Tuesday 12 August 2014

சிலப்பதிகாரம்-வேட்டுவர் வரி

   https://www.facebook.com/தமிழர்-வரலாற்று-ஆய்வு-மையம்-449518038569336/

சேர அரசர் வில் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .சோழர் அரசர்   புலி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .பாண்டிய அரசர்  மீன் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் .

                        வேட்டுவ குலத்தை சேர்ந்த முடிமன்னர்கள்

வேட்டுவ சாதினர் தமிழ் மண்ணில் முதன் முதலில் வேட்டு(குடி காவல் மற்றும் போர் தொழில் ) வினை செய்ததால் 'வேட்டுவர் ' என்ற சாதி உருவானது . கி பி 100,630,900,1100,1200 களில் படை தொழிலுக்கு வந்த சாதிகள் 'வேட்டுவர் இனம் ' கிடையாது .
வேடர் ( வேட்டையாடும் தொழில் செய்பவர்கள்) களில் பல வகைகள் (பிரிவுகள் ) இருந்தன .அந்த பிரிவுகளில் ஓன்றுதான் வேட்டுவர் இனம் ( முடி மன்னர் பரம்பரையினர்,தமிழ் மண்ணில் முதன் முதலில் படை தொழிலுக்கு வந்தவர்கள் ,தமிழ் மண்ணில் முதன் முதலில் அரச அமைப்பை உருவாக்கி ஆண்டவர்கள் ). வேட்டையாடும் தொழில்(வேடர் ) செய்த எல்லா பிரிவுகளும் 'வேட்டுவர் சாதி' கிடையாது .பொதுவாக வேட்டையாடும் தொழில் செய்தவர்களை வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவ இனத்தவரும் (முடி மன்னர் பரம்பரையினர்) வேட்டையாடுதலில் ஈடுபட்டதால் வேடர் அல்லது வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேட்டையாடுவோர் என அழைக்கபட்டன. வேட்டுவர் சாதி ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் . வேட்டுவ இனத்தவர்கள் ,வேடர் சாதியை விட உயர்ந்தவர்கள் என கூறி கொண்டதை தென்இந்திய குடிகளும் குலங்களும் தொகுதி -7 கூறுகிறது .
தமிழ் மண்ணில் முதன் முதலில் படைதொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் .

                     சங்க காலங்களில் ஆண்ட வேட்டுவ குறுநில தலைவர்கள்
வல்வில் ஓரி (கொல்லி மலை தலைவன் ),கண்டீர்க கோபெரு நள்ளி( தோட்டி மலை தலைவன் ,தோட்டி மலை கோவை ,மேட்டுபாளையம் அருகில் உள்ளது ), கடிய நெடு வேட்டுவன் ( கொடைகானல் மலை தலைவன் ),குமணன் (முதிர மலை தலைவன் ,முதிர மலை கோவை ,உடுமலை அருகில் உள்ளது ), பிட்டன் கொற்றன் ( குதிரை மலை தலைவன் ,குதிரை மலை சேலம் பகுதில் இருக்கிற மலை ), தகடூர் வேட்டுவ குல தலைவன் அதியமான் ,பழையன் ,பழையன் மாறன் ,கொடுமுடி ,பாண அல்லது வாண மன்னர்கள் (தமிழகத்தின் வட பகுதியை ஆண்டவர்கள் ), பண்ணன் ,ஆய் எய்னன்(பழனி மலை தலைவன் ),ஆய் ஆண்டிரன் (பொதிய மலை தலைவன் ), கொடும்பூர் வேட்டுவ குல தலைவன் இருங்கோவேள் போன்ற குறுநில தலைவர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் .
இடைகால மற்றும் பிற்காலங்களில் சேர ,சோழ ,பாண்டிய அரசர்களுக்கு கீழ் இருந்த வேட்டுவ குறுநில மன்னர்கள் .
பளுவேட்டரையர் ,இருக்குவேளிர்,கொல்லி மழவன் ,மாவலி வாணதிராயர்,வாணகோவரையர், கொங்கு பாண்டியர் ,கொங்கு சோழர் அள்ளால இளையன் போன்ற குறுநில மன்னர்கள் வேட்டுவர் குலத்தை சேர்ந்தவர்கள் .


                               வேட்டுவ குல மன்னர்களின் வம்சாவளினர்

கல்வெட்டுகள் ,செப்பேடுகள்,ஓலை சுவடிகள்,சங்க இலக்கியங்கள் மூலம் இதை நிறுபிவிக்க முடியும் .

கொங்கு சோழர்களின்(இருக்குவேள் ) மற்றும் சோழ அரசர் வம்சாவளினர் பட்டாலி வேட்டுவ குலத்தினர் ,வேந்த வேட்டுவ குலத்தினர், புலி வேட்டுவ குலத்தினர்,குடுமி வேட்டுவ குலத்தினர்,காட்டு வேட்டுவ குலத்தினர் ,மலை வேட்டுவ குலத்தினர் ,ஊராளி வேட்டுவ குலத்தினர்  ஆவார்கள் .(கொங்கு சோழர்கள் காங்கேயம் நாட்டை தலைமை இடமாக கொண்டு கொங்கு நாட்டை ஆண்டார்கள் )
கொங்கு பாண்டியர்களின் வம்சாவளினர் பாண்டிய வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
சேர அரசர்களின் வம்சாவளினர் வில் வேட்டுவ குலத்தினர்,மாந்த வேட்டுவ குலத்தினர்,அந்துவ வேட்டுவ குலத்தினர்,மலைய வேட்டுவ குலத்தினர்,வஞ்சி (சேர ) வேட்டுவ குலத்தினர்ஆவார்கள் .
அதியமான் மன்னரின் வம்சாவளினர் வஞ்சி வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.
வீரகேரளர்(சேரர் ) மன்னர்களின் வம்சாவளினர் பூலுவ வேட்டுவர்கள் ஆவார்கள்.
பழுவேட்ட அரையர் மன்னர்களின் வம்சாவளினர் பனைய வேட்டுவ குலத்தினர்,யானை வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
மாவலி வாணதிரயர்கள் மற்றும் வாணகோவரையர்கள் வம்சாவளினர் மாவலன் வேட்டுவ குலத்தினர்,லங்க வேட்டுவ குலத்தினர்,நிலவாளை வேட்டுவ குலத்தினர்,புன்னம் வேட்டுவ குலத்தினர் ஆவார்கள்.
கொல்லி மழவனின் வம்சாவளினர் புல்லை வேட்டுவ குலத்தினர்,கொல்லி வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.
அல்லால இளையன் மன்னர்களின் வம்சாவளினர் மூல(முளை) வேட்டுவ குலத்தினர்ஆவார்கள்.

வேட்டுவ மன்னர்களின் நிலை படைகளில் இருந்த வேட்டுவ குலங்கள்
சாந்தபடை வேட்டுவ குலத்தினர்
கரி (யானை ) படை வேட்டுவ குலத்தினர்
பரி (குதிரை ) படை வேட்டுவ குலத்தினர்
உரிமை படை வேட்டுவ குலத்தினர்
ஆவார்கள்.
தமிழ் மண்ணில் வேட்டுவ குலத்தில் 5 பெரும் பிரிவுகள் இருந்தன .இந்த 5 பெரும் பிரிவுகள் இன்று
மாவலியர் -வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர்
வில்வேடுவர் ,வேட்டுவர் - வேட்டுவ கவுண்டர்
காவலன் -வேட்டுவ கவுண்டர்,புன்னம் வேட்டுவ கவுண்டர்,பூலுவ வேட்டுவ கவுண்டர்
பூவலியர்-பூலுவ வேட்டுவ கவுண்டர்,வேட்டுவ கவுண்டர்
வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர்,பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் ஆவார்கள்.

வேட்டுவ சாதியை 5 பெயர்களில் அழைக்கபட்டது
கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலைசுவடிகளில் வேட்டுவர்களின் சொல்லாட்சிகள் .
1.காவலியர்,பூவலியர்,மாவலியர்,வேடர் ,வேட்டுவர்
2.காவலன் ,பூவலன் ,மாவலன் ,வேடர் ,வேட்டுவர்
3.காவுலவன் ,பூவுலவன் ,மாவுலவன்,வில்வேடுவர்,வேட்டுவர்
4.காவளவர்,பூவளவர்,மாவளவர், வில்வேடுவர்,வேட்டுவர்
5.காவிலன் ,பூவிலன் ,மாவிலன் ,வில்வேடுவர்,வேட்டுவர்



சிலப்பதிகாரம் கி பி 5ஆம் நூற்றாண்டின் இறுதிலும்,கி பி 6 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இலக்கியம் என்று   கார்த்திகேசு சிவத்தம்பி என்ற அறிஞர் கூறியிருக்கிறார்.     


சிலப்பதிகாரம் வேட்டுவர் வரி வேட்டுவர்களின் வாழ்கை முறையும் ,போர் நெறியையும் ,வீரபண்பையும் ,வேட்டுவர்களின் போர் தெய்வமான கொற்றவையை வழிபடும் பாங்கையும் அற்புதமாக விவரிக்கிறது.

சிலம்பு வேட்டுவர் வரி வேட்டுவர் குலத்தவரை மறவர்,எயினர்,கொங்கர்,கானவர்,தொல்குடி,வேடர் என அழைக்க படுகிறது.

சிலப்பதிகாரம் வேட்டுவர் வரியில் மறம்,மறவர் சொற்கள் வீரம்,கொலை தொழில் செய்பவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டு உள்ளது.இங்கு மறவர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.

அம்பு எய்யும் பாலை நில வேட்டுவரை எயினர் என அழைக்க பட்டது . எயினர் என்பது இன பெயர் கிடையாது.

'விற்றொழில் வேடர் குலனே குலனும் '(சிலம்பு 12.4.4)
'எய்வில்  எயினர்  குலனே குலனும் '(சிலம்பு 12.5.4)
இங்கு வேட்டுவர் குலத்தவரை எயினர் என சிலம்பு கூறுகிறது .

சிலப்பதிகாரம் வேட்டுவர் வரி வேட்டுவர் குல பெண்ணை 'கொங்க செல்வி ' என கூறுகிறது.(கல்வெட்டுகள் ,பட்டயங்கள் வேட்டுவர் குலத்தவரை கொங்கர் என்று கூறுகிறது.)

வேட்டுவர்கள் கொங்கு நாட்டின் பூர்விக குடிமக்கள்.கொற்றவை கூத்து கொங்கு நாட்டில் நடந்தது.

வேட்டுவர் தொழில் -போர் தொழில் .
வேடுவர் அல்லது வேடர் அல்லது வேட்டவர் தொழில் -வேட்டையாடுதல் .

வேட்டுவர் குலத்தவர்கள் போர் தொழிலோடு ,வேட்டையாடுதலை செய்தனர். இதனால் வேடர் என அழைக்க பட்டது.



       

Tuesday 29 July 2014

வேட்டுவர் இனத்துக்கும்,பள்ளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .



வேட்டுவர் இனத்துக்கும் ,பள்ளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது  there is no connection between "Vettuvar" (Vettuva gounder,pooluva gounder,punnam vettuva gounder) and "Pallar" (Devendra Kula Vellalar).

பள்ளர் இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :
 
In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to "Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-

"
வைத்தாந் பள்ளநும்"
"
இவை பள்ளன் எழுத்து" (S.I.I. Vol-XXVI, No.354).

In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-

"
புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர்
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால்
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி
வளத்தானும் இவன் தம்பி தாழியும்" (S.I.I. Vol-VIII, No.590).

In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king "Virupakshirayar" of 14-15th century A.D says as follows :-

"
வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர்
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும்
காத்திகைக்கு இரண்டு கொழியும்" (I.P.S. Ins. No. 715)

In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-

"
இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும்
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்"

"
இலம்பலக் குடியில் பறையற்கும்
பள்ளற்கும் சண்டை" (Avanam-15, July-2004, Page-31&32)

In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-

"
காத்திகைக்கு இடையன் .ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்" (I.P.S. Ins. No.843)

In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-

"
தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும்
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும்
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா" (I.P.S. Ins. No. 956)

In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-

"
வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர்
இருவகைப் பெருக்கும் வெள்ளானை
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான
படியினாலெ" (I.P.S. Ins. No. 929)

In the above said inscriptions, the "Pallar Community people" and "Paraiyar Community People" were placed together. In one of the inscription, the "Pallar Community People" referred as "Pulai Adiyars"

'பாண்டலை யிட்ட பலவல் புலையனை' (கலித்தொகை,மருத கலி)
  “துடி யெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (புறம் 287:1-2)
பாணர்(சங்க காலங்களில் மன்னனை புகழ்ந்து பாட்டு பாடி பரிசு பெரும் மக்கள் குழுக்கள் ) மற்றும் துடியர் சாதியை புலையர் என இங்கு கூறப்பட்டு உள்ளது. 

Hence there is no connection between "Vettuvar" (Vettuva gounder,pooluva gounder,punnam vettuva gounder) and "Pallar" (Devendra Kula Vellalar).

                                     

                          The history is true fact.





Sunday 27 July 2014

தென்வேட்டுவர் புலிகுத்தி நடுகல்

வேட்டுவ குலத்தவர்கள் தமிழ் மண்ணின் மூத்த போர்குடியினர் மற்றும் ஆண்ட பரம்பரை இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.



ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்.
ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே.
(தொல்காப்பியம் 21)
காவலியர்,மாவலியர்,பூவலியர்,வெட்டுவர்,வில் வேடுவர் இந்த 5 பிரிவு வேட்டுவர்களை பற்றி கல்வெட்டுகள் ,செபெடுகள் ,இலக்கியங்கள் கூறுகிறது .
இன்று இந்த 5 பிரிவு வேட்டுவர்கள் இன்று வேட்டுவ கௌண்டர்,பூலுவ கௌண்டர் மற்றும் புன்னம் வேட்டுவ கௌண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.இன்று வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டில் பெரும் பான்மை இனத்தவராகவும் ,திருச்சி,தஞ்சாவூர்,மதுரை,தேனி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிறுபான்மை இனத்தவராகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வெட்டுகள்,செபெடுகள் ,சங்க இலக்கியங்கள் ,குருகுல காவியம் ,பஞ்சவர்ண ராஜகுல காவியம்,அப்பசிமார் காவியம், வேட்டுவ கலிவெண்பா போன்ற ஆவணம்களில் இருந்து சுமார் 300 வேட்டுவ குலத்தை கண்டுபிடித்து நாமக்கல் வெப்படை இல் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த வேட்டுவர் மாநாட்டில் பேராசிரியர் ரா தங்கமணி புத்தகம் வெளிட்டார். முக்கியமான வேட்டுவ குலத்தின் பெயர்களை கிழே தருகிறேன்

சேர வேட்டுவ குலம்,வில் வேட்டுவ குலம் ,பனைய வேட்டுவ குலம் ,அந்துவ வேட்டுவ குலம் ,வஞ்சி வேட்டுவ குலம் ,மலைய வேட்டுவ குலம்,மலைஅரையர் வேட்டுவ குலம் ,சோழ வேட்டுவ குலம் ,வளவன் வேட்டுவ குலம் ,வெண்கொற்றர் வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,சந்திர வேட்டுவ குலம் ,அக்னி வேட்டுவ குலம் ,சத்திரிய வேட்டுவ குலம் ,புலி வேட்டுவ குலம் ,மீன் வேட்டுவ குலம் ,முல்லை வேட்டுவ குலம் ,வேள் வேட்டுவ குலம் ,வேந்த வேட்டுவ குலம், குடுமி வேட்டுவ குலம் ,காடை வேட்டுவ குலம் ,வன்னி வேட்டுவ குலம்,பூவாணிய வேட்டுவ குலம்,மும்முடி வேட்டுவ குலம் இது போல் பல வேட்டுவ கூட்ட பெயர்கள் இருக்கிறது .

இன்று வேட்டுவ குலத்தினர் கொங்கு நாட்டில் ஆறுநாட்டார் மலை முருகன் கோயில்(கரூர் ),பாலமலை முருகன் கோயில் (கரூர் ) ,கபிலர்மலை முருகன் கோயில் (நாமக்கல் ),ஓதி மலை முருகன் கோயில் (இரும்பொறை,ஈரோடு,), கிணத்துகடவு பொன்மலை முருகன் கோயில் (கோவை ) மற்றும் பல காளி கோயில்களில் முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.
ஓதி மலை முருகன் கோயில்களில் அந்துவ வேட்டுவ குலத்தினர்(சேரர்) முதல் மரியாதையை பெற்று வருகிறார்கள்.

புரவிபாளையம் வேட்டுவ குலத்தை சேர்ந்த பாளையக்காரர் சிங்களர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.மேலும் மதுரை நாயக்கர் மன்னர்களோடு போர் செய்து தோல்வி அடைந்தார் என்று காடையூர் செப்பேடு கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் நாயக்க மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று வேட்டுவ பாளையகர்கள் வரலாறுகள் கூறுகிறது.
சில வேட்டுவ பாளையகர்கள் ஒக்கிலியர்களோடு(கன்னடர் ) போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று தென்னிலை செபெடுகள் கூறிகிறது.
வேட்டுவ குலத்தவர்கள் களபிறர் மன்னர்களோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள் என்று குருகுல வரலாறுகள் கூறுகிறது.
குடி மக்களுக்கு தீங்கு செய்த ஒட்டியர்களையும் மற்றும் சல்லியர்களை வெட்டி போட்டு குடிமக்களை பாதுகாத்தார்கள் என்று செபெடுகள் கூறுகிறது.
மழ கொங்கை ஆண்ட வேட்டுவ குறுநில மன்னன் அல்லால இளையன் நாமக்கல்,ஜேடர்பாளையம் என்னும் இடத்தில் காவேரி ஆற்றில் அணை கட்டி கால்வாய் வெட்டினார்.இன்று இந்த கால்வாய் ராஜா கால்வாய் என்று மக்களால் அழைக்கபடுகிறது. இந்த செய்தியை கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.
செம்ப வேட்டுவ குலத்தை சேர்ந்த ஜெயங்கொண்ட சோழ கொங்கால்வன் அணை கட்டி கால்வாய் வெட்டிய செய்தியை கொடிவேரி,பவானி ஆற்றங்கரை கல்வெட்டு கூறுகிறது .
வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும் வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக் கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
........ஊராளி வேட்டுவன் அழகன்
காளி அவன் இதில் பட்டான்.”

பாண்டியர் வில்லாற்றல் மிக்க வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
தேவற்கு யாண்டு 6 – வது
வடகரை நாட்டு உரகடங்கச்சதி
கண்ணையன் வேட்டுவரில்
அந்தியூரன்”

கோவில் கர்ப்பகிரகம் வடக்கு வெளி சுவர் - 'களந்தை பூலுவர் பெரும்பற்றார் சந்தரகுமார கோப்பன்ன மன்றடியார் கந்தசாமி கவுண்டர் கட்டிவைத்த கர்ப்பகிரகம் கோவில் முன் மண்டபம்'.
கோவை ,பேரூர் சிவன் கோவிலை கட்டியவர் வேட்டுவ குல தலைவர் புரவிபாளையம் ஜமீன். சூரிய வம்சம் படம் வேட்டுவர் அரண்மனையில் தான் படமாக்க பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:

“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”

இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.
பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்
குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .
சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது
(http://www.jeyamohan.in/?p=43096)
 

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).

 https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ).


 உடையார் என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது



'..கரடி வேட்டுவரில் மானபரன பல்லவரயைன் பிள்ளை திருவெண்உடையார் வெஞ்சமகூடல் ஆளுடையார் விகிர்தருக்கு...'
(கரூர் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1248).

'...தென் பூவானிய நாட்டில் குளகுறிச்சியில்   ஊராளிகளில் பாத வேட்டுவரில் பிள்ளப்பன் உடையனேன் என் ஏரியில் --- '
(சேலம் கல்வெட்டு ,கொங்கு பாண்டியர் ,கி பி 1292)

'..கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடவன்..'
(தஞ்சாவூர் கல்வெட்டு(S.I.I,Vol XII,P-34),பல்லவ மன்னர்-நிருபதுங்க வர்மன் ,கி .பி 872).
கொண்ட நாடு + உடைய =கொண்ட நாடுடைய

இந்த மூன்று கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது.உடையார் என்ற பட்ட பெயர் வேட்டுவ குலத்துக்கு இருப்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

  '...வீரநஞ்சராயர் உடையார் ...'
(திருப்பூர் கல்வெட்டு ,மைசூர் அரசர் ,கி .பி 1489) மைசூர் அரசர்களுக்கு(கன்னடகாரர்) உடையார் என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு மூலம் அறியலாம்.

'...பார்க்வகோத்திரத்து மிலாடுடையான் அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையானேன் ......செம்பியன் மிளாடுடையனேன்...'
(பேளூர் கல்வெட்டு ,ஆதித்தன் 2,கி .பி 959). இந்த கல்வெட்டு உடையார்(பட்ட பெயர் ) இனத்தை சேர்ந்தது .

மிலாடு + உடைய = மிளாடுடையனேன்
உடைய(உடைமை ) என்ற சொல்லில் இருந்து உடையார் என்ற சொல் வந்தது.


வன்னியர்  என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது.



வன்னியர் என்ற சொல் பட்டபெயர் வன்னியர் என்ற சொல் இன பெயர் கிடையாது
'....கொடைக்கு கருணன் சத்தியத்துக்கு அரிச்சந்திரன் மறத்துக்கு வன்னியன் அழகுக்கு மன்மதன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன் ...' (அல்லால இளையன் செப்பேடு ,கி பி 16) இங்கு வன்னியர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.இங்கு வன்னியர் என்ற சொல் வீரர் என்று கூறுகிறது .

'...ஆத்தூர் மாந்தபடை வேட்டுவன் வன்னிய கவுண்டன் சாட்சி ..' (தென்னிலை செப்பேடு ,கி பி 1775) இங்கு வன்னிய கவுண்டன் என்பவர் மாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் என்று தென்னிலை செப்பேடு கூறுகிறது .இங்கு வன்னிய கவுண்டன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது . இன்று வேட்டுவர்களில் வன்னி வேட்டுவ குலத்தினர் வாழ்ந்து வருகிறார்கள் .

வன்னி முத்தரையர்களை பற்றி கோவை ,கணியூர் செப்பேடு கூறுகிறது (கி பி 16)
விஜயநகர அரசர் 'ராஜா வன்னிய ராஜா ஸ்ரீ மல்லிகார்ஜுன தேவமகாராயர் ' பற்றி வில்வநல்லூர் செப்பேடு கூறுகிறது (தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி -2)
மலையமான் இனத்தை (உடையார் இனம் ) சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னிய தேவேந்தர மலையமான் ராமன் போர் கிடாய் கொடாதான் ' என்று கல்வெட்டு (ARE 215 of 1934-35) கூறுகிறது .

கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான் 'என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி )கூறுகிறது .
'...இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818,திருமெய்யம் ) இங்கு 'வன்னியரையனும்' என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை .

'.....புரட்டாதி மதம் 14 நயினார் மாவலிவாணதிராயர் காரிய காரியத்துக்கு .........'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-815,திருமெய்யம் ,கி பி 15 ) மாவலி வாணதிராயருக்கு 'நயினார்'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .


'......நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் ......காலிங்கராயரும் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-971,ஆலங்குடி ) மாவலி வாணதிராயருக்கு 'வன்னியர் 'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .

 '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

வன்னியர் என்ற பட்டபெயர் வேட்டுவர் இனம் ,மலையமான் இனம் (உடையார் இனம் ),கள்ளர் இனம் ,முத்தரையர் இனம் ,விஜயநகர் அரசர் (கன்னடர் ) போன்ற சாதிகளுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

 மல்லன் என்ற சொல் இன பெயர் இல்லை

'.. இடிகரையில் இருக்கும் வெள்ளாளன் பை யைய்யரில் மள்ளன் சிறியான் ' என்பவரை பற்றி கல்வெட்டு (கோவை ,கி பி 13) கூறுகிறது . இக்கல்வெட்டு வெள்ளாளர் இனத்தை சேர்ந்தது .


'...கொண்டநாடு உடைய வேட்டுவதி அரையர் மல்லன் வேங்கடவன் ' என்பவரை பற்றி கல்வெட்டு(தஞ்சாவூர் ,
(S.i.i XII page-34). இக்கல்வெட்டு வேட்டுவர் இனத்தை சேர்ந்தது .

'...மீனவன் தமிழதியயரையனன மல்லன் ஆனந்தனுக்கு .'( புது கோட்டை கல்வெட்டு -63).இக்கல்வெட்டு முத்தரையர் இனத்தை சேர்ந்தது .

மற்போர் செயும் வீரனை 'மல்லன் ' என அழைக்கபட்டது.மேலும் 'வளமானவன் ' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டது .


 அரசர்கள் தங்களது அரசியல் அதிகாரிகளுக்கு  காலிங்கராயர் ,மழவராயர் ,வாணராயர் ,இருங்கொளன்,காங்கேயன் ,வேணாடுடையான்,குருகுல ராயர் ,மூவேந்த வேளான்,வேளான்,பாண்டியனார் ,சேரமான் ,சோழனார்,தொண்டைமான்,பல்லவராயர்,   போன்ற பெயர்களை வழங்கி வந்தனர்.


 வேட்டுவ குல தலைவர்களுக்கு பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,முத்துராஜா ,தேவர் ) இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .