்க்குரிய தொழில்களும் கூறப்படவில்லை. நிகண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், அன்றைய கால கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பதாகவே உள்ளன. இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் பாண்டியர் பாண்டிய நாடு ( தென்காசி பகுதிகள் ) மற்றும் கொங்கு நாடு (பெருந்துறை பகுதிகள் ) போன்ற இடங்களில் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்து வந்தனர் மற்றும் இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் அள்ளால இளையன் என்பவர் மழகொங்கு பகுதிகளை ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார் மற்றும் மாவலி வணதிராயர் மதுரை அலங்கா நல்லுரை தலைமை இடமாக கொண்டு ஆண்டார்கள் . மதுரையை ஆண்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டு வந்தனர். அந்த 72 பாளையக்காரர்களில் ஒருவர் கூடப் பழைய அரச சாதியைச் (வேட்டுவ இனம் ) சேர்ந்தவர்கள் அல்ல. அந்த 72 பாளையக்காரர்கள் பள்ளி இனம் ,மறவர் இனம் ,அகம்படி இனம் ,நாயக்கர் இனம் போன்ற சாதிகளை சேர்ந்தவர்கள் .இவர்கள் தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். எனவேதான் இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த நிகண்டுகளால் தமிழக மூத்தகுடி அரசர்க்குரிய பழைய பட்டங்களையும், தொழில்களையும் கூற முடியவில்லை. மேலும் இந்நிகண்டுகளில் தமிழக மூத்தகுடி அரசர்க்குரிய தொழில்கள் வரையறுக்கப்படாததால், இவைகள் கூறும் அரசர் என்ற பதம் இரண்டாம் வருணத்தைக் குறிப்பதாகவும் கொள்ளமுடியவில்லை. இச்சூழலில்தான் பிராமணர் தவிர பிற வருணத்தவர் அனைவரையும் ஒரே வருணமாக, சூத்திர வருணமாகக் கருதும் நிலை உருவாகி விட்டது. வரலாற்றில் அன்று ஏற்பட்ட மயக்கம்தான் இன்றுவரை தொடர்கின்றது.

Sunday 24 July 2016

வெள்ளாளர்களின்(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) குல பிரிவுகள்

வெள்ளாளர்களின்(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) குல பிரிவுகள் -ஓர் ஆய்வு

அந்துவ வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் அந்துவ வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
சேர வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் சேர வெள்ளாளர்கள் என அழைக்கபட்டது .
மலைய வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் மலைய வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
காடை வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் காடை வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
செம்ப(செம்பியன் ) வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் செம்ப வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
வேந்த வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் வேந்த வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
மூல வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் மூல வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
 

இது போல வெள்ளை வேட்டுவ குலத்தவர்கள் ,நரம்ப வேட்டுவ குலத்தவர்கள்,மணிய வேட்டுவ குலத்தவர்கள்,படைத்தலை வேட்டுவ குலத்தவர்கள்,செந்தலை வேட்டுவ குலத்தவர்கள்,பொன்ன வேட்டுவ குலத்தவர்கள்,முழுகாதன் வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை வெள்ளை வெள்ளாள குலம் ,நரம்ப வெள்ளாள குலம்,மணிய வெள்ளாள குலம்,படைத்தலை வெள்ளாள குலம்,செந்தலை வெள்ளாள குலம்,பொன்ன வெள்ளாள குலம்,முழுகாதன் வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
இது போல வெள்ளாளர்களுக்கு 25 குல பிரிவுகள் உருவானது .

வெள்ளாளர்களை 128 குல பிரிவுகளாக பிரிக்கபட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த கோப்பான மன்றாடியார் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது .

வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் குல பிரிவுகளை பார்த்து வெள்ளாள இனத்தினர் குல பிரிவுகளை உருவாக்கி கொண்டார்கள் .இப்படித்தான் வெள்ளாளர்களுக்கு குல பிரிவுகள் உருவானது .
வெள்ளாளர்களுக்கு குலங்கள் உருவான பிறகு வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் திருமண முறைகளை பார்த்து திருமண முறைகளை உருவாக்கி கொண்டார்கள் .இது போல வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் வழிபாட்டு முறைகளை பார்த்து வழிபாட்டு முறைகளை உருவாக்கி கொண்டார்கள்.

Saturday 23 July 2016

காலிங்கராயன் அணை

காலிங்கராயன் அணை -ஓர் ஆய்வு

கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
காலிங்கராயன் வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள் ,உண்மைகள் என கலந்து இருக்கிறது.(சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள் ).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர் செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை எழுதி கொண்டார் .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி.
காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும் ,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும் .
'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.

தீரன் சின்னமலை வரலாறு


கிபி 1968 யில் புலவர் குழந்தை என்பவர் தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கி லேயர்களை எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி ஆண்டர் என்று எழுதினார்கள் .
காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன் சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.
வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து கொண்டார்கள்

Tuesday 19 July 2016

அண்ணன்மார்

பொன்னர் -சங்கர் ஓர் ஆய்வு

'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .
'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.

கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .

அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .

தேவரடியாள் சாதி


கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் பெண்களை 'மாணிக்கி' சடங்குகள் செய்ததை பற்றி பட்டயங்கள் கூறுகிறது .

தூரன் குல செப்பேடு (கிபி 16):
தூரன் வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தூரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது .மேலும் இதற்கு ஆதி சைவ மறையோர் (பிராமணர் ),வாள் அரசரில் பண்டி வேட்டுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டிகவுண்டர், பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

செல்ல குல செப்பேடு(கிபி 16):
செல்ல வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை கொன்னை செல்லாண்டியம்மன் மற்றும் பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயில்களில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'செல்லகுல மாணிக்கி' என பேர் வைத்து ,பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயிலில் நாட்டியம் நடத்தை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.மேலும் இதற்கு ஐய்யர்,அகரம் ஊரை சேர்ந்த வேட்டுவரில் தூங்ககவுண்டன், குன்னாடி வேட்டுவன் ,புல்லை வேட்டுவன் ,நரி வேட்டுவன் ,வேம்ப வேட்டுவன் ,சாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்த முகைகாளி ,பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

தேவேந்திர குல செப்பேடு(கிபி 18):
தேவேந்திர வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தேவேந்திரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.


 'இவ்வூர் தேவரடியாரில் காமிண்டனான மாணிக்க சதிரன் '(பெருந்துறை கல்வெட்டு ,கிபி 1225)
'குறுப்பு நாட்டு தேவரடியாரில் சடையமேலிருந்தாள்'(விஜய மங்களம் கல்வெட்டு ,கிபி 1284).

'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் கல்வெட்டு ,கிபி 1853)
செம்பூத்த குலம்- கொங்கு வெள்ளாள கவுண்டர்
மாணிக்கி என்பதற்கு தேவரடியாள் என்று பொருள் என்பதை
கோனாடு பகுதியில் கிடைத்த கல்வெட்டு(PSI-817) ஓன்று மூலம் அறியலாம் .
வேட்டுவ மன்னர்கள் கொங்கு நாட்டில் 32 ஊர்களில் தாசிகளை வைத்து தாசிகளை 'மாணிக்கி' என அழைக்க பட்டதை சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .