Wednesday 23 July 2014

மழவர்



'வன்கண் மழவர் பூந்தொடை விழவின் ' என்று அகநானூறு -187 கூறுகிறது .
தொடை -அம்பு ,விழவு-விழா
'பயற்சி பெற்று முதிர்ச்சி அடைந்த வேட்டுவர் பூந்தொடை விழவு என்னும் இன குழுவிற்கே உரித்தான அறிமுக விழா சடங்கு வாயிலாக அறிந்தேர்பு பெற்றன ' (1981-Drama in Ancient Tamil Society:N.C.H.B ,Sivathamby k)கார்த்திகேசு சிவதம்பி மழவரை வேட்டுவ குலத்தவர் என்று கூறுகிறார் .'மழவர் பெருமகன் மாவள் ஓரி ' என்று நற்றிணை -52 கூறுகிறது.





கொங்கு வேட்டுவனுக்கு பிறந்தவன்தான் கொங்கு வேட்டுவ வரலாற்றை சொந்தம் கொண்டாட முடியும் .

வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,

………யாம்

நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்

வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
...
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கொங்குப் பகுதியிலும் பரவலாக வாழும் வேட்டுவர் சாதியினர் வல்வில் ஓரியைத் தங்களுடையவனாகக் கொண்டாட எல்லா வகையிலும் உரிமை இருக்கிறது என்பதில் ஐயமில்லை.


மழ கொங்கை ஆண்ட வேட்டுவ மன்னன் ,அல்லள இளையன்( அல்லள இளையன் நாயக்கர் ) இக்கு 'நாயக்கர்' என்ற பட்ட பெயர் இருப்பதை கல்வெட்டுகள் கூறுகிறது . ' நாயக்கர் ' என்ற பட்ட பெயரை வேட்டுவ குலத்தவர்கள் வைத்து கொண்டு நாயக்கர் மன்னர் திருமலைநாயக்கர் யை உரிமை கொண்டாட முடியாது . வேட்டுவ சாதியும் ,நாயக்கர் சாதியும் ஒரே சாதி கிடையாது .

இது போல வேட்டுவ குலத்தில் ஒருவருக்கு 'செய்யான் பல்லவராயர்' என்ற பட்ட பெயர் இருப்பதை கல்வெட்டுகள் கூறுகிறது .இந்த பட்ட பேரை வைத்து கொண்டு வேட்டுவ குலத்தார் ,பல்லவ அரசனை உரிமை கொண்டாட முடியாது .
இது போல மன்னர்கள் தங்களுடைய அரசு அதிகாரிக்கும் ,படைதலைவருக்கும் வாணராயர் ,மழவராயர்,இருங்கோளன் போன்ற பட்ட பெயர்களை வழங்கினார்கள் .இந்த பட்ட பெயரை வைத்து கொண்டு தாங்கள் தான் மன்னர் பரம்பரை என கூற முடியாது .

உதாரணம் :

'.... பள்ளி செங்கேணி சாத்தன் சோழ நான சேனாபதிகள் வாண ராஜர் ' என கல்வெட்டு(ARE 138 of 1896, குலோத்துங்கன் 1) கூறுகிறது .
  'சுரதிமான் சனாதர் அரைய தேவனான வாண வித்சாதிர நாடாள்வான்'
(பெரம்பலூர் கல்வெட்டு ,கி பி 12)-இவன் உடையார் இனத்தை சேர்ந்தவன் .

  புதுகோட்டை மாவட்டம் ,கொத்தமங்கலம் செப்பேடு 'கார்காத்த வெள்ளாள வாணதிராயர் , என்பவரை பற்றி கூறுகிறது . வாணராயர் என்ற பட்ட பெயர் வெள்ளாள கௌண்டெரில் ஒருவருக்கு இருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

மெக்கென்சி சேகரித்து உள்ள குறிப்புகளில் 'அரியலூர் பாளையகாரர் கைபியது ' என்னும் தலைப்பில் சென்னை அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகத்தில் காணப்பெறுகிறது . இக் கைபியது 'மாளவராயர் அரியலூர் பாளையகாரர் ,சமஸ்தானம் மதுரை ,திருச்சிராப்பள்ளி வகையறா ' என்று தொடங்கபெற்று இருக்கிறது . மேலும் விஜயநகர் வேந்தர் (கி பி 1378-1533) ,அரியலூர் பாளையகாரருக்கு 'மழவராயர் ' என்ற பட்ட பெயரை கொடுத்தார் என்ற செய்தியும் கூறபட்டு உள்ளது . விஜயநகர் வேந்தர் காலம் மற்றும் மதுரை நாயக்கர் காலங்களில் (கி பி 16,17) அரியலூர் பாளையக்காரர் 'மழவராயர் 'என்ற பட்ட பெயரோடு அரியலூர் பகுதியை ஆட்சி செய்தார் என்பதை இந்த கைபியது மூலம் அறியலாம் .

'... பாண்டிய மழவரையர் சேதிராயன் இடத்து ..'
(அழகர் கோயில் கல்வெட்டு ,கி பி 1459).

கொல்லன் வயல் செப்பேடு (திரு வாவடுதுறை ஆதினம் செப்பேடு ) கி பி 1439 இல் வெளியிட பட்டது .இச் செபெடில் 'அரசு சிவந்த பெருமாளான தேவராயர் மழவராயர் 'என்பவரை பற்றி கூறபெற்று உள்ளது .

 பராக்கிரம பாண்டிய மழவராயர் நல்லூர் செப்பேடு (திரு வாவடுதுறை ஆதினம் செப்பேடு ) கி பி 1505 இல் வெளியிட பட்டது . ' பராக்கிரம பாண்டிய மழவராயர் ' என்பவரை பற்றி இச்செப்பேடில் கூற பட்டு உள்ளது .

மழவராயர்,வாணராயர் போன்ற வார்த்தைகள் பட்ட பெயராக பயன்படுத்தி இருப்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.இந்த பட்ட பெயர்களை வைத்து கொண்டு தாங்கள் தான் மன்னர் பரம்பரை என உரிமை கொண்டாட முடியாது.




 
 

No comments:

Post a Comment