Tuesday 19 July 2016

தேவரடியாள் சாதி


கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் பெண்களை 'மாணிக்கி' சடங்குகள் செய்ததை பற்றி பட்டயங்கள் கூறுகிறது .

தூரன் குல செப்பேடு (கிபி 16):
தூரன் வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தூரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது .மேலும் இதற்கு ஆதி சைவ மறையோர் (பிராமணர் ),வாள் அரசரில் பண்டி வேட்டுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டிகவுண்டர், பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

செல்ல குல செப்பேடு(கிபி 16):
செல்ல வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை கொன்னை செல்லாண்டியம்மன் மற்றும் பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயில்களில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'செல்லகுல மாணிக்கி' என பேர் வைத்து ,பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயிலில் நாட்டியம் நடத்தை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.மேலும் இதற்கு ஐய்யர்,அகரம் ஊரை சேர்ந்த வேட்டுவரில் தூங்ககவுண்டன், குன்னாடி வேட்டுவன் ,புல்லை வேட்டுவன் ,நரி வேட்டுவன் ,வேம்ப வேட்டுவன் ,சாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்த முகைகாளி ,பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

தேவேந்திர குல செப்பேடு(கிபி 18):
தேவேந்திர வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தேவேந்திரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.


 'இவ்வூர் தேவரடியாரில் காமிண்டனான மாணிக்க சதிரன் '(பெருந்துறை கல்வெட்டு ,கிபி 1225)
'குறுப்பு நாட்டு தேவரடியாரில் சடையமேலிருந்தாள்'(விஜய மங்களம் கல்வெட்டு ,கிபி 1284).

'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம் '
(காங்கேயன் ,ஊதியூர் கல்வெட்டு ,கிபி 1853)
செம்பூத்த குலம்- கொங்கு வெள்ளாள கவுண்டர்
மாணிக்கி என்பதற்கு தேவரடியாள் என்று பொருள் என்பதை
கோனாடு பகுதியில் கிடைத்த கல்வெட்டு(PSI-817) ஓன்று மூலம் அறியலாம் .
வேட்டுவ மன்னர்கள் கொங்கு நாட்டில் 32 ஊர்களில் தாசிகளை வைத்து தாசிகளை 'மாணிக்கி' என அழைக்க பட்டதை சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

No comments:

Post a Comment