Saturday 23 July 2016

காலிங்கராயன் அணை

காலிங்கராயன் அணை -ஓர் ஆய்வு

கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
காலிங்கராயன் வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள் ,உண்மைகள் என கலந்து இருக்கிறது.(சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள் ).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர் செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை எழுதி கொண்டார் .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி.
காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும் ,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும் .
'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.

No comments:

Post a Comment