Wednesday 23 July 2014

மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள்

  https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/

காவலியர்,மாவலியர்,பூவலியர்,வெட்டுவர்,வில் வேடுவர் இந்த 5 பிரிவுகளை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் மற்றும் ஓலை சுவடிகள் கூறுகிறது .
'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .

'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணா' என்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.

'நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,

(மணிமேகலை 19. 51 - 116).

'மூத்தஅரைசர்,இளவரைசர் என்ற இரு துணை பெயர்கள் வருகின்றது .இவற்றில் மூத்தஅரைசர் என்பது மூத்த அரையர் பரம்பரை யை குறித்து வந்தது என்று கருதபடுகிறது .உண்மையில் இந்த சொல் ஒரு குலத்திலே மூத்த (senior lineage) குலம் என்பதை குறித்து வந்தது .பெரும்பாண மூத்தஅரைசர் , பெரும்பாண இளவரைசர் என்று கூறுவதில் இருந்து இது உறுதி படுகிறது .தற்கால முத்தரையர் என்ற குலத்துக்கும் பெரும்பாண முத்தரைசர் கும் தொடர்பேதும் இல்லை .மேலும் வாணா கொவரையர் பரம்பரை இல் வாணகோ மூத்தஅரைசர் என்றும் வாணகோ இளவரைசர் என்றும் கூறப்படும் இரு பிரிவுகள் இதனை வலி உறுத்துகிறது . இளவரைசர் என்பது ஒரே குலத்தின் இளைய பிரிவினை (Junior lineage) குறித்து வந்தது எனலாம்' (தொல்குடி -வேளிர்-அரசியல் (செங்கம் நடுகற்கள் ) ).

'...வீர சேனாதிபதி பருவான வேட்டுவ இளவரைசர் சேனை எரிந்து பட்டார் கல் '( தருமபுரி ,அரூர் கல்வெட்டு .கி பி 8).

மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள் .

No comments:

Post a Comment