Friday 26 June 2015

வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை


வேட்டுவர் இனத்துக்கும் ,கொங்கு வெள்ளாளர் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .


வெள்ளாளர் (கொங்கு வெள்ளாளர் ) இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :


'வேளாண் மாந்தருக்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி '(மரபியல் 81)
வேளாண் மாந்தருக்கு(வெள்ளாளர் ) உழவு தொழில் தவிர மற்ற தொழில் எதுவும் இல்லை என சங்க இலக்கியம்கள் கூறுகிறது .
'கழகத்தால் வந்த பொருள்கள் முறாமை
பழகினும் பார்பாரை தீப்போல ஒழுகழ
உழவின்கட் காமுற்று வாழ்தலி மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு 'திரி 42
'வேளாண் வாயில் கேட்ப கூறி (பொருந 75)
வேளாண் -உபகாரம்
வேளாண் என்ற சொல்லில் இருந்து 'வெள்ளாளர் 'வேளாளர்' என்று சொல் வந்தது .

'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ..'
(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)
'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'
(கோவை ,இடிகரை ,வீர பாண்டியன் (கிபி 1261-1288)
'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1448)
'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர் ..'
(அவினாசி கல்வெட்டு ,கிபி 1648)
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் ,கிபி 1853)
செம்பூத்த குலம்- வெள்ளாளர்
மானிக்கி -தேவரடியாள் (புதுகோட்டை கல்வெட்டுகள் 817 'மானிக்கி' என்றால் 'தேவரடியாள்' என்று கூறுகிறது )

பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகள் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை சட்டம் இயற்றி இந்த முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள் இருக்கிறது.

'சேர குல வெள்ளாளர்கள் பிள்ளையென்ற பட்டங்கொண்டவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தலைமையானவர்கள் கவுண்டன் என்னும் பெயர் புனைவது வழக்கமாம் .இப்பொழுதும் கவுண்டன் பிராமணபிள்ளை என்பது போல் வழக்கம் '
(கொங்கு நாடு அடைவு இயல் -தி அ முத்துசாமி கோனார் ) .

'..ஸ்வஸ்தி ஸ்ரீ வல்லாள தேவர் திரு ராச்சியம் பண்ணியருளா நின்ற நள வருசத்து வட பரிசார நாட்டு இடிகரையில் வெள்ளாளன் கொற்றந்தைகலில் பிள்ளையாண்டி கொக்கண்டன்தேவர் என் தன்மம் '
(,போசளர் ஆட்சி (வல்லாள தேவர்),கோவை இடிகரை,கிபி 13)
பிள்ளை( அந்தப்புறத்துக்கு பிறந்தவர்) என்ற பட்ட பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .

'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3)

வெள்ளாளர்களின் (கொங்கு வெள்ளளாளர் ) வரலாற்று திருட்டு .

வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )

இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .

இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .

இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .

 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் வெள்ளாளர்கள்(கொங்கு வெள்ளாளர் ).

கச்சி(காஞ்சி) ஏகாம்பரர் கோயில் கல்வெட்டு ஓன்று  வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி கூறுகிறது .

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர்  கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும்  வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு
பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"

பண்டுமுதல் ஊரன் - உழவர்(கொங்கு வெள்ளாளர் ).

Monday 22 June 2015

வேட்டுவர் இனத்துக்கும் ,கள்ளர்(மறவர் ,அகமுடையார் ) இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை





கள்ளர் இனத்தை   பற்றிய கல்வெட்டுகள் :
  



"The kindom suffered severly from depredation of certain raiders called 'ottiyars and salliyars'who represtented its said the 'kallars and maravars'today."(Madras district gazatteers,salem,by F.J Richards,indian civil services Vol-1,part-1,1918)
depredation- களவு ,கொள்ளை
இங்கு கள்ளர் மற்றும் மறவர்களை ஒட்டியர் மற்றும் சல்லியர் என்று கூறுகிறது .மேலும் கொள்ளை அடித்தவர்களாக கூறபடுகிறது . மேலும் கள்ளர்  மற்றும் மறவர் சாதினர் சேர ,சோழ ,பாண்டிய நாட்டை  கைப்பற்றி கொண்டனர்  என்றும் பிறகு வேட்டுவ மன்னர்கள் ,  கள்ளர்  மற்றும் மறவர் சாதிகளோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள்  என்றும் கூறப்பட்டு உள்ளது  .



'..கடத்தூர் வெள்ளாளன் கள்ளன் பறையன் நரவீர கேரள சிலைசெட்டி இட்ட திருநிலை வாய்முகவனை உத்தரமும் திருகதவும் இட்டேன் ' ( சோழர் ,கிபி 1217,உடுமலைபேட்டை ,கடத்தூர் )



'..சாறுதை ஊரவரை நாவிட்டு விதனன் செய்த அளவில் இது ஒழிய வேறு கள்ளர்கள் இல்லையென்று என்று கூலி கொடுக்க வேண்டுகையில் ..' (முகமதியர் (கிபி 1320-1370),உடுமலைபேட்டை ,கடத்தூர்)



'...விதை இருகலமும் ஆக விதை ஒன்பதின் கலனே துனியும் களப்பாளன் பக்கல் கைக்கோளரில் அவினாசி ..' ( பாண்டியர் ,கிபி 1311,,தாராபுரம் ,1920:139)

'..ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரி வேங்கை குத்தியது ' (புதுகோட்டை ,குளத்தூர் ,IPS-236,கிபி 9)

'... கள்ள பெருமானார் ..' (காஞ்சிபுரம்,களத்தூர் கல்வெட்டு ,கி பி 8-9 ஆம் நூற்றாண்டு )

' கள்ள பெருமானார் என்ற இவர் களபிரர் மன்னர்களின் வழி தோன்றலாக இருந்து இருக்க வேண்டும் ' (காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் பக்கம்- VIII ).
கொடும்பாளூரில் ' வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி ' என்பவளை பற்றி புதுகோட்டை கல்வெட்டு எண்-82 கூறுகிறது .


'ராஜராஜ வளநாடு தென்கவி நாட்டு கள்ளபால் கல்குறிச்சி மகாதேவருக்கு இவ்வூர் கள்ளன் பாப்பான் சொந்தனான குலோத்துங்க சோழ நாடாள்வான் இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி திருகற்றளி மகாதேவருக்கு வைத்த திரு நந்தா விளக்கு ..' (முதலாம் குலோத்துங்க சோழனின் 48 வது ஆச்சி ஆண்டு ,கிபி 1118,IPS-232,புதுகோட்டை ஆலங்குடி தாலுகா )




கள்ளர் இனத்தினர் களவு தொழில் செய்தார்கள் என்பதை  புரவிபாளையம் பாளையக்காரர் (D:2964),நிமித்தம்பட்டி நீலியப்ப கவுண்டன் வம்சாவளி (D:3074),அம்மைய நாயக்கர் பாளையகாரர் (D:3846),கொம்பை நாயக்கனூர்  பாளையக்காரர் (D:3847),மருதப்பன் தேவன் பாளையம்  (D:2847),நடுவு குறிச்சி பாளையம் (D:3886),திண்டுக்கல் ஜமின்தரி வம்சாவளி (D:3351)  போன்ற பாளையக்காரர்கள் வரலாறு கூறுகிறது .






 மறவர் இனத்தை   பற்றிய கல்வெட்டுகள் :
 

சங்ககாலத்தில் மறவர் ,மறம் சொற்கள் வீரம் ,கொலை தொழில் புரிபவர் ,படை வீரர் போன்ற அர்த்தத்தில் பயன்படுத்த பட்டுள்ளது .சங்ககாலத்தில் மறவர் என்ற சொல் இனத்தை குறிக்க வில்லை .குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு முன்பு மறவர் என்ற இனம் இருந்ததற்கு ஆதாரம் இல்லை .தேவர் என்ற சொல் பட்ட பெயர் .தேவர் என்ற சொல் இன பெயர் கிடையாது .

"The kindom suffered severly from depredation of certain raiders called 'ottiyars and salliyars'who represtented its said the 'kallars and maravars'today."(Madras district gazatteers,salem,by F.J Richards,indian civil services Vol-1,part-1,1918)
depredation-
களவு ,கொள்ளை
இங்கு கள்ளர் மற்றும் மறவர்களை ஒட்டியர் மற்றும் சல்லியர் என்று கூறுகிறது .மேலும் கொள்ளை அடித்தவர்களாக கூறபடுகிறது . மேலும் கள்ளர்  மற்றும் மறவர் சாதினர் சேர ,சோழ ,பாண்டிய நாட்டை  கைப்பற்றி கொண்டனர்  என்றும் பிறகு வேட்டுவ மன்னர்கள் கள்ளர்  மற்றும் மறவர் சாதிகளோடு போர் செய்து வெற்றி பெற்றார்கள்  என்றும் கூறப்பட்டு உள்ளது  .

"..சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு 11 எதிராவது ஆண்டு புறமலை நாட்டு பொன் அமராபதி முதலான நாடுகளில் மறமாணிக்கரோம் பேர் வஞ்சிகெட்டு பரிசாக குடுத்த திருவரகுளமுடையானுக்கு மறசக்கரவர்த்தி பிள்ளை என்று பேறும் கொடுத்து தூத்திகுடி வயலில் வடபாகம் விலை நிலமும் இதுகெல்லையான புன்செய்களும் முன்பு எழுதி அணிந்து குடுத்த செமயி. படி சந்திராதித்தவரை இறையிலிலே காணியாக கொடுத்தோம் ..."
(
சுந்தரபாண்டியன்,கி பி 1229,புதுகோட்டை கல்வெட்டு எண்-278:திருமெய்யம் )

சுந்தர பாண்டிய மன்னன் , திருவரகுளமுடையானுக்கு மறசக்கரவர்த்தி பிள்ளை என்று பேர் கொடுத்து ,காணிகள் கொடுத்ததை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.புறமலை நாட்டு பொன் அமராபதி முதலான நாடுகளில் திருவரகுளமுடையானின்  சாதியை மறவர் என்று அழைக்கப்பட்டதை  பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.மறவர் குடியினர் பாண்டிய நாட்டில் பாடிகாவல் (ஊர்காவல் ) செய்தார்கள்.
'கானாட்டு படைபற்று விரையாச்ச்சிலை மறவரில் நயினான் கங்கனுக்கு மேற்படியூரில்'(புதுகோட்டை கல்வெட்டு எண்-278:திருமெய்யம்,கிபி 14 ).
விரையாச்ச்சிலை-ஊர்ப்பெயர்
மறவரில் நயினான் கங்கனுக்கு -மறவர் குடியை சேர்ந்த நயினான் கங்கன் .

"ஆதி ஆரப்பியம் எங்கள் மரக்குலம் உண்டானது மலைதுவ பாண்டியனுக்கு வெகுநாள் குழந்தை யில்லாமல் அநேக தவசுகள் பண்ணி பார்வதி தேவி மும்முலை தடக்கையாகி மலைதுவ பாண்டியனுக்கு குமாரத்தியாக இருந்து ராச்சியம் பாரஞ்ச் செய்து கொண்டு இருக்கிற நாளையில் திக்கு விசயஞ்ச செய்யவேண்டி காரணத்துக்காக பராகிரம வீரத்துடனே சிறுது சைனியங்கள் வேணுமென்று அம்மனுடைய திருவுள்ளத்திலே தோன்றி அம்மனுடைய விலாப்புறத்தில் இருந்து அநேக சைனியங்கள் சிருஷ்டிதாலந்த இனங்கள் பிறக்குற போது அவளை தடியும் கையுமாக வெகு பரகிரமாய் பிறந்தார்கள் .உடனே அவர்கள் எங்களுக்கு பணிவிடை என்னவென்று அம்மனுடனே கேட்டதற்கு திக்கு விசயயார்தமாக சிருச்டிதோம் உங்கள் சாதி மரவுக்கு மரமென்று பேர் இருக்கட்டும் நாம் சிருச்டிதோ படியெனாலெ தேவனென்று பட்டபேரு வாயி அதில் அநேகம் பேருக்கு சேனாதிபதியாக கட்டளை இட்டு அந்த சுத்த வீரம் விசயத்துக்கு எழுந்தருளினாள்..
..மதுரையில் அப்போதிருந்த பாண்டிய ராஜா இந்த பெண்ணை கேட்டு திருமுகம் அனுப்பவிச்சி ராஜாவுடைய மனுடரையும் அனுப்பவிச்சார்கள் நான் குடுக்கிறதில்லை என்று உங்கள் சூரிய வங்கிசத்துக்கும் எங்க மச்ச (வம்சத்து )க்கும் ஒரு நாளும் சம்பந்தமில்லை .......
கொற்றவன் தன் திருமுகத்தை கொணர்ந்த தூதா
குறையுடலு கோமறவா கொண்டை கோட்டயம்
அற்றவர்சேர் திருவரங்க பெருமான் தோழன்
அவதரித்த திருகுலமென் அறியார் போல

யிதுஇல்லாமல் அநேக பிறபந்தாகிலும் பாடியிருக்குது அப்பால் ....வேடுவரிடத்தில் இருக்கிற ராஜா மனுடாள் திருமுகம் கொணர்ந்து கொடுத்து நடத்த செய்தியை பாண்டிய ராஜாவிடம் சொன்னார்கள் .அந்த செய்தியை கேட்ட மாத்திரமே பாடிய ராஜா கோபமாகி சமர் முயற்சினிக்கி ...'
(மருதப்ப தேவன் (மறவர் ) வம்சாவளி -D-2847).
பாண்டிய ராஜா,மறவர் குல தலைவவரின்  (மருதப்பன் தேவன் )  பெண்ணனை திருமணம் செய்வதற்காக  ஓலையை அனுப்பி வேட்டுவ குல தலைவறையும் ( பாண்டிய அரசனின் மந்திரி ) அனுப்பி வைப்பார். .உங்கள் வம்சத்துக்கும் ,எங்கள் வம்சத்துக்கும் ஒரு நாளும் சம்மந்தம் இல்லை என்றும் பாண்டிய அரசனுக்கு பெண் கொடுக்க மாட்டோம் என்றும் மருதப்பன் தேவன்,வேட்டுவ குல தலைவரிடம் ( பாண்டிய அரசனின் மந்திரி )  கூறுவார் .இங்கு நடந்த செய்தியை பாண்டிய அரசனிடம் ,வேட்டுவ குல தலைவர் கூறுவார் .பிறகு பாண்டிய அரசன் ,மருதப்பன் தேவன் மீது படையெடுத்து பற்றி மருதப்ப தேவன் வம்சாவளி வரலாறு கூறுகிறது .
மருதப்ப தேவன் வம்சாவளியினர் கண்ணப்ப நாயனாரின் வம்சாவளி என்று கூறிக்கொள்ளவில்லை .மருதப்ப தேவன் வம்சாவளியினர் திருவரங்க பெருமான் தோழன் அவதரித்த திருகுல மென்று கூறிக்கொண்டதை மருதப்ப தேவன் வம்சாவளி வரலாறு கூறுகிறது .


அகம்படி இனத்தை   பற்றிய கல்வெட்டுகள் :
'..அகம்படி வீரசோழ அநங்க கூற்றன் ..இட்ட தூண் ' ( சோழர் ,கிபி 1300,உடுமலைபேட்டை ,கடத்தூர்).
'அனுபத்தூர் அகம்படி பெண்டுகளில் களபாள நாச்சி'என்பவளை பற்றி கல்வெட்டு( S.I.I Vol-7,No-104) கூறுகிறது .
'...குறுப்பு நாட்டு விஜயமங்கலத்து தேவரடியாரில் மாணிக்கதேவர் அகமுடையார் பொன்னாச்சி ஆளுடையார் திருநாகிஸ்வரமுடையார் ..' ( பாண்டியர் ,கிபி 1277,,விஜயமங்கலம் ,1905:587).

   'பிள்ளை மகாவலி வாணராயர் அகம்படி முதலிகளில் பெரியான் வுய்யவந்தனான விக்ரமசிங்க தேவன் ' என்பவரை பற்றி மதுரை திருமங்கலம் ,ஆனையூர் கல்வெட்டு (கிபி 13) கூறுகிறது .
அகம்படிகளுக்கு 'பிள்ளை மாவலி வாணராயர் ' என்ற பட்ட பெயர் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .