Wednesday 23 July 2014

கூட்ட சின்னவியல்

            https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/                            

                                                         கூட்ட சின்னவியல்

பாண்டிய ராசாவின் கிளை சுற்றத்தினரை பாண்டி வேட்டுவ குலம் என்றழைக்க பட்டனர் .சோழ ராசாவின் கிளை சுற்றத்தினரை செம்ப(செம்பியன் ) வேட்டுவ குலம் என்றழைக்க பட்டனர் .சேர ராசாவின் கிளை சுற்றத்தினரை வில் வேட்டுவ குலம் என்றழைக்க பட்டனர் .பாண ராசாவின் கிளை சுற்றத்தினரை மாவலி வேட்டுவ குலம் என்றழைக்க பட்டனர் .இருக்கு வேளின் கிளை சுற்றத்தினரை குடுமி வேட்டுவ குலத்தினர் என்றழைக்க பட்டனர் .கொல்லி மழவனின் கிளை சுற்றத்தினரை புல்லை வேட்டுவ குலம் என்று அழைக்க பட்டனர் .இதன் அடிப்படையில் வேட்டுவர் சாதிக்கு பல குலங்கள் உருவானது .

இன குழுவுக்குள் சகோதர உறவுடைய ஒரே கூட்டத்தை சார்ந்தவர்கள் தம் கூட்டத்தை சார்ந்த பெண்ணை தம் சகோதரியாக கருதி மண உறவு கொள்வதை தவிர்த்து ,புற கூட்டத்தில் இருந்து பெண் கொண்டனர் .இதுவே புறமண முறையாகும்.அந்நியரான பிற இன குழுக்களோடு மண உறவு கொள்வதை தவிர்த்து தம்இன குழுவிற்கு உள்ளாகவே மண உறவு கொண்டனர் .இதுவே அகமண முறையாகும்.

காடை வேட்டுவ குலம் பிளவு பட்டு சிவகாடை வேட்டுவ குலம்,குறுங்காடை வேட்டுவ குலம் ,சாகாடை வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.

அண்ட வேட்டுவ குலம் பிளவு பட்டு அண்டவாணி வேட்டுவ குலம் ,கரு அண்ட வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலங்கள் தோன்றிஇருக்கிறது.

கீர வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து கீரந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது.
பூச்சன் வேட்டுவ குலமும் ,ஆந்தை வேட்டுவ குலமும் இணைந்து பூச்சந்தை வேட்டுவ குலம் தோன்றி இருக்கிறது .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது.
பண்ண வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பண்ணை அம்மன் (ஏலூர்,நாமக்கல் ) ஆகும் .இன்று பண்ண வேட்டுவ குலத்தினர் ,கரடி வேட்டுவ குலத்தோடு இணைந்து விட்டார்கள் .
இது போல பல வேட்டுவ குலங்கள் இருக்கிறது .

வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
உதாரணம்
'....குறுந் காடை வேட்டுவரில் சின்னன் ..., (ஈரோடு,உஞ்சலுர் கல்வெட்டு ). '...கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சா காட சிற்றன்...'
(செங்கம் நடுகற்கள் 1971/73) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள்.
' சேர குல வெள்ளாளர்கள் பிள்ளையென்ற பட்டங்கொண்டவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தலைமையானவர்கள் கவுண்டன் என்னும் பெயர் புனைவது வழக்கமாம் .இப்பொழுதும் கவுண்டன் பிராமணபிள்ளை என்பது போல் வழக்கம் '
(கொங்கு நாடு அடைவு இயல் -தி அ முத்துசாமி கோனார் ) .
'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3).
பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகல் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் உள்ள,
“அதலையூர் நாட்டு நாடாள்வான் கூலிச் சேவகன் திருவழுதிநாட்டு ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்”
என்கிற வாசகம் ஒரு வேளாளரைக் கூலிச் சேவகனாகக் காட்டுகிறது. மேலும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளடிமைகளில் சூடியார் எனக் குறிப்பிடுவதன் மூலம் வெள்ளாளரில் அடிமைகள் இருந்ததைத் தெளிவாக்குகிறது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்
“பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழ
ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில்
ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்”
என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக் கல்வெட்டு தெரிவிக்கிறது.


வேட்டுவ குலத்தவர்களும் (வேட்டுவ கௌண்டர் ,பூலுவ கௌண்டர் ,புன்னம் வேட்டுவ கௌண்டர் ),வெள்ளாள குலத்தவர்களும் (வெள்ளாள கௌண்டர் ) ஒரே சாதி கிடையாது .

முதலாம் பராந்தகன் காலத்தில் கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்து கொங்கு நாட்டுக்கு அழைத்து வர பட்டவர்தாம் வெள்ளாளர்கள்.

முதலாம் பராந்தகன் காலத்துக்கு முன்பு வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் இருந்தார்கள் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை .முதலாம் பராந்தகன் காலத்துக்கு முன்பு கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்தவர்கள் ஆயர்கள் (கோனார் ,இடையர் ).
  .பெருமாள் வேட்டுவ குலம்,குமரன் வேட்டுவ குலம் ,சுப்பரமணி வேட்டுவ குலம் ,முட்டை வேட்டுவ குலம் ,மாகாளி வேட்டுவ குலம் ,மோக்காளி வேட்டுவ குலம் ,முட காளி வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலத்தவர்கள் கடவுள் பெயரை தமது கூட்டத்திற்கு வைத்து கொண்டன .

 குடுமி(குடும அல்லது தென்குடும) வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளர் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  


கரைய -காவேரி ஆறு கரை பெயர் .இந்த காவேரி ஆறு கரை பெயரை கூட்ட பெயராக கொண்டவர்கள் கரைய வேட்டுவ குலம்.இந்த கரைய வேட்டுவ குலம் மேலை கரைய வேட்டுவ குலம் மற்றும் கீழை வேட்டுவ குலம் என்று பிரிந்து இருந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் . கரைய வேட்டுவ குலத்துக்கும் ,மீன் பிடிக்கும் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
வன்னி வேட்டுவ குலத்துக்கும் ,பள்ளி (வன்னியர் ) க்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
கள்ளை(கள்ள)-கள் என்று பொருள் .கள்ளை என்ற பெயரை கூட்ட பெயராக வைத்து கொண்டவர்கள் கள்ளை வேட்டுவ குலம் . கள்ளை வேட்டுவ குலமும் ,கள்ளர் சாதியையும் ஒரே சாதி கிடையாது .
உடையார் இனத்தில் 'மலையன் ' என்ற பெயரில் கல்வெட்டு இருக்கிறது . இது போல வேட்டுவ இனத்தில் 'மலைய வேட்டுவ குலம் 'இருப்பதை கல்வெட்டு (1968:226) கூறுகிறது . உடையார் இனமும் ,வேட்டுவ இனமும் ஒரே சாதி கிடையாது .

வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .
வேட்டுவர் சாதி படை தொழில் செய்தார்கள் என்பதையும் நற்றிணை 276 வது பாடல் மூலம் அறியலாம் .
வேட்டு ( குடிகாவல் மற்றும் போர் தொழில் )
வேட்டு -வேட்டுவர்
வயவர் - போர் வீரர்

276. குறிஞ்சி
''கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்'' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
குறவர் மகளிரை ,வேட்டுவ போர் வீரரின் மகளிர் என கூறினால் குறவர் மகளிரும் கொடிச்சி ( வேட்டுவச்சி ,தலைவி ) ஆவாள் என்பதுதான் இந்த பாடலின் விளக்க உரை .ஆக வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .

No comments:

Post a Comment