Monday 5 November 2018

சங்க இலக்கியத்தில் மாந்தர்கள்

                                     சங்க இலக்கியத்தில் பரதவர்:
நெய்தல் நிலத்தில் வாழும் பொது மக்களின் பொது பெயரை குறிப்பதாக
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல (பொரு 218-221)

என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் நெய்தல் நிலத்தில் வாழ்பவராகவும் ,மீன் பிடிக்கும் தொழில் செய்பவராகவும் குறிப்பதாக
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்/நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ - நற் 4/1,2
மீன் எறி பரதவர் மகளே நீயே - நற் 45/3
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்/மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/1,2
மீன் எறி பரதவர் மட_மகள் - நற் 101/8
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - அகம் 65/11
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர்/தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என - அகம் 70/1
என்ற அடிகளில் அமைத்துள்ளது .
பரதவர் குடியை சார்ந்தவரை குறிப்பதாக
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப - மது 97
என்ற அடிகளில் அமைத்துள்ளது .


                                          சங்க இலக்கியத்தில் எயினர்
எயினர் என்ற சொல் பாலை நில பொது மக்களின் பொது பெயரை குறிக்கும் .

வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை குறிப்பதாக
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் - அகம் 319/3
கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/7,8
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை - அகம் 208/5,6
ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/4,5
வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட - பட் 266
கொடு வில் எயின குறும்பில் சேப்பின் - பெரும் 129
கானமும் எயினர் கடமும் கடந்தால் - மது 11/79
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் - மது 12/10
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன - மது 12/13
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது - மது 12/20
எய் வில் எயினர் குலனே குலனும் - மது 12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் - மது 12/98
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - மது 12/139
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது - மது 12/142
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - மது 12/161
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் - மது 12/149
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது - மது 12/15,16
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - மது 12/39
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன - மது 12/139
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் - மது 12/128
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
'கொடு வில் எயினர் கோட் சுரம் படர' அகம் 79/14
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

குறவர் குடியை சேர்ந்தவர்களையும் குறித்தது.
புறநானூறு 157 வைத்து பாடலை பாடியவர் குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர்.

களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் - அகம் 137/௩
அர்த்தம் =பாலை நிலத்தில் இருந்த பாதை .கான் =முல்லை நிலம் (காடு )


                                                                 சங்க இலக்கியத்தில் கானவர்

காடுகளில் வாழும் பொதுமக்களின் பொது பெயரை குறிப்பதாக
கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வேட்டுவ குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் வில் கானவர் தங்கை
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே’ குறு 335/5-7
என்ற அடிகளில் அமைந்துள்ளது
பொருள் :
மலைக்குச் சற்று அப்பால் இருக்கிறது, நீண்ட அம்பினையும்,வலிய வில்லினையும் உடைய வேட்டுவரின் தங்கையாகிய பெரிய தோளினைக்கொண்ட நம் தலைவி இருந்த ஊர்
.

கள்வர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்தொறும் குழீஇ( அகம் 231/5-7)
என்ற அடிகளில் அமைந்துள்ளது.

குறவர் குடியை சேர்ந்தவரை குறிப்பதாக
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - (ஐங்குறுநூறு 270)
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ” (புறநானூறு 159)
'தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்' - (ஐங் 270/2 )
'துறு கண் கண்ணி கானவர் உழுத' - நற் 386/2
'பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை மலை' 317,318
'பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' - குறு 379/2
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

கிழங்கு சேகரிக்கும் தொழில் செய்பவரை குறிப்பதாக
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்/கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை - ஐங் 208/1,2
'இன்று யாண்டையனோ தோழி குன்றத்து
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு' குறுந் 379/1,2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வேட்டை (வேட்டம்) தொழில் செய்பவரை குறிப்பதாக
'உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு மா தொலைச்சி' நற்றிணை 75/5,6
'வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே '
நற்றிணை 85/7-11
'பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்' அகம் 282/1-4
என்ற அடிகளிலும் அமைத்துள்ளது .


                                         சங்க இலக்கியத்தில் மழவர்
சங்க இலக்கியத்தில் மழவர் என்ற சொல் குடிபெயர் கிடையாது .

போர் வீரர்களை குறிப்பதாக
‘…………..வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி’ நற் 52/8-9
வீளை அம்பின் விழு தொடை மழவர்/நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்/பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/7,8
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை - பதி 55/8
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

வெட்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மழவர் என்று சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அழைக்கபட்டனர் .

களவு தொழில் செய்ததை குறிப்பதாக
".....இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்....."(அகம்.91)
பொருள்: கரிய நிறமுடைய இரலை மான்கள் உறங்கும் பாறாங்கற்களால் ஆன உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழவர் பசுக்களை களவு செய்வதற்கு உதவியாய் வளர்ந்து நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங்களை உடைய ஊர்.
"....கண நிரை அன்ன, பல் கால் குறும்பொறை
தூது ஒய் பார்ப்பான்.........
................
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்....."(அகம்.337)
பொருள்: உப்பு வணிகர் கூட்டமாகச் செல்லும் கழுதை வரிசை
போன்று விளங்கும் பாறைகளின் வழியே பல முறையும் தூதாகப் போகும் பார்ப்பான், வெண்மையான ஓலைச் சுருட்டுடன் வரும் இயல்பைப் பார்த்து, உண்ணாமையால் வாட்டம் கொண்ட விலாவுடைய ‘இவன் கையில் இருப்பது பொன்னாகவும் இருக்கக் கூடும்’ என்று எண்ணி, கையில் படைக்கருவியை உடைய மழவர் பயன் ஏதும் இல்லாமல் கொன்று வீழ்த்தினர்.
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை -அகம் 121/11-12
என்ற அடிகளில் அமைந்துள்ளது.


                                                     சங்க இலக்கியத்தில் மறவர்
சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .

வீரத்தை குறிப்பதாக
மறம் பாடிய பாடினியும்மே - புறம் 11/11
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

போர் வீரர்களை குறிப்பதாக
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்/விசைத்த வில்லர் வேட்டம் போகி - அகம் 284/8,9
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்/நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது - அகம் 387/14,15
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/8,9
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்/வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்மார் - அகம் 35/6,7
விழுதொடை மறவர் வில்இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்- ஐங் 352/1-2
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
கொடுமர மறவர் பெரும (புறம் 43)
என்ற அடிகளில் அமைந்துள்ளது .

படைத்தலைவர்களை குறிப்பதாக
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்/குழியில் கொண்ட மராஅ யானை - அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை - அகம் 77/15
இழை அணி யானை சோழர் மறவன்/கழை அளந்து அறியா காவிரி படப்பை - அகம் 326/9,10
பெருந்தகை மறவன் போல கொடும் கழி - நற் 287/4
மீளி மறவனும் போன்ம் - கலி 104/50
என்ற அடிகளிலிலும் அமைந்துள்ளது .
சங்க இலக்கியத்தில் வெச்சி வீரர்களையும் ,கரந்தை வீரர்களையும் மறவர் என்று பல இடங்களில் கூறப்பட்டு உள்ளது .

ஆறலை கள்வர்களை குறிப்பதாக
அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த
கொலைவெம் கொள்கை கொடும்தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய- அகம் 363/9-12
என்ற அடிகளிலும்
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த - காட்டினை அடைந்து அங்க வழிவருவாரைப் பார்த்துக்கொண்டிருந்த, கொலைவெம் கொள்கை கொடுதொழல் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்னையும் கொடிய தொழலையுமுடைய மறவர், ஆறு செல் மாக்கள் அருநிறத்து எறிந்த-வழிச்செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உற விழு புண் கூர்ந்தோர் எய்திய-வேலாலுற்ற சிறந்தபுண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த.
அத்தம் என்ற சொல் பாலை நிலத்தில் இருந்த பாதையை குறிக்கும் (ஐங் 351 /1 -3 )
‘ …………………… என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே ‘குறு 283/4-8
என்ற அடிகளிலும்
எக்காலத்திலும் கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர் வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால் உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும் நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
‘நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி’ குறு 331/1-4
என்ற அடிகளிலும்
நெடிய மூங்கில் வாடி உலர்ந்துபோன நீரற்ற அரிய பாலைவெளியில்
வழிச்செல்லும் பயணிகள் அழியுமாறு அவரை எதிர்த்து நின்று
வளைந்த வில்லையுடைய மறவர்கள் காட்டில் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்ளும்
கடுமையான யானைகள் இருக்கும் பாலைநிலத்தைக் கடந்து
‘நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்’ நற் 33/5-8
என்ற அடிகளிலும்
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் வழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில் செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
‘விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்’குறுந்தொகை-274/3,4
என்ற அடிகளிலும் அமைந்துள்ளது .
விடுவதற்கான அம்பினை வில்லோடும் கையினில் பற்றி, அந்த மரத்தின் கிளைகளில் ஏறி வழியில் வருவோரைப் பார்க்கும் கொடுமைமிக்க ஆடவர்(மறவர் ).

வீரத்தை குறிப்பதாக
வழங்கு வில் தடகை மறகுடி தாயத்து - மது 12/6
மறகுடி தாயத்து வழி வளம் சுரவாது - மது 12/14
வாள் ஏர் உழவன் மற களம் வாழ்த்தி - வஞ்சி 26/234
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு - வஞ்சி 25/124
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் - புகார் 5/76
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற - மது 12/27
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் - வஞ்சி 26/44
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து - வஞ்சி 26/56
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ - சிந்தா:1 311/4
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி - சிந்தா:2 432/2
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது - சிந்தா:4 942/3
மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல் - சிந்தா:4 1034/1
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே - சிந்தா:6 1461/4
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான் - சிந்தா:10 2261/3
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள - சிந்தா:10 2300/3
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து - சிந்தா:10 2319/2
மறம் புரி கொள் நெஞ்சம் வழியா புகுந்து ஈண்டி - சிந்தா:13 2868/2
என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வீரர்களை குறிப்பதாக
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர்
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் - புகார் 5/55,56
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - மது 22/13
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் - வஞ்சி 26/198
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து - வஞ்சி 26/206
புறம்பெற வந்த போர் வாள் மறவர்
வருக தாம் என வாகை பொலம் தோடு - வஞ்சி 27/42,43
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த - வஞ்சி 26/77
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் - வஞ்சி 26/87
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி - மது 12/124
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்தவாறும் - சிந்தா:0 11/2
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார் - சிந்தா:2 439/3
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ - சிந்தா:3 701/3
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண் - சிந்தா:3 788/3
கரும் சிலை மறவர் கொண்ட கண நிரை விடுக்க வல்ல - சிந்தா:4 1112/1
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி - சிந்தா:4 1141/2
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள் - சிந்தா:7 1828/2
ஆகம் மறவர் அகன் கோயில் புக்கு அம் பொன் மாலை - சிந்தா:11 2337/2
உடை திரை பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்ப - சிந்தா:13 2650/3
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
ஏத்தரும் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார் - சிந்தா:7 1845/3,4
சென்ற வேல் விருந்து செம் கண் மறவன் நக்கு எதிர்கொண்டானே - சிந்தா:10 2289/4
என்ற அடிகளில் அமைத்துள்ளது .


                       வேட்டுவ குடியினர் முல்லை (பாலை ) நிலத்தில் வாழ்ந்தவர்கள்

"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)

உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .(புன் புலம் -முல்லை ).
'கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய'- (புறம் 33/1-3)
காட்டில் வாழும் வாழ்க்கையுடைய ,சினமுள்ள நாயையும் உடைய வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவன் மான் தசைகளை கொண்டு வருவர் இடைச்சியர் தயிரை குடங்களில் கொண்டு வருவர்.
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (காடு =கான் ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
' ......................................... .வெவ்வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ' - (அகம் 387/8-9)
கடுமையான வினைகளையுடையரும்(போர் தொழில் ),காடுகளில் தங்கிக்கிடப்பாருமாகிய வேட்டுவ குடியினரின் கூப்பீட்டைக் கேட்டு அஞ்சி ..
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (பாலை ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
சிலப்பதிகாரம் வேட்டுவ வரி வேட்டுவ குடியினரை எயினர் குலம் என்றும் தொல்குடியினர் என்றும் கூறுகிறது .
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும்
குறும்பருங் .......' பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 54 -55)
காட்டில் வாழும் வேட்டுவ குடி தலைவரும் ,வேட்டுவ குடி தலைவரின் வீரர்கள் ...
வேட்டுவ குடி தலைவரின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் வேட்டுவ குடி தலைவர் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .
'காட்டகத் துறையும் கடு வினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் 'பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 107 -108)
காட்டில் வாழ்ந்து வருபவரும் கடுமையான தொழில்கள் செய்யும் வாழ்க்கை உடைய வேட்டுவ குடியினர் வில் பயிற்சி மூலம் பயின்ற நிலம் .
'ஆய்வேளையும் குறும்பரையும் மடல் மாரு யளித்தோட்டி காட்டு குறும்பு சென்றடைய நாட்டு குறும்பில் செரு வென்று '
(வேள்வி குடி செப்பேடு ).
ஆய்வேளின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் ஆய்வேள் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .எயினர்களின் அரணை குறும்பு என்று அழைக்க படும் (அகம் -319 /13)
காட்டில் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களின் பாசறை :
'கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி' (முல்லை பாட்டு-24 -28 )
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறை .