Wednesday 23 July 2014

கொடும்பாளூர் இருக்கு வேளிர்

  https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/

இருக்குவேளிர்( கொங்கு சோழர்) மற்றும் சோழ அரசர்கள்  கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள்.

கொடும்பாளூர் இருக்குவேளிர் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரம்:

'வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர,
கடிய கதழும் நெடு வரைப் படப்பை
5 வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், ...
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10 ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர்
15 கை வண் பாரி மகளிர்' என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும!
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து,
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
20 இரும் புலி வரிப் புறம் கடுக்கும்
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! ' puram-202

 

யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில், கிருஷ்ணனுக்கு முதல்மரியாதை செலுத்தப் படுவதை எதிர்த்துப் பேசும் சிசுபாலன் அங்குள்ள பல மன்னர்களைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது ‘இதோ புகழ்பெற்ற நிஷாதராஜன் ஏகலைவன் இருக்கிறான், இவன் உன் கண்ணில் படவில்லையா‘ என்றும் கூறுகிறான். எனவே அரசபதவி என்ற அளவில் ஏகலைவன் கிருஷ்ணனை விட அந்தஸ்தில் *உயர்ந்தவனாகவே* இருந்தான் என்பது புலனாகும்.

சபரராஜன்-வேட்டுவராஜன்

நிஷதராஜன்-வேட்டுவராஜன்

ஸ்ரீ ரங்கம் கோயில் கல்வெட்டுகள்' நிஷதராஜன்' பற்றி கூறுகிறது .இந்த கல்வெட்டுகள் முதலாம்  குலோத்துங்க சோழனின் காலத்தை சேர்ந்தது .

'கேரளாண்டரான நிஷதராஜன் மகளார் திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன் தேவியார் கண்ணுடை பெருமாள் பிராட்டி ஆழ்வார் இக் கோவில்செய்வித்தார்' (புதுகோட்டை கல்வெட்டு எண் -174,குலோத்துங்க சோழன் 1)
கேரளாண்டரான நிஷதராஜன் -சோழ அரசர்
திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன்-இருக்குவேளிர் 


' ராஜேந்திரசோழன் கேரளன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 ,கி பி 1153-54,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-132.

'வீமன் ராஜேந்திரசோழ வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 , கி பி 1164-65 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-137.

'ராஜேந்திரசோழ கேரளன் வேட்டுவராஜன்' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.குலோத்துங்க 3,கி பி 1189-90 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-147.

' திருகொடுங்குன்றமுடையன் அழகியதேவன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க 3,வருடம் 18 =கி பி 1195-96,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-150.

திருகொடுங்குன்றமுடையன்' கேரளன் வேட்டுவராஜன் 'என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.ஜடவர்மன் குலசேகரன் 1,கி பி 1213,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-245.

திருகொடுங்குன்றமுடையன்  நாடாள்வான் என்பவரை பற்றி புதுகோட்டை கல்வெட்டு எண்-380 கூறுகிறது .(வீரபாண்டியன் , எண்-380 )

'கண்டன் சுந்தர வில்லி நிஷதராஜன்' என்பவரை பற்றி புதுகோட்டை  கல்வெட்டுகள்  கூறுகிறது .(சுந்தரபாண்டியன், புதுகோட்டை  கல்வெட்டு எண் -)
இருக்குவேளிர்தான் கொங்கு சோழர்கள் என்பதற்கு ஆதாரம் :
'...கோநாட்டான் வீரசோழ பன்மற்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 942)

'...கோ நாட்டான் வீரசோழ பெருமானடிக்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 981)

'...கோநாட்டான் விக்கிரம சோழன் ---'

(கொங்கு சோழர், விக்கிரம சோழன் ,கி பி 1024) .

இருக்குவேளிர்கள்(கொங்கு சோழர் ) குடுமி  வேட்டுவகுலத்தை சேர்ந்தவர்கள் .
'...பொங்கலூர் நாட்டு கீரனுரான கொழுமம்கொண்ட சோழநல்லூர் உடையார் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் மணவாட்டி ...'
(S.I.I Vol-V,No-266,கி பி 1218,கீரனூர் )
உடையார் -மன்னர்
கொங்கு சோழர் -குலோத்துங்க சோழ இருங்ககோளன்(கி பி 1196-1207)
'.... பொங்கலூர் நாட்டு கீரனூர் குடுமரில் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் இந்நாயனார் திருவாகிச்வரமுடையார் ..'
(S.I.I Vol-V,No-278,கி பி 1218,கீரனூர் )
'..பொங்கலூர் நாட்டு கீரனூரில் இருக்கும் ஐங்கை குடுமிச்சிகளில் சோழன் உமையால் அனுந்திர பல்லவ அரசி தருமம் '
(பல்லடம் செலகரிச்சல் ,கிபி 1280)
குடுமிச்சி-பெண்பால் பெயர்
குடுமி -ஆண்பால் பெயர்
கீரனூர் குடுமி வேட்டுவ குலத்தை பற்றி செப்பேடுகளும்,ஓலை சுவடிகளும் கூறுகிறது .இன்று குடுமி வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பிராட்டி அம்மன் ஆகும் .



'...காங்கேய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில் .....மனைகிழத்தி சோழாண்டி பட்டாலியில் ...'
(வேட்டுவ சோழர் ,கி பி 1215,காங்கேயம் ,1920:265).
காவலன் -வேட்டுவரில் ஒரு பிரிவு .
வளவர் -கூட்ட பெயர்
சோழ அரசர்களை சென்னி ,வளவர் ,செம்பியர் போன்ற பெயர்களில் அழைக்கபட்டன.



'நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்'
(சிலப்பதிகாரம்- காடுகாண் காதை)
கொடும்பாலூர் ஊரை 'கொடும்பை' என்று சிலப்பதிகரத்தில் கூறப்பட்டு உள்ளது .
கொடும்பை-குன்றம் ,மலை ,கொடும்பை -கொடும்பூர்
'..கொடும்பூர் வேட்டுவரில் பெரியதேவன்..' (கொங்கு சோழர் ,வீரராஜேந்திரன்,கி. பி 1244,பட்லூர் கல்வெட்டு )
'...ஊராளி மலை வேட்டுவரில் கோயன் இருங்கோளன் கரிய பெருமாளான வலங்கை மீகாமன்..' (நாமக்கல் கல்வெட்டு ,கி.பி 1236)
இந்த வேட்டுவர்கள் கொடும்பை (கொடும்பாளூர் ) பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்த வேட்டுவர்கள் ஆவர் . இருக்குவேளிரும் இந்த ஊராளிகளும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள்.
'...சிறுத்தலை வேட்டுவரில் தாமன் தமான இருங்கோளன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,கி பி 1162)

'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1216).

'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1229).

'...குண்டோடத்தில் குடுமரில் இருங்கோளன்..'
(தாராபுரம் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1159)
இவன் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .

'...ஊராளிகளில் பெருமாள் பெருமாளான வீரசோழ இருங்கோளன்..'
(கொங்கு சோழர் ,வீர ராஜந்திரன் ,கி பி 1218).

'...புல்லை வேட்டுவரில் கூத்தாடும் தேவன் இருங்கோளான வலங்கை மீகாமன்..'
(நாமக்கல் ஏலூர் கல்வெட்டு,கி பி 12 ).
'..ஊராளிமலை வேட்டுவரான கோயான் இருங்கோளன் கரியபெருமாளான வலங்கைமீகாமன்...'
(நாமக்கல் மலை கல்வெட்டு )

'...புல்லை வேட்டுவன் கூத்தாடும் தேவன் இருங்கோளன்..'
(நாமக்கல் ஏலூர் கல்வெட்டு,கி பி 12 ).
'....கரைவழி நாட்டு ஊராளி தென் குடுமரில் சிங்க தேவனான ராஜராஜ தேவன் ..'(திரு மருதுடையார் கோயில் கல்வெட்டு ) இவன் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .

'...கரை வழி நாட்டு தொழு முதலிகளில் சோழன் கூத்தனான வீர ராஜேந்திர இருங்கோளன்..'(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1224).
'..பொங்கலூர் நாட்டு கீரனூர் முதலிகளில் ..வீர ராஜேந்திர இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1226)
'...மன்றாடிகளில் காவன் சோரனான வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1221).
'... அதிய சோழன் வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1159).
முதலி -அரசு அதிகாரி .

.கொங்கு நாட்டில் கிடைக்கும் 'இருங்கோளன்' என்று உள்ள அணைத்து கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது .


இறந்த போர் வீரனுக்கு நடுகல் நடும் வழக்கம் வேட்டுவ குலத்தின் வழக்கம். கோப்பெருஞ் சோழனுக்கு நடுகல் நட்டு இருக்கிறார்கள் என்பதனை புறநானூறு 221,222,223 பாடல்கள் மூலம் அறியலாம் .
பாடல் எண் : 3அந் நகரத் தினில்இருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில் பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்.
பொழிப்புரை : அக்கொடும்பாளூர் நகரத்தில், இருக்குவேளிர் குலத்தில் தோன்றி ஆட்சி செய்து, நிலை பெற்ற பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில், பொன்னிலமாய கொங்கு நாட்டின் புகழ் பெற்ற தும், எடைமிக்கதும், தூயதுமான பசும் பொன்னினால் விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து, பொன்னணிகள் அணிந்த தோளை உடைய ஆதித்த சோழனின் புகழ் தங்கிய மரபின் குடி முதல்வராய்,
குறிப்புரை :பா கொங்கின் - பொன் மணல் பரவப் பெற்ற கொங்கு நாடு. பா - பரவப் பெற்ற. கொங்கு நாட்டின் மண்பகுதி பொன் மணல் துகள்கள் மிக்கு இருப்பது ஆதலின் `பாக் கொங்கின்\' என்றார். துலைப் பசும்பொன் - எடை மிக்க அழகிய பொன். இருக்கு வேளிர் குலத்தவர், பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்த ஆதித்த சோழரின் குடி முன்னோர் மரபில் தோன்றியவர் இடங்கழியார் என்பார்.
(இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம்)
இருக்கு வேளிர் குலத்தவரும்,சோழ அரசனும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் என்று இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம் பாடல்-3 கூறுகிறது .ஆதித்த சோழன் கொங்கு நாட்டை வென்றதை கல்வெட்டுகள் ,கொங்கு தேச ராசாக்கள் நூல் ,சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
ஆக இந்த தேவார பாடல்களில் சொல்ல பட்ட செய்திகளை யாராலும் மறுக்க முடியாது .
இருக்குவேளிர்கள் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொன் அமராவதி கல்வெட்டுகள் கூறுகிறது .
"கொங்கு நாட்டு அரசர்கள் சோழ நாட்டில் இருந்தும் ,பாண்டிய நாட்டில் இருந்தும் கேரளத்திற்கு எதிராக தங்களுக்கு உதவுவதற்கு வேட்டுவர்களை அழைத்து வந்தனர் என வழக்கு வரலாறு கூறுகிறது .ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர் ஆதித்திய வர்மன் கொங்கு நாட்டை வெற்றி கொள்ள உதவியவர்கள் இவ்வேட்டுவர்களே என வழக்கு வரலாறு கூறுகிறது" (தென்இந்திய குடிகளும் குலங்களும்-தொகுதி 7)
சோழ வேட்டுவ குலம்,புலி வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,வளவன் வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் சோழ அரசரோடு தொடர்புடைய வேட்டுவ குலங்கள் .

இப்படிக்கு
சோழ வேட்டுவர்

No comments:

Post a Comment