Tuesday 12 August 2014

சிலப்பதிகாரம்-வேட்டுவர் வரி

   https://www.facebook.com/தமிழர்-வரலாற்று-ஆய்வு-மையம்-449518038569336/

சேர அரசர் வில் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .சோழர் அரசர்   புலி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .பாண்டிய அரசர்  மீன் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .

                        வேட்டுவ குலத்தை சேர்ந்த முடிமன்னர்கள்

வேட்டுவ சாதினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் வேட்டு(குடி காவல் மற்றும் போர் தொழில் ) வினை செய்ததால் 'வேட்டுவர் ' என்ற சாதி உருவானது . கி பி 100,630,900,1100,1200 களில் படை தொழிலுக்கு வந்த சாதிகள் 'வேட்டுவர் இனம் ' கிடையாது .
வேடர் ( வேட்டையாடும் தொழில் செய்பவர்கள்) களில் பல வகைகள் (பிரிவுகள் ) இருந்தன .அந்த பிரிவுகளில் ஓன்றுதான் வேட்டுவர் இனம் ( முடி மன்னர் பரம்பரையினர்,தமிழ் மண்ணில் முதன் முதலில் படை தொழிலுக்கு வந்தவர்கள் ,தமிழ் மண்ணில் முதன் முதலில் அரச அமைப்பை உருவாக்கி ஆண்டவர்கள் ). வேட்டையாடும் தொழில்(வேடர் ) செய்த எல்லா பிரிவுகளும் 'வேட்டுவர் சாதி' கிடையாது .பொதுவாக வேட்டையாடும் தொழில் செய்தவர்களை வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவ இனத்தவரும் (முடி மன்னர் பரம்பரையினர்) வேட்டையாடுதலில் ஈடுபட்டதால் வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவர் சாதி ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் . வேட்டுவ இனத்தவர்கள் ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் என கூறி கொண்டதை தென்இந்திய குடிகளும் குலங்களும் தொகுதி -7 கூறுகிறது .
தமிழ் மண்ணில் முதன் முதலில் படைதொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் .

                     சங்க காலங்களில் ஆண்ட வேட்டுவ குறுநில தலைவர்கள்
வல்வில் ஓரி (கொல்லி மலை தலைவன் ),கண்டீர்க கோபெரு நள்ளி( தோட்டி மலை தலைவன் ,தோட்டி மலை கோவை ,மேட்டுபாளையம் அருகில் உள்ளது ), கடிய நெடு வேட்டுவன் ( கொடைகானல் மலை தலைவன் ),குமணன் (முதிர மலை தலைவன் ,முதிர மலை கோவை ,உடுமலை அருகில் உள்ளது ), பிட்டன் கொற்றன் ( குதிரை மலை தலைவன் ,குதிரை மலை சேலம் பகுதில் இருக்கிற மலை ), தகடூர் வேட்டுவ குல தலைவன் அதியமான் ,பழையன் ,பழையன் மாறன் ,கொடுமுடி ,பாண அல்லது வாண மன்னர்கள் (தமிழகத்தின் வட பகுதியை ஆண்டவர்கள் ), பண்ணன் ,ஆய் எய்னன்(பழனி மலை தலைவன் ),ஆய் ஆண்டிரன் (பொதிய மலை தலைவன் ), கொடும்பூர் வேட்டுவ குல தலைவன் இருங்கோவேள் போன்ற குறுநில தலைவர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் .
இடைகால மற்றும் பிற்காலங்களில் சேர ,சோழ ,பாண்டிய அரசர்களுக்கு கீழ் இருந்த வேட்டுவ குறுநில மன்னர்கள் .
பளுவேட்டரையர் ,இருக்குவேளிர்,கொல்லி மழவன் ,மாவலி வாணதிராயர்,வாணகோவரையர், கொங்கு பாண்டியர் ,கொங்கு சோழர் அள்ளால இளையன் போன்ற குறுநில மன்னர்கள் வேட்டுவர் குலத்தை சேர்ந்தவர்கள் .


                               வேட்டுவ குல மன்னர்களின் வம்சாவளினர்

கல்வெட்டுகள் ,செப்பேடுகள்,ஓலை சுவடிகள்,சங்க இலக்கியங்கள் மூலம் இதை நிறுபிவிக்க முடியும் .

கொங்கு சோழர்களின்(இருக்குவேள் ) மற்றும் சோழ அரசர் வம்சாவளினர் பட்டாலி வேட்டுவ குலத்தினர் ,வேந்த வேட்டுவ குலத்தினர், புலி வேட்டுவ குலத்தினர்,குடுமி வேட்டுவ குலத்தினர்,காட்டு வேட்டுவ குலத்தினர் ,மலை வேட்டுவ குலத்தினர் ,ஊராளி வேட்டுவ குலத்தினர்  ஆவார்கள் .(கொங்கு சோழர்கள் காங்கேயம் நாட்டை தலைமை இடமாக கொண்டு கொங்கு நாட்டை ஆண்டார்கள் )
கொங்கு பாண்டியர்களின் வம்சாவளினர் பாண்டிய வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
சேர அரசர்களின் வம்சாவளினர் வில் வேட்டுவ குலத்தினர்,மாந்த வேட்டுவ குலத்தினர்,அந்துவ வேட்டுவ குலத்தினர்,மலைய வேட்டுவ குலத்தினர்,வஞ்சி (சேர ) வேட்டுவ குலத்தினர்ஆவார்கள் .
அதியமான் மன்னரின் வம்சாவளினர் வஞ்சி வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.
வீரகேரளர்(சேரர் ) மன்னர்களின் வம்சாவளினர் பூலுவ வேட்டுவர்கள் ஆவார்கள்.
பழுவேட்ட அரையர் மன்னர்களின் வம்சாவளினர் பனைய வேட்டுவ குலத்தினர்,யானை வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
மாவலி வாணதிரயர்கள் மற்றும் வாணகோவரையர்கள் வம்சாவளினர் மாவலன் வேட்டுவ குலத்தினர்,லங்க வேட்டுவ குலத்தினர்,நிலவாளை வேட்டுவ குலத்தினர்,புன்னம் வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
கொல்லி மழவனின் வம்சாவளினர் புல்லை வேட்டுவ குலத்தினர்,கொல்லி வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.
அல்லால இளையன் மன்னர்களின் வம்சாவளினர் மூல(முளை) வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.

வேட்டுவ மன்னர்களின் நிலை படைகளில் இருந்த வேட்டுவ குலங்கள்
சாந்தபடை வேட்டுவ குலத்தினர்
கரி (யானை ) படை வேட்டுவ குலத்தினர்
பரி (குதிரை ) படை வேட்டுவ குலத்தினர்
உரிமை படை வேட்டுவ குலத்தினர்
ஆவார்கள்.
தமிழ் மண்ணில் வேட்டுவ குலத்தில் 5 பெரும் பிரிவுகள் இருந்தன .இந்த 5 பெரும் பிரிவுகள் இன்று
மாவலியர் -வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர்
வில்வேடுவர் ,வேட்டுவர் - வேட்டுவ கவுண்டர்
காவலன் -வேட்டுவ கவுண்டர்,புன்னம் வேட்டுவ கவுண்டர்,பூலுவ வேட்டுவ கவுண்டர்
பூவலியர்-பூலுவ வேட்டுவ கவுண்டர்,வேட்டுவ கவுண்டர்
வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர்,பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் ஆவார்கள்.

வேட்டுவ சாதியை 5 பெயர்களில் அழைக்கபட்டது
கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலைசுவடிகளில் வேட்டுவர்களின் சொல்லாட்சிகள் .
1.காவலியர்,பூவலியர்,மாவலியர்,வேடர் ,வேட்டுவர்
2.காவலன் ,பூவலன் ,மாவலன் ,வேடர் ,வேட்டுவர்
3.காவுலவன் ,பூவுலவன் ,மாவுலவன்,வில்வேடுவர்,வேட்டுவர்
4.காவளவர்,பூவளவர்,மாவளவர், வில்வேடுவர்,வேட்டுவர்
5.காவிலன் ,பூவிலன் ,மாவிலன் ,வில்வேடுவர்,வேட்டுவர்



சிலப்பதிகாரம் கி பி 5ஆம் நூற்றாண்டின் இறுதிலும்,கி பி 6 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இலக்கியம் என்று   கார்த்திகேசு சிவத்தம்பி என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.     


சிலப்பதிகாரம் வேட்டுவர் வரி வேட்டுவர்களின் வாழ்கை முறையும் ,போர் நெறியையும் ,வீரபண்பையும் ,வேட்டுவர்களின் போர் தெய்வமான கொற்றவையை வழிபடும் பாங்கையும் அற்புதமாக விவரிக்கிறது.

சிலம்பு வேட்டுவர் வரி வேட்டுவர் குலத்தவரை மறவர்,எயினர்,கொங்கர்,கானவர்,தொல்குடி,வேடர் என அழைக்க படுகிறது.

சிலப்பதிகாரம் வேட்டுவர் வரியில் மறம்,மறவர் சொற்கள் வீரம்,கொலை தொழில் செய்பவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டு உள்ளது.இங்கு மறவர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.

அம்பு எய்யும் பாலை நில வேட்டுவரை எயினர் என அழைக்க பட்டது . எயினர் என்பது இன பெயர் கிடையாது.

'விற்றொழில் வேடர் குலனே குலனும் '(சிலம்பு 12.4.4)
'எய்வில்  எயினர்  குலனே குலனும் '(சிலம்பு 12.5.4)
இங்கு வேட்டுவர் குலத்தவரை எயினர் என சிலம்பு கூறுகிறது .

சிலப்பதிகாரம் வேட்டுவர் வரி வேட்டுவர் குல பெண்ணை 'கொங்க செல்வி ' என கூறுகிறது.(கல்வெட்டுகள் ,பட்டயங்கள் வேட்டுவர் குலத்தவரை கொங்கர் என்று கூறுகிறது.)

வேட்டுவர்கள் கொங்கு நாட்டின் பூர்விக குடிமக்கள்.கொற்றவை கூத்து கொங்கு நாட்டில் நடந்தது.

வேட்டுவர் தொழில் -போர் தொழில் .
வேடுவர் அல்லது வேடர் அல்லது வேட்டவர் தொழில் -வேட்டையாடுதல் .

வேட்டுவர் குலத்தவர்கள் போர் தொழிலோடு ,வேட்டையாடுதலை செய்தனர். இதனால் வேடர் என அழைக்க பட்டது.