Sunday 21 August 2016

கொங்கு வெள்ளாள கவுண்டர்ளின் வரலாற்று திருட்டு


வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் :
'...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து ..,
(1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு )
'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )
இக்கல்வெட்டு
அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம்
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
'...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..'
(காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி )
இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது .
இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை .
இது போலத்தான் மற்ற குலங்கள். இந்த உண்மையை வெள்ளாளர்கள் மறைத்து ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள் .
                                                                வெள்ளாளர்களின் போலி பட்டயங்கள் மற்றும் போலி வரலாறுகள்:

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:

மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.

வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி வரலாறுகள் :
தீரன் சின்னமலை -போலி வரலாறு
பொன்னர் -சங்கர் கதை -போலி வரலாறு


No comments:

Post a Comment