Friday 16 February 2018

வேட்டுவ குடிக்கும் (வேட்டுவ கவுண்டர் ),பள்ளி குடிக்கும் (வன்னியர் ) எந்த தொடர்பும் கிடையாது .

வேட்டுவ குடிக்கும் ,பள்ளி குடிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் உறுதிப்படுத்துகிறது .

பள்ளி இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :

'..காடந்தைகள் சேவகன் புதுபள்ளிகளோடு பொருதளன்று பட்டா நெருமெதிகாரி'
(மகேந்திரவர்மன் 5 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 605,தருமபுரி)

'..தகடூர் நாட்டு கங்க நாட்டு புல்லமங்கலத்து பாண்டிகாமுண்டர் பள்ளியில் கேலியர் மாச்சகாமுண்டன் மகன் விச்சிகாமுண்டன் வேட்டையில் பன்றி குத்திபட்டான் அவர் ..'
(ராஜேந்திர சோழன் 2,கி பி 1067,பன்றி குத்திபட்டான் கோவில், தருமபுரி )

'.. கங்க நாட்டு தகடூர் நாட்டு புல்ல மங்கலத்தில் பாண்டிகாமுண்டர் பள்ளியில் இருக்கும் வெள்ளாளன் நொலுபுலன் பாலகாமுண்டன் மகன் புளியனஞ்ய வீரோ...புளிசயகுச்சியில் பொருதுபட்டான்'
(ராஜேந்திர சோழன் 2,கி பி 1052,பன்றி குத்திபட்டான் கோவில், தருமபுரி )

'..குறுக்கையில் காணியுடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் ..'
(1913:35,கி பி 13,செஞ்சி வட்டம் )

'..ஆமூரில் இருக்கும் பள்ளி ஆம்மூரி பிச்சநாத ராஜேந்திர சோழ நீலகங்கயரையன்.'
(1918:159,கி பி 12,)

'..பனைகுளத்து பள்ளியில் பள்ளிகாரன் புளியகாமுண்டன் மகன் வசவகாமுண்டர் மகன் நாடம..'
(ராசாதிராசா சோழனின் 27 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 1045,தருமபுரி )

'..வில்வீர பராகிரமனான ருத்திர பள்ளியார் குமாரராகிய நீலகங்கன் .'
(பன்னட்டார் பட்டயம் ,கி பி 1633)

'... குடிபற்று ஆயத்துக்கு கடவ நீர்பழனி உடையான் மொண்ணை பள்ளி விசையாலைய விழுபரையனும் படைபற்று ஆயத்துக்கு கடவாரும் ..'
(PSI-583,குளத்தூர் தாலுகா ,குலசேகரனின் 33 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 1301)

'..மேற்படியூர் பள்ளி பொன்னான தன்மராஜன் எழுத்து..'
(PSI-158,குளத்தூர் தாலுகா ,குலோத்துங்க சோழனின் 17 ஆவது ஆட்சி ஆண்டு ,கி பி 12).



'பள்ளிகள்' சோழர் காலத்தில் படை வீரர்களாக பழக்கபட்டார்கள் (Noboru Karashima,south indian history and society,p.30) பின்னாளில் நாட்டுகாவல் வீரர்களாக நிறுத்தபட்டார்கள் .இவர்கள் மறவர் குடியாகையால் படைக்கு கொண்டு வர பட்டனர் எனலாம் .பல்லவர் காலத்தில் மாட்டு மந்தைகளை பாதுகாக்கும் மறவர்களாக விளங்கினர்.

பங்களர்,பள்ளி போன்ற பழங்குடிகள் சங்க இலக்கியங்களில் பேச படாதவர்கள்.காவிய காலம் முதல் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் மிகுதியாக பேசபடுகின்றன.' (தொல்குடி-வேளிர்-அரசியல்)


ராஜா வாய்க்காலை வெட்டுவதற்காக தொழிலாளர்கள் ,வேறு பகுதியில் இருந்து குடி பெயர்ந்து நஞ்சை இடையாற்றில் குடியேறிய வன்னிய சமுதாயத்தினர் ஆவார்கள் என சேலம் களஞ்சியம் (பக்கம் -93) குறிபிடுகிறது.



பள்ளிகள் என்போர் யார்? பூர்வீகம் குறித்த சர்ச்சை பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால்,பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.
பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்குஇடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து’ என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து’ துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186) ‘நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான்’ என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.
சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.
மலைபடுகடாம் செய்யுள்(451) ‘மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும்’ என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.
சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:
".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி னீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு கருப்பை யாடா 85
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி ஈன்பிண வொழியப் போகி நோன்கா 90
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவி 95...."
விளக்கம்: 83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை
கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.
எயிற்றியர் செயல்
89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி
கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.
இந்தப் பாடலிலும் பள்ளி என்றால் படுக்கை என்ற அர்த்தப்படுகிறது. வேறு எந்தப் பாடலிலும் பள்ளி என்ற இனத்தைக் குறிக்கக் கூடிய சொல் கிடையாது. அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற இனம் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது.
ஆனால், இடைக்காலத்தில் கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றிய செய்திகள் உள்ளன.

 சோழர்கள் ,வல் வில் ஓரி  மற்றும் பல  மன்னர்களை பள்ளி குடியினர் (வன்னியர் ) தங்களுடைய சாதியை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று பொய் பரப்புரைகளை பரப்பி வருகிறார்கள் .


அரியலூர் பாளைக்காரர் ஒரு தெலுங்கு பாளையக்காரர் ஆவர்.

ஆனைகுந்தி சமஸ்தானத்தில் (ஆந்திர மாநிலத்தில் விஜயநகர் சமஸ்தானத்தில் இருந்த பகுதி ) இருந்த ஒரு பகுதியை ராம நயினார் மற்றும் பூமி நயினார்  ஆகியோர் ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களை நாகம நாயக்கருக்கு(கிபி-16)   உதவிக்கு செல்லும் படி விஜயநகர அரசர் ஆனையிட்டார்.இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அரியலூர் பகுதிக்கு பாளையக்கார்களாக இருந்தார்கள். விஜயநகர அரசர் ராம நயினார்க்கு "ராம ஒப்பில்லா மழவராயர்" என்ற பட்டத்தை கொடுத்தார் .பிறகு இவருடைய வம்சாவளியினர்  மழவராயர் என்ற பட்ட பெயரை வைத்து கொண்டார்கள் .இவருடைய வம்சாவளியினர்பற்றி அரியலூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள்(கிபி 1573-1843)  கூறுகிறது .அரியலூர் பாளைக்காரர் ஒரு தெலுங்கு பாளையக்காரர் ஆவர்.

பிச்சாவரம் ஜமீன்  பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் பரம்பரையினர் என்று கூற முடியாது..

// 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்களின்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

1. களப்பிர அரசன் (காலம் கி.பி 400- கி.பி 500) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 400 - கி.பி 500) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள  இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை . சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.

4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்.
கோயில் வரலாறு:

கி.பி.14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் மண்ணில் முஸ்லீம்களின் ஆட்சி நடந்த போது  கி.பி. 1310 முதல் கி.பி. 1376 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

கி.பி.1610 ஆம் ஆண்டு லிங்கமநாயக்கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் மேற்கொண்டார்.

கி.பி. 1648 வரை துறையூர்ப் பாளையக்காரர் ரெட்டியார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

மராட்டியர் ஆட்சியின் போது  தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையிலிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலிலிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரிவாகக் கூறப்படுகிறது.

21.1.1711 - வேளூர் அம்பலவாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.