Monday 6 March 2017

கொங்கு தாசிகள்



கொங்கு நாட்டில் தேவரடியாள் பெண்களை தேவதாசி ,தாசி ,மாணிக்கி என்று அழைக்க பட்டது .சென்னை மாகாண அரசால் தேவதாசி முறை ஒழிக்க பட்டது .இன்று  இந்த பழக்க வழக்கங்கள் கொங்கு நாட்டில்  கிடையாது .
தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -2 இல் 'தேவதாசி' பற்றி கூறப்பட்டுள்ளது . கொங்கு வேளாள சாதியை சேர்ந்த பெண்கள் தேவரடியாள்களாக இருந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் உறுதி படுத்துகிறது.

கொங்கு நாட்டில்  தாசிகளின் சடங்குகள் பற்றி தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3 இல் கூறப்பட்டுள்ளது .
'தாசியாக  நேர்ந்தளிக்கபடும் சிறுமிக்கு பாடவும் ஆடவும் கற்றுதரப்படுகிறது .நாட்டியம் கற்று தரும் நட்டுவனார் கைக்கோளர் சாதியை சேர்ந்தவராகவும் ,பாட்டு கற்று தருபவர் பிராமணர் சாதியை சேர்ந்த பாகவதராகவும் இருப்பர் . நேர்ந்து விடப்படும் சிறுமி பூப்படைந்த பின் நடைபெறும்    தாலி கட்டும் சடங்கின் போது அவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்கும்படி செய்வர் .அவளுக்கு முன்பக்கம் அதே போல நெற்  குவியலின் மீது  நிற்கும் இரண்டு தாசிகள் மடிக்கபட்ட  ஒரு சேலையினை பிடித்து கொண்டு நிற்பர்.    அச் சிறுமி அத் துணியினை பிடித்து கொள்வாள் .அவளுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் நட்டுவனார் அவளுடைய கால்களை பிடித்தபடி  முழங்கும் இன்னிசைக்கு  கேற்ப   மேலும் கீழும் அசைப்பார்.அன்று பகல் உறவினருக்கும் நண்பர்களுக்கும் விருந்தளிப்பர் .மாலையில்  அச்சிறுமியை ஒரு  மட்ட குதிரையில் அமர்த்தி கோயிலுக்கு கொண்டு செல்வர் .  அங்கு தெய்வத்திற்கான புதிய துணி,தாலி,பூசைக்கு வேண்டிய பொருள்கள் ஆகியன தயார் படுத்தபட்டிருக்கும் ..அச் சிறுமியனை கோயிலுள்ள தெய்வத்தின் சிலையை நோக்கி அமர் செய்து    பூசை செய்யும் பிராமணர் அவளுக்கு பூவும் சந்தனமும் வழங்கிய பின் தெய்வத்தின் காலடியில் வைக்க பட்ட தலையினை அவள் கழுத்தில் கட்டுவார்.தாலி தங்க தகடும் பாசி மணிகளும் கொண்டதாக இருக்கும் கூடி இருப்பவர்களுக்கும் பாக்கு பூவும் வழங்கிய பின்பு ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அவளை வீட்டிற்கு அழைத்து செல்வர் .  அதன் பின்பு ஆடலும் பாடலும் கற்று வரும் அவள் திருமணம் சார்ந்த ஒரு சடங்கினை செய்து கொள்வாள் .நல்லதொரு நாளில் உறவினர்களை அழைத்து அப்பெண்ணின் தாய் மாமனோ அவன் சார்பில் ஒருவனோ   பெண்ணின் நெற்றியில் தங்க தகடு அணிவிப்பான்.அதன் பின் அவளை தூக்கி சென்று          கூடியிருந்த விருந்தினர்கள் முன் ஒரு பலகை மீது அமர்த்துவான் .பிராமண புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதி புனித நெருப்பினை மூட்டுவார்.பெண்ணின் தயார் பெண்ணின் மாமனுக்கு புதிய உடைகளை வழங்குவாள் .அந்த பெண்ணோடு அன்று உடலுறவு கொள்ள செல்வனான  ஒரு பிராமணனோ அது இயலாதாயின் ஒரு வசதியற்ற ஒரு பிராமணனோ ஏற்பாடு செய்யப்படுவார் .கோயிலிலுள்ள தெய்வத்திற்கு அடுத்த படியாக அதனுடைய பிரதிநிதியாக பிராமணன் இருப்பதாலே அவனை இதற்காக தேர்ந்தெடுக்கின்றன ர் .  அவளோடு முதல் உறவு கொள்பவன் அவள் பக்கத்தில் சில மணி துளி நேரம் படுக்கையில் ஒரு வாளினை வைத்திருந்த பின்னரே உறவு கொள்ள வேண்டும் என்பது வழக்கம் என்று கூறப் படுகிறது .'
'சாதி தலைவன் தாலி எனப்படும் நாட்டு பொட்டினை கட்டி அவர்களை தாசியாக்க படுவான் '                                 
'கொங்கு வெள்ளாளர் முறையான கொங்கு வெள்ளாளர் ,தொண்டன் அல்லது இளகன்பன் கூட்டம் என்ற இரண்டு அகமண கட்டுப்பாடு உடைய பிரியுகளாக பிரிக்கபட்டு உள்ளது .பின்னவர் இச்சாதி பெண்களும் ,கைம்பெண்களும் வேறு சாதியோரோடு கொண்ட முறைஅற்ற உறவின் காரணமாக பிறந்தவர்கள் '
(தென்இந்தியா குடிகளும் குலங்களும் தொகுதி -3).
                                                      தேவரடியாள் சாதி
கொங்கு வெள்ளாள கவுண்டர்களின்(கொங்கு வேளாளர் சாதி) பெண்களை 'மாணிக்கி' சடங்குகள் செய்ததை பற்றி பட்டயங்கள் கூறுகிறது .
தூரன் குல செப்பேடு (கிபி 16):
தூரன் வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தூரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது .மேலும் இதற்கு ஆதி சைவ மறையோர் (பிராமணர் ),வாள் அரசரில் பண்டி வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டிகவுண்டர், பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
செல்ல குல செப்பேடு(கிபி 16):
செல்ல வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை கொன்னை செல்லாண்டியம்மன் மற்றும் பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயில்களில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'செல்லகுல மாணிக்கி' என பேர் வைத்து ,பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயிலில் நாட்டியம் நடத்தை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.மேலும் இதற்கு ஐய்யர்,அகரம் ஊரை சேர்ந்த வேட்டுவரில் தூங்ககவுண்டன், குன்னாடி வேட்டுவன் ,புல்லை வேட்டுவன் ,நரி வேட்டுவன் ,வேம்ப வேட்டுவன் ,சாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்த முகைகாளி ,பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
தேவேந்திர குல செப்பேடு(கிபி 18):
தேவேந்திர வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தேவேந்திரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
'இவ்வூர் தேவரடியாரில் காமிண்டனான மாணிக்க சதிரன் '(பெருந்துறை கல்வெட்டு ,கிபி 1225)
'குறுப்பு நாட்டு தேவரடியாரில் சடையமேலிருந்தாள்'(விஜய மங்களம் கல்வெட்டு ,கிபி 1284).
'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் கல்வெட்டு ,கிபி 1853)
செம்பூத்த குலம்- கொங்கு வெள்ளாள கவுண்டர்
மாணிக்கி என்பதற்கு தேவரடியாள் என்று பொருள் என்பதை
கோனாடு பகுதியில் கிடைத்த கல்வெட்டு(PSI-817) ஓன்று மூலம் அறியலாம் .
வேட்டுவ மன்னர்கள் கொங்கு நாட்டில் 32 ஊர்களில் தாசிகளை வைத்து தாசிகளை 'மாணிக்கி' என அழைக்க பட்டதை சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .