Sunday 24 July 2016

வெள்ளாளர்களின்(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) குல பிரிவுகள்

வெள்ளாளர்களின்(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) குல பிரிவுகள் -ஓர் ஆய்வு

அந்துவ வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் அந்துவ வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
சேர வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் சேர வெள்ளாளர்கள் என அழைக்கபட்டது .
மலைய வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் மலைய வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
காடை வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் காடை வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
செம்ப(செம்பியன் ) வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் செம்ப வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
வேந்த வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் வேந்த வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
மூல வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்கள் மூல வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
 

இது போல வெள்ளை வேட்டுவ குலத்தவர்கள் ,நரம்ப வேட்டுவ குலத்தவர்கள்,மணிய வேட்டுவ குலத்தவர்கள்,படைத்தலை வேட்டுவ குலத்தவர்கள்,செந்தலை வேட்டுவ குலத்தவர்கள்,பொன்ன வேட்டுவ குலத்தவர்கள்,முழுகாதன் வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை வெள்ளை வெள்ளாள குலம் ,நரம்ப வெள்ளாள குலம்,மணிய வெள்ளாள குலம்,படைத்தலை வெள்ளாள குலம்,செந்தலை வெள்ளாள குலம்,பொன்ன வெள்ளாள குலம்,முழுகாதன் வெள்ளாள குலம் என அழைக்கபட்டது .
இது போல வெள்ளாளர்களுக்கு 25 குல பிரிவுகள் உருவானது .

வெள்ளாளர்களை 128 குல பிரிவுகளாக பிரிக்கபட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த கோப்பான மன்றாடியார் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது .

வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் குல பிரிவுகளை பார்த்து வெள்ளாள இனத்தினர் குல பிரிவுகளை உருவாக்கி கொண்டார்கள் .இப்படித்தான் வெள்ளாளர்களுக்கு குல பிரிவுகள் உருவானது .
வெள்ளாளர்களுக்கு குலங்கள் உருவான பிறகு வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் திருமண முறைகளை பார்த்து திருமண முறைகளை உருவாக்கி கொண்டார்கள் .இது போல வெள்ளாள இனத்தினர் ,வேட்டுவ இனத்தவர்களின் வழிபாட்டு முறைகளை பார்த்து வழிபாட்டு முறைகளை உருவாக்கி கொண்டார்கள்.

No comments:

Post a Comment