Sunday 7 August 2022

கொங்கு வேளாள சாதியினர் அரசர் வர்ணத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்கு ஆதாரங்கள்

கொங்கு வேளாள சாதியினர் அரசர் வர்ணத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்கு ஆதாரங்கள்: 

 

ஆதாரம் 1 :

 

இலக்கியம்  மற்றும் கல்வெட்டுகளில்  வேளாளர்  என்ற சொல் ஒரு குடிப்பெயர் சொல் ஆகும் .

நூல்களில் மரபு நிலை திரியாதவாறு சொற்களைக் கையாளுதல் வேண்டும் என்பதை இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் வற்புறுத்துவதை தொல்காப்பியர் காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளதை,

 

மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை

மரபு வழிப்பட்ட சொல்லி னான (தொல். பொருள்.636)

 

மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் (தொல். பொருள்.637)

 

என்னும் நூற்பாக்கள் சுட்டுகிறது.

தொல்காப்பியத்தில்தான்வேளாண்என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105 ஆம் சூத்திரத்தில்வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்என்ற அடிக்கு, ‘தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்குவேளாண்என்ற சொல், ‘உபகாரம்என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112 ஆம் சூத்திரத்தில் கூறப்படும்வேளாண் பெருநெறிஎன்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், ‘வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்கஎன்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

கலித்தொகை 101 ஆம் பாடலில்வேளாண்மை செய்தன கண்என்ற வரிக்குதலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தனஎன்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மைஎன்ற சொல்லிற்குவிருந்தோம்பல்என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும்வேளாண்மைஎன்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:

 

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டுகுறள் 81

 

விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டுஎன்பதற்குவிருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டுஎன்பது பரிமேலழகர் உரை. பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மைஎன்ற சொல்லுக்குஉபகாரமும் மெய்யுபசாரமும்என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.

 

வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சிதொல். பொருள். 628

 

முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது.

 

சூத்திரர்என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.

வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள் . (வேளாண் வாயில் வேட்ப கூறி - பொரு 75, கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் - புறம் 74/4).

 

வேளாண் என்ற சொல் உபகாரம் செய்தல் ,உபசரித்தல் போன்ற பொருள்கள் இருப்பதை குறிப்பதாக

 

வேளாண் எதிரும் விருப்பின்-கண்ணும் - பொருள். கள:16/8

வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும் - பொருள். கள:23/23

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது

இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி - பொருள். மரபி:80/1-2

வேளாண் வாயில் வேட்ப கூறி - பொரு 75

கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் - புறம் 74/4

 

என்ற  அடிகளில் அமைத்துள்ளது .

 

வேளாளன் என்ற சொல் பயிர் தொழில் செய்யும் வெள்ளாள சாதியை குறிப்பதாக

………………………..எருது தொழில் செய்யாது ஓட

விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம்  பரி 20/62-63

எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் - நான்மணி 52/1

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான் - திரி 12/2

வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து -பெரியபுராணம்  7.வார்கொண்ட:1 2/2 

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

வெள்ளாள சாதியினரை' வேளாளர் ' என்று அழைக்கப்பட்டத்தை சோழன் பூர்வபட்டயம் ,செப்பேடுகள் ,மெக்கென்சி ஆவணங்கள் ,கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

பெரும்பாண் ஆற்றுப்படை 210-213,228-256;  மதுரை காஞ்சி 258-262;,குறுந்தொகை 309/1-6; ,புறநானூறு  31/1-11  போன்ற இலக்கியங்கள் உழவு தொழில் செய்யும் உழவு தொழிலாளர்களை பற்றி கூறுகிறது .

 

ஒரு மக்கள் குழுவினர் பயிர் தொழில் செய்யும் வினையை செய்தார்கள் .இது இவர்களின் தொழிலாக இருந்தது .இவர்களை ஏரின் வாழ்நர் ,வேளாளர்(வெள்ளான் ,வெள்ளாளர்) என்று சங்க இலக்கியங்கள் கூறுகிறது.( வெள்ளாளர் எனவழங்கும் இன்றைய சொல்லாட்சியின் ஆதிவடிவம் வேளாளன் என்பதாகும் என்பதை பரிபாடல் கூறுகிறது,(பரிபாடல்:20)

 

வேளாண் மாந்தர் இயல்பு :
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப - பிறவகை நிகழ்ச்சி (தொல்காப்பியம் ,மரபியல் : 81)
பொருள் : வேளாளருக்கு உழுது உண்ணும் வாழ்க்கை அல்லாது வேறு வகையான வாழ்க்கை இல்லை என்று கூறுவர் அறிஞர்.

வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்த்தனர் என்ப - அவர் பெரும் பொருளே (தொல்காப்பியம் ,மரபியல் : 82)

பொருள் : வேந்தன் கட்டளையிட்ட  பணியை செய்யும் போது பாதுகாப்புக்காக படையும் ,வாழ்த்துகின்ற பூச்சரமும் வேளாள சாதியினர் பெறும் பொருள்களாகும் .

விளக்கம் :

வெள்ளாள சாதியை சேர்ந்த புலவர்கள் வேந்தர்களிடம் தூதுவர்களாக(புலவர்கள் ) பணியாற்றினார்கள் .தூதுவர்கள் பாலை நிலத்தை கடந்து செல்லும் போது திருடர்களால் பாதிப்பு வரும் .இதனால் வேந்தனிடம் படையை பெற்று கொண்டு பாலை நிலத்தை கடந்து செல்லுவார்கள் .

 

"இடைஇரு வகையோர் அல்லது நாட்டின்

படைவகை பெற்றோர் என்மனார் புலவர்" (தொல் மரபியல் 621)

 

உரை : இடையில் இருக்கும் இரண்டு (அரசர் ,வணிகர் ) வகையினரை தவிர பிறர் (அந்தணர் , வேளாண் மாந்தர் ) படைகளை வைத்து இருப்பதில்லை என்று கூறுவர் அறிஞர் .

விளக்கம் :

ஊர் மற்றும் நாட்டை காக்கும் அரசர்களுக்கும் ,பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வணிகர்களுக்கு  படை தேவைப்படும் .பயிர் தொழில் செய்யும் வெள்ளாள சாதியினருக்கு படை தேவை இல்லை .அந்தணருக்கு படை தேவை  படாது.

 

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே.

(தொல்காப்பியம், கற்பு 142)

உரை : அந்தணர் அரசர் வணிகர் ஆகிய மூன்று வருணத்தார்க்கும் உருவாக்கப்பட்ட திருமணம் எனும் நடைமுறை நான்காம் வருணத்தார் ஆகிய வேளாள சாதியை சேர்ந்தவர்களிடம் காலத்தினூடே பரவியது .

 

எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்,

ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு

அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச்

செறிவு உடையான் சேனாபதி. நான்மணிக்கடிகை - 52

 

    உழவு மாடுடையவன் வேளாளன். ஒரு காலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப் போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன். அழகும் அறிவும் உடையவள் வாழ்க்கைத் துணை. சேனையோடு ஒன்றுபட்டு உடனுறைபவன் சேனாபதி.

 

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;

கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்

கேள் ஆக வாழ்தல் இனிது. திரிகடுகம் -12

 

  முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். பயிர் தொழில் செய்யும் வேளாளன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

 

வேளாளர்க்கு அழகு :

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல்,

உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும்

அழகு என்ப வேளாண் குடிக்கு. திரிகடுகம் -42

 

     சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும், பிராமணரை அஞ்சி நடத்தலும், பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்கு அழகு.


உழவனின் இலக்கணம்

ஒரு நல்ல உழவன் தன் நிலத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலைச் சேர்த்து வைத்திருப்பான் நாள்தோறும் உழுது ஏரைப் போற்றுவான் புன்செய் நிலத்தையும் திருத்துவான்.எருவிடுவான் கலப்பையால் நிலத்தைப் பண்படுத்துவான்.இதனை,

 

நன் புலத்து வை அடக்கி,நாளும் ஏர் போற்றி

புன் புலத்தைச் செய்து எருப் போற்றிய பின் நன் புலக்கண்

பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே

நுண் கலப்பை நூல் ஓதுவார்  (சிறுபஞ்ச.58)

 

என்ற பாடலில் மூலம் உழவரின் இலக்கணத்தை அறியமுடிகிறது.

 

உழும் போது சால் போகும் வழியை கவனிக்க வேண்டும் என்பதை,

 

சால் நெறிப் பாரா உழவனும் தன் மனையில்

………………………………………………

………………………………….இம்மூன்றும்

கடன் கொண்டார் நெஞ்சில் கனா   (திரிகடுகம்.மி.பா.3)

 

என்ற பாடலின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.உழவுத் தொழிலில் ஏர் பூட்டி உழுவதற்கு முன் அதன் குறைப்பாடுகளை அறிந்து ஏர் பூட்ட வேண்டும் அப்படி பூட்டாமல் இருந்தால் அவன் உயிருடன் இருந்தாலும் இறந்ததிற்கு சமம் என்கிறார் நல்லாதனார்,

 

ஏர்க் குற்றம் பாரா உழவனும் …………..

……………………………………………

…………………………………இஇம்மூவர்

இருந்திட்டு என்?போய் என்,இவர்?    (திரிகடுகம்.மி.பா.4)

 

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

 

நெற்பயிர் விளை       (ஆத்திசூடி.72)

நெற்பயிரை விடாது விளைத்திட வேண்டும்.

பூமி திருத்தி உண்      (ஆத்திசூடி.82)

உன் விளைநிலத்தில் நீயே உழைத்து உணவை விளைத்து உண்பாயாக என்று குறிப்பிடுகிறது.

 

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய ஒரு புறநானூற்றுப்பாடல் தமிழ்ச் சமுதாயத்தில் அன்று வழக்கிலிருந்த நான்கு வருண பாகுபாட்டைக் குறிப்பிடுகின்றது.

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழப்பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே (புறம் 183/8-10)

மணிமேகலையும் நான்கு வருணத்தைக் கூறுகின்றது.
அருந்தவர்க் காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி.
(
மணிமேகலை: 6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை: 7)

கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரமும் நால்வகை வருணங்களைக் குறிப்பிடுகின்றது.

கனக பாதமுங் களங்கமும் வந்துவும்
நால்வகை வருணத்து நலங்கே மொழியவும் (சிலம்பு-14-180-82)
பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு (சிலம்பு-22-110)
பால்வேறு தெரிந்த நால்வேறு வீதி (சிலம்பு ஊர் காண்காதை-212)
இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப (சிலம்பு கடலாடு காதை. 6-8-164-165)

புறப்பொருள் வெண்பா மாலை வேளாண் வாகைப் பற்றிக் கூறுவதாவது :
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று (வாகைத்திணை -10-165)

இங்கு மேல் மூவரும், வேளாளரும் சேர்த்து நான்கு வருணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வேளாளராகிய சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல இடங்களில் வேளாளரை நாலாவது குலம் எனக் குறிப்பிடுகின்றது.

குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும் (குலச்சிறையார்.4)

நாலாங் குலத்திற் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிற்றுக் கிழார். (29. ஏயர்கோன் - கலிக்காமநாயனார்)

வேத நெறியின் முறை பிறழாமிக்க ஒழுக்கத் தலைநின்ற
சாதி நான்கு நிலை தழைக்குந் தன்மைத் தாகித்தடமதில் சூழ் (37. சுழற்றியார்.4)

ஓங்கிய நாற்குலத் தொஏவாப் புணர்வில் தம்மில்
உயர்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம் (19. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். செ.103)

 

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்

நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்

தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்

(பெரிய புராணம், பன்னிரண்டாம் திருமுறை, பாடல் எண்:6; வாயிலார் நாயனார் புராணம்)

உரை :

நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெரு நகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயி லார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.

 

உபகாரம் அல்லது உபசரித்தல்  செய்பவர்களின் சாதியை குறிப்பதாக

பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் - 2.தில்லை:6 4/1

மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை - 3.இலை:5 7/3

மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் - 3.இலை:6 4/4

விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி - 4.மும்மை:5 102/1

விலக்குஇல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண்

குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர் தம் குடி விளங்கும் - 5.திருநின்ற:1 15/3,4

முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் - 5.திருநின்ற:1 22/2

தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் - 6.வம்பறா:5 2/4

வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் - 8.பொய்:7 2/1

விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் - 9.கறை:5 2/1

சீரின் விளங்கும் பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் - 10.கடல்:3 2/1

நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண்

குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் - 10.கடல்:5 1/1,2

 

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

 

பயிர் தொழில் செய்யும் வெள்ளாள சாதியை குறிப்பதாக

புலத்தின் வாழ்நரும் - பெருங்கதை ,வத்தவ 2/47

நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று - தேவா-சம்:1390/3

உழவர் ஒலியும் களமர் கம்பலும் - உஞ்ஞை 48/161

நாறு உடை நடுபவர் உழவரொடும்

சேறு உடை வயல் அணி சிவபுரமே - தேவா-சம்:1212/3,4

கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு - சிந்தா:3 719/2

நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான் - சிந்தா:13 2910/4

தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே - சிந்தா:1 51/4

வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை - புகார் 5/43

வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு - புறம் 230/13

ஏனல் உழவர் வரகு மீது இட்ட - பதி 30/22

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் - பதி 90/41

மென்புலத்து வயல் உழவர்/வன்_புலத்து பகடு விட்டு - புறம் 395/1,2

ஏனல் உழவர் வரகு மீது இட்ட - பதி 30/22

தண்டலை உழவர் தனி மட_மகளே - நற் 97/9

நல் எருது நடை வளம் வைத்து என உழவர்/புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு - நற் 315/4,5

கழனி உழவர் கலி சிறந்து எடுத்த - அகம் 266/17

கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த - அகம் 194/13

பல் விதை உழவின் சில் ஏராளர்/பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் - பதி 76/11,12

ஏரின்வாழ்நர் பேர் இல் அரிவையர் - புறம் 33/4

ஏரின் வாழ்நர் குடி முறை புகாஅ - புறம் 375/6

 

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

 

பயிர் தொழில் செய்யும் வேளாளர் சாதியை குறிப்பதாக

 …………………………………. எருது தொழில் செய்யாது ஓட

விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம் -பரிபாடல் 20/62 ,63

எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் -  நான்மணிக்கடிகை52/1

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான் - திரிகடுகம் 12/2

ஏரின் வாழ்நர் குடி  - புறம் 375/6

என்ற அடிகளில் அமைத்துள்ளது .

 

வேளாளர் சாதியினரை   வேளாண் மாந்தர் ,ஏரின் வாழ்நர்,உழவர்  போன்ற போன்ற பெயர்களால் அழைக்கப் பட்டனர் .

'செட்டிகள் வெள்ளாளர் (PSI-285),'வர்தகர் குடியானவர் (PSI-876)                                                    

'நம்மூரில் பிராமணர் என்றால் சிவபிராமணர் என்றால் கணக்கர் என்றால் வியாபாரிகள் என்றால் வெள்ளாழர் என்றால் மற்றும் எப்பேர்ப்பட்ட சாதிகள் என்றும் ' (கிபி 10; உத்திரமேரூர்; Epigraphia Indica Vol-22, No-32).

வெள்ளாள சாதியினர் நான்காம் வருணத்தை சேர்ந்தவர்கள் .இதனால் வாணிக குடியை அடுத்து வெள்ளாள குடி வைக்கப்பட்டு உள்ளது .வெள்ளாள சாதியினர் அரசர் வருணத்தை சேர்ந்தவர்கள் கிடையாது .

“Throughout the Coimbatore province the Vaylalar are a numerous tribe of the Tamul race and are esteemed to be of pure Sudra cast.they are of several different kinds; such asCaracata,palay,chola,codical,cotay,Pandava and shayndalay vayalalars.of this last kind are those who give me information.all vayalalars can eat together,but these different kinds do not intermarry...at canghium manradear ,hereditary of all the shayndalay vayalalars”(Journey from madras through the countries of Mysore,Canara and Malabar ,by Francis Buchanan;A.D. 1807).

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் அரசகுல நாயன்மார்களும் ,வேளாளர் சாதி நாயன்மார்களும் தனித்தனிச் சாதியினராகவே பட்டியலிடப்பட்டுள்ளனர்.

வேளாள சாதியினர் அரச குலத்தவர்கள் கிடையாது என்பது சேக்கிழாருக்கு தெரியும் .அதனால் தான் இவ்வாறு கூறியுள்ளார் .

வேளாள சாதியினர் பூர்விக காலத்தில் இருந்து உழவுத்தொழில் செய்து வருபவர்கள் .வேளாள சாதியினர் போர் தொழில் செய்தவர்கள் கிடையாது . வேளாள சாதியினர் வேட்டுவ அரசர்களிடம் அரச அதிகாரிகளாக பணியாற்றியதை கல்வெட்டுகள் கூறுகிறது.

வேளாள சாதியினர் நான்காம் வர்ணத்தை சேர்ந்தவர்களாக இலக்கியங்களும் கல்வெட்டுகளும் கூறுகிறது ஆகவே வேளாள சாதியினர் அரச வர்ணத்தை சேர்ந்தவர்கள் கிடையாது

ஆதாரம் 2 :

தூரன் குல செப்பேடு (கிபி 16):

'இதுக்கு சாட்சி குமரமங்கலத்தில் ஆதிசைவ மறையோரில் கவுண்டின்னிய கோத்திரத்தில் அர்த்தநாரி அய்யன் லிங்கயன் வாழரசரில் பாண்டி குலத்தில் பாண்டி கவுண்டரும் விளைய கோத்திரத்தித்தில் மோழைக்கவுண்டரும் ஈஞ்ச குலத்தில் கந்தப்ப கவுண்டரும் வில்லி குலத்தில் வேல கவுண்டரும் பண்டாரம் நல்ல பில்லி ஆண்டியும் ஆசாரி வகையில் விரும கொல்லன் நாவித பிரமன் திருநீலகண்டரில் வேலன் யெங்குடி அரசப் பலகான் தோட்டியில் செங்காளி அனைவர்களும் சாட்சி "(தூரன் குல செப்பேடு;கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் காலம் (கிபி 1682 - 1689 )  .

தூரன் வேளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தூரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது .மேலும் இதற்கு ஆதி சைவ மறையோர் (பிராமணர் ),வாள் அரசரில் பண்டி வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டிகவுண்டர், பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

 

செல்ல குல செப்பேடு(கிபி 17):

செல்ல வேளாள குலத்தை சேர்ந்த பெண்ணை கொன்னை செல்லாண்டியம்மன் மற்றும் பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயில்களில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'செல்லகுல மாணிக்கி' என பேர் வைத்து ,பருத்திபள்ளி அழகுனாட்சி அம்மன் கோயிலில் நாட்டியம் நடத்தை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.மேலும் இதற்கு ஐய்யர்,அகரம் ஊரை சேர்ந்த வேட்டுவரில் தூங்ககவுண்டன், குன்னாடி வேட்டுவன் ,புல்லை வேட்டுவன் ,நரி வேட்டுவன் ,வேம்ப வேட்டுவன் ,சாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்த முகைகாளி ,பண்டாரம் ,ஆசாரி ,நாவிதன் ,வெள்ளாளர் ,தோட்டி ஆகியோர் சாட்சி கையொப்பம் இட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

 

தேவேந்திர குல செப்பேடு(கிபி 18):

தேவேந்திர வெள்ளாள குலத்தை சேர்ந்த பெண்ணை குமாரமங்கலம் ,பொன்காளியம்மன் கோயிலில் 'மாணிக்கி' சடங்குகள் செய்து 'தேவேந்திரகுல மாணிக்கி' என பேர் வைக்க பட்டதை பற்றி இச்செப்பேடு கூறுகிறது.

அந்துவ குல செப்பேடு :

'கீழ்கரை பூந்துறை நாட்டில் இருக்கும் வேளாளர் கூத்தாடி தகடபாடியிலிருக்கும்   மங்களதேவன் மகள் நாகமலைக்கு அந்துவ குல மானிக்கி என்ற பட்டமும் 11 பணம் தட்சிணையாக வைத்து மெரவனை செய்து எட்டு வரிசை யொடமையும் செய்து அந்துவ குலத்துக்கு அயந்திரம் பண்ணையத்துக்கு ..'

(கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள், புலவர் செ.இராசு)

 

'இவ்வூர் தேவரடியாரில் காமிண்டனான மாணிக்க சதிரன் '(பெருந்துறை கல்வெட்டு   , கி பி 1225)

'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம்

(ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி1, 2007 எண்- 129/2005, காங்கேயன்   ஊதியூர் கல்வெட்டு, கிபி 1853)

செம்பூத்த குலம்- கொங்கு வெள்ளாள கவுண்டர்


மாணிக்கி என்பதற்கு தேவரடியாளின் சிறப்பு பெயர் என்பதை கோனாடு பகுதியில் கிடைத்த கல்வெட்டு(PSI-817) ஓன்று மூலம் அறியலாம் . தேவரடியாளுக்கு தேவரடியாள் காணி இருந்தது .

 

வேளாள சாதியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களை கோவிலுக்கு பொட்டு கட்டி விட்டதை கல்வெட்டுகளும் ,செப்பேடுகளும் உறுதி படுத்துகிறது .

தமிழ் அரச குலத்தவர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களை கோவிலுக்கு பொட்டு கட்டி விட்டவர்கள் கிடையாது .

 

ஆதாரம் 3 :

 

கி.பி. 12 ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக் கல்வெட்டு தெரிவிக்கிறது.( தஞ்சை கல்வெட்டு,கிபி 1168,SII VOL-6,No-48).

அங்கம் ஒடுக்கி  என்றால் உடல் ரீதியான தண்டனையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

என் வெள்ளான் அடியாரில் தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப் பிள்ளையும்,நல்லம்பிள்ளை மகன் தாயிலும்நல்லானும்,’வெள்ளாட்டி சிவந்தாலும் சேர்த்து  சில பல வெள்ளாட்டிகளும் சேர்த்து விற்ற தகவலை இந்த கல்வெட்டு கூறுகிறது.குடும்பத்தோடு வெள்ளாளன் விற்கப்பட்ட தகவல் .(திருச்சி ,திருப்பழனம் கல்வெட்டு ,SII VOL-8,NO-590).

அடிமைகள் விற்கப்பட்டனர் .இந்த அடிமைகளில் 3 பேர் வெள்ளாள குடியை சேர்ந்தவர்கள் ,16பேர் புலையர்கள் என்று செங்கல்ப்பட்டு திருகழுங்குன்றம் கல்வெட்டு கூறுகிறது .(1933:171கிபி 12).

திருப்பாம்புரத்தில் உள்ள வெள்ளாள குடியை சேர்ந்த ஒருவன் காசுக்கு மூன்று நாழி நெல் விற்கும் பஞ்சமுள்ள நேரத்தில் தன்னையும் தென் மகள் இருவரையும் மட அடிமைகளாக 32 காசுக்கு விற்ற செய்தியை தஞ்சாவூர் நன்னிலம் திருப்பாம்புரம் சோடபுரீஸ்வரர் கல்வெட்டு கூறுகிறது .(1911:86; கிபி 1201)

பிராமணரிடம் அடிமைகளாக இருந்த வெள்ளாளர் பற்றி தஞ்சை கல்வெட்டு கூறுகிறது.(SII VOL-6 No.58, 104 OF 1897)

 

வேளாள சாதியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை பணத்திற்காக  விற்றதை   கல்வெட்டுகள்  உறுதி படுத்துகிறது .

 

தமிழ் அரச குலத்தவர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை பணத்திற்காக  விற்றவர்கள் கிடையாது .

 

ஆதாரம் 3 :

சோழ ராஜா, வேளாளர்  சாதியினரை (கொங்கு வேளாளர் ) சீதனமாக சேர ராசாவுக்கு கொடுத்தான் .(மெக்கென்சி ஆவணம்  டி .2965 ,3038).

 

வேளாள சாதியினரை சீதனமாக கொடுக்கப்பட்டு உள்ளது .

தமிழ் அரச குலத்தவர்கள் தங்களது  குலத்தை சேர்ந்தவர்களை  சீதனமாக  கொடுக்கவில்லை .

 

ஆதாரம் 4 :

 

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது

பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி

குடி புறந்தருகுவை ஆயின் நின்

அடி புறந்தருகுவர் அடங்காதோரே புறம் -35 /31 -34

சிலர் கூறும் பொது மொழியை நெஞ்சில் கொள்ளாமல் உழவர் குடியைப் பாதுகாத்து, மற்றக் குடிகளையும் பாதுகாப்பாயானால், உன் பகைவர் உன்னடி போற்றுவர்.

  …………………………. ஞாலத்து

கூலம் பகர்நர் குடி புறந்தராஅ

குடி புறந்தருநர் பாரம் ஓம்பி பதிற் -13 /22 -24

நிலத்து விளையும் தானியங்களை விற்போரின் குடிகளை  காத்து, மற்ற குடிகளையும் காத்து ,

 "ஸ்வஸ்தி ஸ்ரீ கோ கலிமூர்க்க ஸ்ரீ விக்கிரம சோழ தேவருக்கு திருவெழத்திட்டுச் செங்கோலோச்சி வெள்ளி வெண்குடை மிளிர வேந்தி நாடு வளம்படுத்தி   நயுங்குடியோம்பி ஆறிலொன்று கொன்று அல்லவை கடிந்து கோவீற்றிருந்து குடிபுறங்காத்து பெற்றக் குழவி குற்ற நற்றாய் போலச்

(தாராபுரம் கல்வெட்டு, கி பி 1046, 1920:185)

நயுங்குடியோம்பி =உழவு குடிகளை காத்து

உழவு குடிகளை காத்து ,ஆறில் ஒரு பங்கு வரி வாங்கினான் என்று கூறப்பட்டு உள்ளது

பயிர் தொழில் செய்யும் வெள்ளாள சாதிகளிடம் வசூல் செய்யும் வரியை "குடி புரவு" என்று அழைக்கப் பட்டது .(புறம் 75 /4). இந்த குடி புரவு(ஏர் வரி ) சொல்லில் இருந்து குடியானவன் என்ற சொல் பிறந்தது .

வேந்தர்கள் வணிகர்களையும் (கூலம் பகர்நர் ) ,உழவர்களையும் (பகடு புறந்தருநர்) பாதுகாத்தனர் .(புறம் 35/14-15 ;பதி 13/23-24 ).

'இன்னான் கெல்லைக்குட்பட்ட நிலத்தில் உழவுகுடி கைவினைகுடி காசயெக் குடியில் கொள்ளும் சிற்றாயம் காணிக்கை கட்டாயம் சுங்கம் பட்டைவரி .... (திருப்பூர் தாராபுரம் ,கிபி13 ; 1893:581)

இங்கு உழவு குடி என்ற சொல் வேளாள சாதியினரை (கொங்கு வேளாளர் ) குறிக்கும் .

 

'தேவரடியார் மக்களும் ஏர்க்கட்டி உழுதவர்கள் முந்நாள் ஒட்டிறை '(திருப்பூர் கிபி13; 1920:218)

இங்கு ஏர்க்கட்டி உழுதவர்கள் என்ற சொல் வேளாள சாதியினரை (கொங்கு வேளாளர் ) குறிக்கும் .

'நான்கெல்லைக்குட்பட்ட நத்தம் குளம் குள பரம்பும் திறவாசல் விநியோகம் திருமஞ்சணப்படம் ஏர்க்கடமை கூத்துவரி '(கரூர் வெஞ்சமாக்கூடல் கிபி 13; SITI Vol-2 No-726)

 

கொங்கு வேளாள சாதியினர் ஏர்வரி (ஏர்க்கடமை ) கொடுத்தவர்கள் .

"வெள்ளாழ்மை செய்து” (1897:104; கிபி 12)

பயிர் தொழிலை வெள்ளாழ்மை என்று கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது .

 

வெள்ளம் (நீர் )+ ஆளுமை =வெள்ளாழ்மை

 

கழனி உழவர்கள் சங்க மற்றும் காப்பிய காலத்தில் பேசப்பட்ட  கழனி உழவர்கள் வெள்ளாழ்மை செய்து வந்தனர் .இவர்களை வெள்ளான் ,வெள்ளாளர் என்று அழைக்கப் பட்டனர் .

 

வெள்ளம்  என்ற வார்த்தைக்கு நீர்ப்பெருக்கு; நீர் போன்ற பொருள்கள் இருக்கிறது .

வெள்ளம் (நீர் ) என்ற வேர் சொல்லில் இருந்து வெள்ளான் ,வெள்ளாளர் சொற்கள் பிறந்தது .

 

.“சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக் கொள்ளப் பெறார்” (பாண்டியர் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999.)

 

கி.பி. 9ஆம் நூற்றாண்டைய ஆய் மன்னனின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டில் (வரி. 60-61) "வெள்ளாட்டி" என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

வேலைக்காரி என்பது இதன் பொருள். இச்சொல் வேளாட்டி என்பதன் திரிபாகும்

 

பரிபாடலில் மட்டும்தான் (20:62,63) வேளாளர் என்ற சொல் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்தும் உழவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. வேளாளர்கள் எருதுகளை ஏர்க்கலப்பை நுகத்தடியில் பூட்டி உழும் கடமை உடையவர்கள் என்ற கருத்தை இப்பரிபாடல் வரிகள் புலப்படுத்துகின்றன: ''எருது தொழில் செய்யாது ஓடவிடுகடன் வேளார்க்கு இன்று.'' அதாவது, உழவு மாடுகளைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கட்டாயக் கடமை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு ஏருழவு, விளைபொருள்களை வண்டியில் ஏற்றிக்கொணர்ந்து நிலக்கிழார்களிடம் ஒப்படைத்தல் போன்ற பணிகளுக்கென மட்டுமே மாடுகளைப் பயன்படுத்த வேண்டுமென்று வேளாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

 

சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை, சோழன் கோச்செங்கணானுடன் போரிட்டுத் தோற்றுக் குடவாயிற் கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான். அப்போது அவன் ஒரு பாடல் இயற்றிவிட்டு உயிர்துறந்தான். அப்பாடலில், சிறையில் அவனுக்கு வழங்கப்பட்ட உணவு ''வேளாண் சிறுபதம்'' என குறிப்பிடப்படுகிறது.(புறநானூறு 74:4.)

 வேளத்தில் வழங்கப்படுகிற அல்லது வேளாண் பெண்டிரால் சமைக்கப்படுகிற  உணவு என்பது இதன் பொருள்

 

வேளத்தில்  பணி செய்தவளை "வேளத்தாள்" என்று அழைக்கப் பட்டனர் .(SII Vo-14 No-185)

வேளாண் (உபகாரம் செய்தல் )  என்ற என்ற  சொல்லில் இருந்து வேளாளர் என்ற சொல்  உருவானது .

 

ஆதி சண்டேசுவரர் ஆணையாக பக்தன் ஆழ்வான் அண்ணாமலையானுக்கு கோவில் தானத்தார் கொடுத்த மன்றாட்டு ஒன்றும் முன்பு தானத்தார் கொடுத்த மன்றாட்டு ஐந்தும் ஆக ஆறு மன்றாட்டுகளையும் ஏற்று ஆக்க அழிவுகளை ஆராய்ந்து இவ்வூரின் நன்கு எல்லைக்கு உட்பட்ட சர்வர் பிராப்திகளும் அனுபவித்து மன்றாட்டை ஆண்டு வரும்படி ஆணையிட்டு  பலருடைய கையெழுத்துகளுடன் இக்கல்வெட்டு அமைத்துள்ளது .(கொங்கு நட்டு கல்வெட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டம் எண்-86 கிபி 13).

மன்றாட்டு நிர்வாகம் கோவில் நிர்வாகத்தோடு தொடர்புடையது .

'சேவூர் ஆண்டா மன்றாடி மக்கள் சோளியாண்டான் ' (சேவூர்,கிபி15 ),'இடிக்கரையில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் சோழ காமிண்டன் மன்றாடி '(இடிக்கரை கிபி13 ).

வெள்ளாள சாதியினர் மன்றாட்டை ஆள்பவர்களாக இருந்தார்கள் .கோவிலுக்கு  தானமாக விடப்படும் ஆடு ,மாடுகளை பராமரிப்புக்காக உருவாக்கப் பட்ட நிர்வாகம் தான்  மன்றாட்டு நிர்வாகம் .

மன்றாட்டை ஆண்டவரை மன்றாடி கிழவர் ,மன்றாடி என்றழைக்க பட்டனர். இவர்கள் அரசியல் அதிகாரிகளாகவும் இருந்தனர் .மன்றாட்டை  நிர்வாகம் செய்யும் வெள்ளாள குடியை சேர்ந்தவர்களுக்கு மன்றாட்டு காணி இருந்தது . மன்றாட்டு காணி ,மன்றாட்டு பட்டி ஆகியவற்றின் மூலம் வரும் வருவாயை பெற்றார்கள் மன்றாடிகள் .

கொங்கு வெள்ளாள சாதியினர் மன்னர்களிடம் காணி (விளை நிலம் ) பெற்று மன்னர்களுக்கு ஏர் வரி செலுத்தி வந்தனர் .(காணி ஆட்சி முறை ) .இவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்ததால் காலிங்கராயன் ,வாணராயன்,வேணாடுடையர் ,பல்லவராயன் ,காங்கேயன் போன்ற விருது பெயர்களை பெற்றனர் .இவர்களின் வம்சா வழியினரும்  இப்பெயர்களை வைத்து கொண்டார்கள் .

 

தச்சன் காணி ,கொல்லன் காணி போல வெள்ளாள சாதியை சார்ந்த புலவர்களுக்கு புலவர் காணி இருந்தது . கொங்கு வெள்ளாள சாதியினர் மன்னர்களிடம் காணி பெற்று அக்காணிகளுக்கு  ஏர்வரி செலுத்தி வந்தனர் .     

 

வேளாளர்  சாதியை சேர்ந்த புலவர்கள் மன்னர்களிடம் நிலம் பெற்று ஊர் கிழார்களாக (ஊருக்கு உரியவன் ) இருந்தார்கள் .இவர்கள் மன்னர்களிடம் அரசியல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள் .

மன்னர்கள் ,படைத்தலை நகர் ,செந்தலை நகர் ,பாலசேரி ,தென்திசை ஊர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வேளாளர்களை (கொங்கு வேளாளர் ) கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்கு அழைத்து வந்தனர்  மற்றும் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களுக்கு (சோழ நாடு ,கோனாடு ,பாண்டிய நாடு மற்றும் சேர கொங்கு நாடு  போன்ற நாடுகளை சேர்ந்த வேட்டுவ குடியினர் )  32 ஊர்களில் ஊரை ஆளும் பொறுப்பு கொடுக்க பட்டது .(சோழன் பூர்வ பட்டயம் டி .1843). 

'...பூவாணிய நாட்டு ஆவணி பேரூரில் வெள்ளாளன் பிள்ளர்களில் சொக்கன் ...'

(ஈரோடு,தொண்டீஸ்வரர் கோயில் ,கிபி 10)

"வள்ளி எரிச்சல் வெள்ளாளன் கணக்கரில் கேசன் மூக்கன்” (வள்ளி எரிச்சல் கல்வெட்டு; கிபி 1284)

'மழை நாட்டு வலிபுரத்து வெள்ளாழ குடிகளில் மகாமண்டன்' (நாமக்கல் குன்னமலை ஊர், கிபி 1202; 1913:43)

மழை நாட்டு -மழ நாடு

வலிபுரத்து -வல்லிபுரம் ஊர்

 

'இடிக்கரையில் வெள்ளாளன் பையரில் மள்ளன் சிரியான் '(கோவை, கிபி 1276)

'..கொற்றமங்கலத்தில் இருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையனேன் ஆளுடையார் வில்லிஸ் வரமுடையருக்கு ..'

(கோவை, இடிகரை, வீர பாண்டியன் (கிபி 1261-1288)

'...காங்கேய நாட்டு கரை ஊரில் வெள்ளாளன் மனியர்களில் அல்லால பெருமாள் இட்ட தூண் ...'

(காங்கேயம் கல்வெட்டு, கிபி 1448)

"வெள்ளாளன் பூசகளில் அரையன் சிரியனான வேந்தசூளாமணி பல்லவரையன்” (கிபி 13, SII Vol-5 No-264)

"வெள்ளாளன் கிழ மணியரில் நிலன் புளியனேன்" (கிபி 13, SII Vol-5 No-277)

"வெள்ளாளன் மேந் மணியரில் காவன் உடையானேன் "(கிபி 13, SII Vol-5 No-279)

 

'...கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் பிள்ளந்தை குலத்தில் பெரிய காளியப்பா கவுண்டர்.'

(அவினாசி கல்வெட்டு, கிபி 1648)

'...செம்பூத்த குல மானிக்கி தெய்வானை உபயம்'

(காங்கேயன், ஊதியூர், கிபி 1853)

செம்பூத்த குலம்- வெள்ளாளர்

மானிக்கி -தேவரடியாளின் சிறப்பு பெயர் (PSI No-817 )

'முதல் வருகிற குடியளுக்கு உழவு குடிக்கு கட்டின ஏறுக்கு அஞ்சு பணமும் '(திருச்செங்கோடு கிபி 1522; 1815:140)

உழவு குடி -கொங்கு வெள்ளாள சாதியை குறிக்கும் .

மைசூர் உடையார்கள் வரி விதித்ததை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது .

"இவ்வூர் வேளாளன் திருவானைக் காவுடையான் ஆன நாற்பத்தெண்ணாயிரப் பிச்சன் "(.நா .தொ .துறை தொடர் எண் 107A/1977; நன்னிலம் கல்வெட்டுகள்; கிபி 1191)

"..காற்றூரிலிருக்கும் வேளாளன் கூத்தாடுவான் " (நன்னிலம் கல்வெட்டு ;.நா .தொ .ஆய்வுத்துறை தொடர் எண் : 112 /1977 ;கிபி 12 )

"இளமக்கள் பற்று குன்றியூர் நாட்டு உப்பிலி குடியும் வெள்ளாளன் பற்று குருங்குடியும் "(PSI NO -23; கிபி 10).

"பிரம்மதேயம் இறக்கி வெள்ளான் வகையில் முதலெடுத்து பிரம்மதேயம் இறக்கி வெள்ளான் வகையான வெள்ளான் வகை வரிசைக் கீழ் இறைகட்டும் படியும் தேவதான முன்னிட்டு இறையிலி குடுப்பன காணிக்கடன் கீழ் இறையிலி குடுப்பன காணிக்கடன் கீழ் இறையிலி கொடுத்து வருகின்ற படிய் இந்நிலத்துக்குத் தவிர்ந்து இந்நில முன்காணி உடையாரை மாற்றி குடிநீக்கி காராண்மை மீயாட்சியும் மிகுதிக்." (கும்பகோணம் ;கிபி 1081 ; 1931 -32 :74 )

 

கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் கொங்கு வெள்ளாள சாதியினரை வேளாளர் ,வெள்ளாளர் ,வெள்ளான்,உழவு குடி,குடியானவன் என்றழைக்கப்பட்டு உள்ளனர் .

பிராமண சபையார் (பிராமண நிலக்கிழார் ) அவர்களுடைய உழுகுடிகள் (வெள்ளாளர்கள் ) செலுத்த வேண்டிய குத்தகையை குறைத்ததை பற்றி தீர்மானம் பற்றியும் ஆச்சாள்புரம்  கல்வெட்டு கூறுகிறது .

பழுயூரில்  மன்றாடிகள் ,வேட்கோவர் ,உழுகுடிகள் போன்ற தொழிலாளர்களை பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது.(SII Vol-13 No-209; SII Vol-19 No-238).

புல்லை ,மூல ,செம்ப,செய்யர்,படைத்தலை ,அந்துவ ,மணிய,வெள்ளை ,வேந்த ,காடை ,காரி ,ஆந்தை ,மாந்த ,பாண்டிய,பனைய,வெளிய ,பூச்சந்தை போன்ற கூட்ட பெயர்கள் வேட்டுவர் குடிக்கும் ,வேளாளர் குடிக்கும் ஒன்றாக இருக்கிறது .

 

காடை வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வேளாளரை காடை  வேளாளர் குலம் என்று அழைக்கப்பட்டனர் .இன்று காடை வேட்டுவ குலத்தவர்கள் தங்களை காடை வேட்டுவ குலம் என்று கூறுகிறார்கள் .இன்று  காடை  வேளாள குலத்தினர் தங்களை காடை வெள்ளாள குலம் என்று கூறுகிறார்கள் .

அந்துவ வேட்டுவ குலத்தவர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்த வேளாளரை அந்துவ வேளாளர் குலம் என்று என்று அழைக்கப்பட்டனர்.சோழ( செம்பிய )வேட்டுவர் அரசாட்சி செய்த பகுதியில் உழவு தொழில் செய்த வேளாளரை சோழ வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். பாண்டிய வேட்டுவர் அரசாட்சி செய்த பகுதியில் உழவு தொழில் செய்த வேளாளரை பாண்டிய வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.

 

இது போல தான் அந்த கூட்ட பெயர்கள் உருவாகி இருக்கிறது..

கொங்கு வேளாள சாதியினர் போர்த்த்தொழிலில் ஈடுபடவில்லை. ஆகவே இவர்களுக்கு கொங்கு நாட்டில் நடுகற்களே கிடையாது.

கொங்கு வெள்ளாள சாதியினரை 124  கூட்டங்களாக  பிரித்து காணியாட்சி கொடுக்கப் பட்டத்தை கொங்கு காணியாள பட்டயம் கூறுகிறது . கிபி 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கொங்கு வெள்ளாள சாதியினருக்கு கூட்டங்கள் கிடையாது என்பதை இப்பட்டயம் உறுதிப்படுத்துகிறது

"வேளாளர் என்று பேர் வரப்பட்டவர்களாய் சேர தேசத்தில் வந்து இருந்த இடத்தில் பூர்வத்தில் இந்த சேர தேசத்தில் குடித்தனம் பண்ணப்பட்ட  மாவிலவன் ,பூவிலவன் ,காவிலவன் ,வேடன் ,வேட்டுவன் இந்த சாதிகளுக்கு இருக்கப்பட்ட காணிகளிலே இந்த வேளாளருக்கு பாதி பிறிச்சி இடம் பண்ணி கொடுத்தார்கள் " (மெக்கென்சி  டி .3038) 

 

வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகளுக்கு சொந்தமாக இருந்த காணிகளை வேட்டுவ குடியை சேர்ந்த அரசர்கள்,உழவு தொழில் செய்வதற்காக வெள்ளாள (கொங்கு வெள்ளாளர் )  சாதியினருக்கு கொடுத்தார்கள் . 

 

விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருள்களை வணிகம் செய்வதற்காக பல குடிகளை சேர்ந்தவர்கள் ஓன்று சேர்ந்து ஒரு வணிக குழுவை (சித்திர மேழி )உருவாக்கினார்கள் இதனால் இவர்கள் ஏர் கலப்பையை தங்களது சின்னமாக வைத்து கொண்டார்கள்.

சித்திர மேழி மலை மண்டலம் தேசிபற்றி பெரம்பலூர் வெண்பாவூர் கல்வெட்டு( கிபி 12) கூறுகிறது பெரம்பலூர் அரியலூர் திருவண்ணாமலை பகுதிகளை சித்திர மேழி பெரிய நாடு என்று அழைக்கப் பட்டது. (SII Vol-7 No-129,SII Vol-8,No-198,291:1943-44:276)

சித்திரமேழி கோன்  (SII Vol-18 No-45) ,எழுநூற்றுவ மன்றாடி, ஐந்நூற்றுவ மன்றாடி, கவரை மன்றாடி( SII Vol-13 No-130)

சித்திர மேழி பெரிய நாட்டில் கோனார்கள் (ஆயர் ) வணிக தொழில் ஈடுப்பட்டார்கள் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்தும்.

சித்திரமேழி பட்டன் (1920:122),சித்திரமேழி தட்டான்(1920:252)  பற்றிய கல்வெட்டுகள் தாராபுரம் காங்கேயம் பகுதியில் கிடைத்து உள்ளது.

பழனி கோதைமங்கலத்தில் எழுத்து பொறிக்கப்படாத குடை சாமரங்கள் கலப்பை விளக்கு குதிரை போன்ற உருவங்கள் மட்டும் பொறிக்கப்பட்ட வணிகக்குழு கல் ஓன்று இருக்கிறது. இக்கல்லில் வில், அம்பு, வாள் போன்ற உருவங்கள் பொறிக்கப்படவில்லை. கம்மியர் சாதியை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் வணிக தொழில் ஈடுபட்டார்கள் சித்திரமேழி தட்டான் என்று அழைக்கப்பட்டனர் ஆகவே கம்மியர் குடியை சேர்ந்தவர்கள் கோதைமங்கள கல்லில் உருவங்களை பொறித்து நட்டு இருக்கிறார்கள் இந்த வணிக குழு கல் வேளாள சாதியை சேர்ந்தவரை குறிக்காது.

தமிழ் வேட்டுவ குடியினர் சித்திரமேழி என்ற வணிக குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்தனர் .இதனால் இவர்களை சித்திரமேழி கொடி படைத்த பெரியோர் என்று செப்பேடுகளில் கூறப்பட்டு உள்ளனர் .


சேனாதிபதி கவுண்டர் என்று பேர் உண்டான இம்முடி குமார சோழியாக்கவுண்டன் சஹஞ்சி சிவாசி என்கிற மராட்டியுடனே யுத்தம் பண்ணி அத்தியா காலத்திலே ரண சங்கத்திலே வீர சுவர்க்கம் அடைஞ்சார்(.மெக்கென்ச்சி ஆவணம், D.2968)

வெள்ளாளன் மராட்டிய மன்னன் சிவாஜியுடன் போர் செய்தான் என்று கூறி இருப்பது ஒரு தற்புகழ்ச்சி ஆகும். கற்பனை புனைவுகள் ,தற்புகழ்ச்சி .பொய் உரைகள் போன்றவைகள் மெக்கென்சி கை பீதுகளில் நிறைந்து காணப்படுகிறது.

 

'பிறவிய வாணரயாக் கவுண்டன் என்று பேர் பிறகபத்சிப் பட்டவராகி ஆனைகுந்தி பட்டினம் விட்டு தெற்கு நோக்கி வந்து சிறிது வேட சனங்களை குமுக்கு கூட்டி கொண்டு வந்து பால சமுத்திர பட்டணத்து பால ராசாவுடனே யுத்தம் செய்து பால ராசாவை செய்த்து மட்டக்கி போட்டு '(மெக்கென்சி ஆவணம் D.3040)

வையாபுரி நாட்டில் பாலசந்திர பட்டணத்தை சேர்ந்த பால ராஜாவை சமத்தூர் வாணராயர் வேட நாயக்கர் (தெலுங்கு மொழி பேசுபவர்கள்) சாதியினரை கொண்டு சண்டை செய்கிறார்  .(கொங்கு வெள்ளாள சாதியினர் போர் தொழில் செய்தவர்கள் கிடையாது .இதனால் மதுரை நாயக்க மன்னர்கள் ,மைசூர் உடையார் படைகளை பெற்று கொண்டு வந்து தமிழ் வேட்டுவ குடியினரோடு சண்டை செய்து இருக்கிறார்கள் .)

 

தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் பால சமுத்திர பட்டணத்தை ஆண்டவர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . கிருஷ்ணராஜா மற்றும் பால ராஜா ஆகியோர்கள் தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் .

 

"கொங்கு தேசத்துக்கு வந்து பூந்துறை நாட்டிலிருந்து கொண்டு பயிர் வெள்ளாமை செய்து கொண்டு இருக்கிற நாளையில் இந்த கொங்கு தேசத்திலுண்டான வேடர் வேட்டுவர் முதலான கிராதக சாதிகள் நம்ம சீமையில் வெள்ளாள குடியானவர்கள் பிலத்து கொள்வார்கள் என்று அவர்களுடைய மாடு ஆடுகள் காணாமல் திருடிக்கொண்டு போயும் உபத்திரவம் செய்ததால் மறுபடியும் தாங்கள் இருந்த ஊருக்கே போய் விட்டார்கள் இந்த விபரம் எல்லாம் சேர ராஜா அறிந்து காஞ்சி புரத்துக்கு போய் அந்த குடிகளுக்கெல்லாம் அபய அஸ்தம் கொடுத்து அழைத்து கொண்டு வந்து........நல்லுர்க்க நாடு என்று ....பவள குலத்தனாகிய பிரமிய வாணராய கவுண்டருக்கு கொடுங்கையாம் என்ற ஊரை" உருவாக்கி  கொடுத்தார்கள் என்று சமத்தூர் செப்பேடு கூறுகிறது .

 

கள்வர் என்ற சொல் 'திருடுபவர்' என்ற பொருளில் பயன்படுத்தபட்டு உள்ளது .(குறு 16 /1 - 3 )

பாண்டிய வேந்தனை

"ஆகொள் மூதூர்க்  கள்வர் பெருமகன்

ஏவல் இளையர் தலைவர் " (அகம் 342 /6 -7)

 

என்று கூறப்பட்டு உள்ளனர் .

ஆநிரைகளை கவருபவர்களை திருடர்கள் (கள்வர் ) என்று புலவர்கள் கூறி உள்ளனர் .

 

வேந்து விடு முனைஞர் வேற்று புலகளவின்

ஆதந்  தோம்பல் மேவற் றாகும் -தொல் பொருள் 57

 

வேந்தனின் கட்டளைபடி  வீரர்கள் வேற்று நாட்டில் களவாடிய பசுக்களை தம் நாட்டு மக்களிடம் தந்து பாதுகாத்தல் மேற்கூறிய வெட்சி ஆகும் .

 

வேட்டுவ  குடியை  சேர்ந்த ஊராளிகளுக்கு பவள வேளாள சாதியை சேர்ந்தவர்கள் ஏர் வரி கொடுக்க வில்லை .இதனால் ஏர் வரியை ஈடுகட்டும் பொருட்டு ஆடு மாடுகளை பிடித்து வந்து இருக்கிறார்கள் .

 

'அபரஞ்சி நாகம நாய்க்கர் மோளரு மாட்டையும் ஊட்டி காரைத்தொழுவில் மேத்தி கொண்டிருந்து அவ்விடத்தில்  நிர்வாகமில்லாமல் மோளற பட்டியில்  சேர்ந்து அந்த பூமி பூவுலுவன் குயிலுவன் பூமியானபடியினாலே இந்த மாடு வேட்டுவன் குமார மாதவன் மாடென்று நமக்கு தாயாதி என்று இடம் கொடுத்து மோளற பட்டியில் நின்றது .அப்போ அபரஞ்சி நாகம நாய்க்கர் தந்திரத்தினாலே மாட்டைக்கி பூமி வாங்கினான் ......வேட்டுவன் படை வந்து காடன்கரில் சர்வ சங்காற காலம் போல ஆடு மாடு சர்வ கொள்ளையையடித்துக்கொண்டு  வறபோது ...குறுக்காட்டி சண்டை செய்து நிறையை  திருப்பி கொள்ளையையும் திருப்பிட வேட்டுவர் படையை ஓட்டி விட்டொனென்று ....வால சமுத்திரத்தில் சசித்துருவில் வால ராஜாவென்று  அவன் மைத்துனன் கொழுமத்தில் கிருஷ்ணராஜாவென்றும்  இந்த பேரும் அரசாட்சி செலுத்திக்கொண்டு இருக்கிற காலத்தில் ..'(பழனி சின்னப்ப நாயக்கர் வம்சாவளி D.3118)

கொங்கு வெள்ளாளர்கள் ஏர் வரி கொடுக்கவில்லை .இதனால் தமிழ் வேட்டுவ குடியினர் காடையூரில் ஆடுமாடுகளை பிடித்து கொண்டு வரும்போது வேட நாயக்கர் (தெலுஙகு) சாதியை சேர்ந்த பழனி பாளையக்காரர் தமிழ் வேட்டுவ குடியினரோடு  சண்டை செய்து  ஆடு மாடுகளை மீட்டு கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்த பல்லவராய கவுண்டன் ,காங்கேய மன்றாடி  ஆகியோரிடம் கொடுக்கிறார்கள் . இந்நிகழ்வு கிபி 1529 க்கு பிறகு நடந்தது .

விஸ்வநாத நாய்க்கர் (கிபி 1529- 1564) மதுரை நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தவர் .இவர் ஆனைகுந்தி பகுதியில் இருந்து வேட நாய்க்கர்களை(இன்று தெலுங்கு மொழி பேசுபவர்களாக பழனி ,தேனி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.) கூட்டி வந்து பழனி ,ஆயக்குடி ,தொப்பம்பட்டி பகுதிகளுக்கு பாளையகர்களாக நியமித்தார் .

 

வெங்கச்சி வேட்டுவ குலத்தை சேர்ந்த கொங்குராயருக்கு  கொங்கு வேளாள சாதியினர் ஏர் வரி கொடுக்கவில்லை .இதனால்  தென்கரை நாடு மற்றும் காங்கேய நாடு போன்ற நாடுகளில் கொங்கு வேளாள சாதியினருக்கு சொந்தமான கால்நடைகளை கவர்ந்து சென்று விடுகிறார் .வேளாள சாதியயை சேர்ந்த வேணுடையார் ,காங்கேய மன்றாடியார் ,சர்க்கரை மன்றாடியார் ஆகியோர்கள் மைசூர் நஞ்சராயரிடம் முறையிட்டு நஞ்சராயரின் படையை பெற்று கொண்டு வந்து  கொங்கு ராயனை சண்டையில் செய்த்து விடுகிறார்கள் .(முத்தூர் பட்டயம் ,காரையூர் காணி செப்பேடு ,D.2835).

 

மைசூர் நஞ்சராயரிடம் பாலவேளாளர்கள் முறையிட்டு நஞ்சராயர் படையை பெற்றுக்கொண்டு வந்து வேட்டுவர்களோடு சண்டை செய்து தொரவலூரை மீட்கிறார்கள் .(மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு )

 

"மதுரை தேசம் அரசாட்சி செய்யப்பட்ட திருமலை நாயக்கர் நாளையில் நடந்து வந்த வயமை புதுப்பாளையம் கிராமம் புங்கம்பாடி கிராமம் கொம்மகோவில் கிராமம் ஞானிப்பாளையம் கிராமம் மயிலாடி கிராமம் கனகபுரம் கிராமம் இந்த கிராம அதிகாரிகளாகிய வெள்ளை வேட்டுவன் வெள்ளை பெரிச்சி மூப்பன் இவர்கள் நாளையில் தென் தேசத்தில் இருந்து வள்ளி புறத்து சாத்தந்தை கூட்டம் பெரியனாகவுண்டன் மகன் முத்துக்கவுண்டன் எவர் இருக்கப்பட்ட சீமையில் ...மேற்படியார்கள் இருவரும் நாலு ..கொண்டு மேல்கொண்ட பூந்துறை நாட்டு கிராமங்களில் 12 வருஷ காலம் பில்லுருந்து ...இப்படி இருக்கும் தருணத்தில் மேல்கண்ட கிராம அதிகாரிகள் வெள்ளை வேட்டுவரும் வெள்ளை பெரிச்சி மூப்பனும் மேற்படி கால்நடைகளை பெரிய கவுண்டனை வெட்டி போட்டுவிட்டு கொள்ளை செய்து கொண்டு போய் விட்டார்கள் முத்து கவுண்டன் மதுரைக்கு போய் திரு மலை நாயக்கன் இடது கேட்டு கொண்ட படி அவர் ஆய்வு செய்து படியால் தண்டு கூட மேற்படி முத்து கவுண்டன் மேற்படி புதுப்பாளையம் வகையறா கிராமமும் கொள்ளை யிட்டு ............பிறகு வெள்ளை வேட்டுவன் முத்துக்கவுண்டன் அரசாட்சி செய்து மதுரைக்கு பணம் செலுத்தாமல் .." (வெள்ளோடு காணி பட்டயம் )

 

இது பழைய தாளில் எழுதப்பட்டு ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் சிவகிரி சிந்தாமணி பண்ணை பழனிச்சாமி கவுண்டர் அவர்கள் வீட்டில் கிடைத்தது .தமிழக தோல் பொருள் துறையில் ௧௯௭௬ இல் சேர்க்கப்பட்டது .பல இடங்களில் காகிதம் மிகவும் சிதைந்து உள்ளது (கொங்கு வேளாளர் செப்பேட்டு பட்டயங்கள் ,பதிப்பாசிரியர் புலவர் செ இராசு.வெளியீடு கொங்கு ஆய்வு மையம் ,2007 ;வெள்ளோடு காணிப் பட்டயம் ) 

 

பூந்துறை நாட்டு புதுப்பாளையம் ,புங்கம்பாடி ,மயிலாடி,கனகபுரம் ஆகிய ஊர்களை வெள்ளை வேட்டுவனும்,வெள்ளை வேட்டுவரின் அதிகாரியான பெரிய மூப்பனும் அதிகாரம் செய்து வந்தார்கள் .இந்த ஊர்களில் சாந்தத்தை வெள்ளாளர்கள் ,வெள்ளை வேட்டுவனுக்கு ஏர் வரி கொடுக்கவில்லை .இதனால் இவர்களின் கால்நடைகளை பிடித்து சென்றனர் .சாந்தத்தை வெள்ளாளர்கள் நாயக்க மன்னரிடம் முறையிட்டு நாய்க்க மன்னரின் படையை பெற்று கொண்டு வந்து வெள்ளை வேட்டுவனோடு சண்டை செய்து செய்கிறார்கள் .வெள்ளை வேட்டுவன் அரசாட்சி செய்து மதுரை நாயக்கர்களும் பணம் செலுத்தவில்லை .(வெள்ளோடு காணி பட்டயம் ).

 

'சோழ ராஜன் இந்த சீமையை கொள்ளையடிக்க வேணும் என்று இருபத்தி நாலு நாட்டையும் அடக்கி தீத்து போடுவோமென்று மனதிலே திட்டப்படுத்தி கொண்டு கருவூர் காங்கேயத்தை கொள்ளையடித்து கொண்டு ..............கோட்டை வாசலிலே ஒரு பீரங்கி வேட்டு யெழுந்திரிச்சா படியினாலே சோழ ராஜனும் அவன் ராணுவமும் கெற்பம் கலங்கி கிழக்கு முகமாய் ஓடுற பொழுது...'(அனுப்பம்பட்டி செப்பேடு கிபி 17)

வெள்ளாள சாதியினர் ஏர் வரி  கொடுக்காததால் சோழராஜன் கொங்கு வெள்ளாளர்களின் கால்நடைகளை பிடித்து சென்று இருக்கிறார்கள் .

 

வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள்  கொங்கு வெள்ளாளர்களுக்கு காணியாட்சி உரிமையை வழங்கி இருக்கிறார்கள் .வெள்ளாள சாதியினர் இந்த காணிகளின் ஏர் வரியை வேட்டுவ மன்னர்களுக்கு கொடுத்து வந்து இருக்கிறர்கள் .விஜயநகர மற்றும் மதுரை நாயக்க ஆட்சி காலத்தில் கொங்கு வெள்ளாள சாதியினர் ஏர் வரியை தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களுக்கு கொடுக்காமல் விஜயநகர மற்றும் மதுரை நாயக்க மன்னர்களுக்கு கொடுத்தனர் .இதனால் ஏர் வரியை ஈடுகட்டும் பொருட்டு வெள்ளாளர்களின் கால்நடைகளை பிடித்து வந்து இருக்கிறார்கள் வேட்டுவ குடியை சேர்ந்த  வேளிர்கள் .

 

'தொண்டை மண்டலத்துலே இருந்து தென்திசை நோக்கி வரப்பட்ட வேளாளருக்கு தென் திசை வேளாளர் என்று பேர் வரப்பட்டவர்களாயி சேர தேசத்தில் வந்து இருந்த இடத்தில் பூர்வத்தில் இந்த சேர தேசத்தில் குடித்தனம் பண்ணப்பட்ட மாவிலவன் பூவிலவன் காவிலவன் வேடன் வேட்டுவன் இத சாதிகளுக்கு இருக்கப்பட்ட காணிகளிலே இந்த வேளாளருக்கு பாதி பிரிச்சி இடம் பண்ணி கொடுத்தார்கள் அக்காலத்து கொங்கு வேளாளர்கள் என்றும் '(காங்கேய மன்றாடியார் வம்சாவளியினர் ,டி3038 )

 

 சேர ,சோழர் ,பாண்டியர் ஆட்சி காலத்தில் வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் கொங்கு வெள்ளாள சாதியை சேர்ந்தவர்களுக்கு காணி ஆட்சி உரிமையை வழங்கினார்கள் .

 

பூவாணி வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்கு வரி கொடுக்காமல் பெருந்துறை நாட்டில் திருவாச்சி ,தொட்டணி பகுதிகளை அரசாட்சி செய்து கொண்டு வந்தனர் .கெட்டி முதலியார்கள் பூவாணி நாடு ,பூந்துறை நாடு போன்ற நாடுகளில் இருந்து வரி வசூல் செய்து மதுரை நாயக்க மன்னர்களுக்கு கொடுத்து வந்தனர் .வரி கொடுக்க வேண்டும் என்று கூறி வரி வசூல்  செய்து வந்தனர் .பூவாணி வேட்டுவன்  வரி கொடுக்க முடியாததால் கிராமங்களை கால கிரயத்துக்கு கெட்டி முதலியாரிடம் கொடுத்து விடுகிறான் .இதை கேரளா கொச்சி அருங்காட்சியகத்தில் இருக்கிற ஒரு தமிழ் செப்பேடு கூறுகிறது .(கிபி1699 ).

 

"வேடர்கள் பாளையக்காரர்களாய்  இராஜ்யம் பண்ணி கொண்டு வந்தார்கள் .அந்த வேடர் ராச்சியம் பண்ணனது சேர சோழ பாண்டியருக்கு பிற்காலம் வேடர் பாளையப்பட்டு  இருந்தது வேடர் நாளையில் பொடிராசு கெட்டியன் நாளது அசலு பேரு பட்டது -சக்கர நுணுக்கம் -1- சரம்பள்ளியில் தென்மனை காவேரிபுரம் அந்தி ஊரு  இந்த இடங்களில் அவாள் கட்டி விச்ச கோட்டைகள் இருக்கின்றன .இன்னும் இது முதலான இடங்களில் தேவஸ்தானம் முதலானது பிரசித்தம் பண்ணி விச்சி இருக்கிறார்கள் ..................குண்ண வேடன் எண்ணப்பட்டவன்  அமராவதி பட்டணம் என்று தன்னுடைய பட்டணத்திற்கு பேர் வெச்சிக் கொண்டு இராச்சியம்பாரம்  பண்ணி கொண்டு இருந்தார் அந்த அமராவதி பட்டணத்தில் குண்ண வேடன் வம்ஸத்தில் சிறிது பேர் ஆண்டிருக்கிறார்கள் "(அந்தியூர் தாலுக்கா சரம்பள்ளி கணக்கு பிள்ளை கைபீது, மெக்கென்ச்சி ஆவணம், D.2955).

 

'அந்த கிராமத்து உள்க்கோட்டை வேடர்கள் கட்டி விச்சுது வெளிக்கொட்டை மைசூரு கருத்தாக்கள் கட்டி விச்சுது'(காவேரிபுரம் மிட்டா மணியக்காரர் கைபீது டி 3313)

 

குன்ன வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்களை குன்ன வேடர் என்றழைக்க பட்டனர் .இவர்கள் குன்றத்தூர் துர்கம் பகுதியை தலைமை இடமாக வைத்து தாரமங்கலம் ,ஓமலூர் பகுதிகளை கிபி 1511 வரை ஆண்டார்கள் . இவர்கள் அந்திவூர்,காவேரிபுரம் ,சரம்பள்ளி ,தென்மலை (சங்ககிரி கோட்டை )  போன்ற பகுதிகளில் கோட்டை கட்டி ஆட்சி செய்தார்கள் .

பிரசோற்பதி வருஷம் ஆவணி மாதம் 5 தேதி குண்ணத்தார் துர்க்கத்திலிருக்கும் குண்ணாம் வேட்டுவரில் பெரிய கவுண்டன் மகன் ஆவுடைக் கவுண்டன் துர்கம் சண்டையில் பட்டத்துக்கு அவன் மகன் வாமலை கவுண்டன் உபையம்'(நாமக்கல் திருச்செங்கோடு நடுகல் கிபி 1511).

 

குன்றத்தூர் துர்க்கம்  பகுதிகளை அரசு ஆட்சி செய்த குன்னாடி வேட்டுவனுக்கும்,மைசூர் உடையாருக்கும் குன்றத்தூர் துர்கத்தில் (கோட்டை ) நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ஆவுடை கவுண்டனுக்கு இவனது மகன் நடுகல் எடுத்தான் .

 

'கெட்டி என்ற பேர் பெத்து வெள்ளாளன் சீயாத்தின படியினால் கெட்டி முதலியார் என்று பேர் வந்து '.( மெக்கென்ச்சி ஆவணம் ,D.2955).

தாரமங்கலம் பகுதியை ஆட்சி சேந்த குன்னாடி வேட்டுவனுக்கு முதுகில் சீய் கட்டி வந்தது .இந்த சீய் கட்டியில் இருந்து சீயை உறிஞ்சி குணப்படுத்திய வெள்ளாளனுக்கு தாரமங்கலம் பகுதியை உரிமை ஆக்கினான் .இதனால் கெட்டி (கட்டி ) என்ற பேர் வந்தது .குன்னாடி வேட்டுவரின் அரசியல் அதிகாரியாக இருந்ததால் முதலியார் என்றழைக்கப்பட்டான் .

சங்ககிரி பகுதிகளை குன்றத்தூர் துர்கம்  என்றழைக்கப்பட்டது .(தாரமங்கலம் கல்வெட்டு,SII Vol-7,No-27,28 )

 

 குன்றத்தூர் துர்கம் பகுதியை ஆண்ட குன்னாடி வேட்டுவ குடியினர் மைசூர் உடையர்களை எதிர்த்து கலகம் செய்து இருக்கிறார்கள் .இதனால் இப்பகுதிகளை மைசூர் உடையார்கள் கெட்டி முதலியர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள் .கெட்டி முதலியர் பூவாணிய நாடு மற்றும் பூந்துறை நாடு போன்ற நாடுகளில் வரி வசூல் செய்து  மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்க மன்னர்களுக்கு கொடுத்து வந்தார்கள் .கெட்டி முதலியார்கள் அரச குலத்தவரை போல மெய்க்கீர்த்தி பகுதிகளை தங்களது கல்வெட்டுகளில் பொறித்து கொண்டனர் .

காணி ஆட்சியை வைத்து இருந்தவர்களும் ,அரசாட்சியை வைத்து இருந்தவர்களும் தங்களுடைய  பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் மதுரை நாயக்கர்க்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. அரசாட்சியை வைத்து இருந்தவர்கள் மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது.இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும். விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 இல் மதுரை ஆட்சியை ஏற்றதும் பாளையப்பட்டு ஆட்சி முறையை நடைமுறை படுத்தினார்.                

 

பாண்டிய வேட்டுவ குடியை சேர்ந்த பாண்டிய மன்னனின் அரசு அதிகாரி ஆன சாத்தந்தை வெள்ளாள கூட்டத்தை சேர்ந்த ஒருவனுக்கு காலிங்கராயன் என்ற விருது பெயர் கொடுக்கப்பட்டது .பாண்டிய மன்னன் பவனி ஆற்றில் அணை கட்டி கால்வாய் வெட்டினான் .ஒரு அரசு அதிகாரி செய்யும் பணியை காலிங்கராயன் செய்தான் .இதனால் பாண்டிய மன்னன் இந்த வாய்க்காலுக்கு தனது அரசு அதிகாரியின் பெயரை சூட்டினான் .கலிங்கராயரின் வம்சாவளியினர் காலிங்கராயர் பெயரை சூட்டி கொண்டார்கள் .மதுரை நாய்க்கர் ஆட்சியில் சாத்தந்தை வெள்ளாளர்கள் சில ஊர்களை ஆட்சி செய்த வெள்ளை வேட்டுவனுக்கு ஏர் வரியை கொடுக்காமல் மதுரை நாயக்கர்களுக்கு  கொடுத்தார்கள் .இதனால் ஏர் வரியை ஈடு கட்டும் பொருட்டு சாத்தந்தை வெள்ளாளர்களின் கால்நடைகளை பிடித்து சென்றனர் .பிறகு சாத்தந்தை வெள்ளாளர்கள் மதுரை நாயக்க மன்னர்களிடம் முறையிட்டு படை கொண்டு வந்து சண்டையில் செய்தத்தை வெள்ளோடு காணி பட்டயம் கூறுகிறது .இந்த சண்டையை தவிர வேற சண்டைகள் நடக்கவில்லை .

 

'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(
கொங்கு நாடு அடைவு இயல் ,தி. முத்துசாமி கோனார் )

காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .

 

 

காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளில் ஊர் அரசர்களாக இருந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெள்ள வேட்டுவ குலத்தின் பெயரில் வெள்ளோடு என்ற ஊர் உருவானது.

 

 

பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) வெள்ள வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனோடு போர் செய்து பவானி ஆற்றில் அணை கட்டி கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.

 

'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .. புலவர் செ ராசு எழுதிய கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் நூலில்  இந்த வார்த்தைகளை சேர்த்து எழுதப்பட்டு இருக்கிறது.

 

காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் ஒரு போலி பட்டயமாகும்.

 

விஜயமங்கலம்  கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் 40  பாட்டுகள் மட்டுமே கிடைத்து இருக்கிறது என்று முத்துசாமி கோனார் கூறி இருக்கிறார் . மீதி 60  பாடல்கள் கிபி 1923  களில்  இயற்றப்பட்டு முத்துசாமி கோனாரிடம் கொடுக்கப்பட்டது .

 

கிபி 1971 களில் பல பாடல்கள் இயற்றப்பட்டு வாலசுந்தர கவிஞர் இயற்றிய பாடல்களோடு சேர்த்து 100  பாடல்களாக கொங்கு மண்டல சதகத்தில் கொடுக்கப் பட்டு இருக்க வேண்டும்  .

 

"....வெங்கலப் பாடி கிணத்தில் கண்ணர்குலம் நல்லம்மாள் இறங்கி தண்ணிர் குடிக்கும் போது பள்ளி குல வள்ளியம்மாள் நங்கை தண்ணிர் அள்ளி கொடுவென்று கேட்க அதுக்கு நல்லம்மாள் பள்ளியும் சரி பறையனும் சரி ஆரடி உனக்கு நங்கை உனக்கு தண்ணிர் அள்ளி கொடுத்தால் எங்கள் பெரியோர்கள் ஜாதிக்கு புறம்பு வைப்பார்கள் என்று சொன்னாள்.......ஆறகழூர் வாணனைப் பிடித்துக்கொண்டு ...பீரங்கி எழுப்பி ...நீர் மருந்து குண்டு இல்லாமல் கோட்டையை பிடித்தியல்லவா ........ விதரி போன வேட்டுவர்கள் யோசித்து சிறிது ராணுவத்துடனே கன்னி பாடி கட்ட வேணுமென்று வந்தார்கள் .அப்போது கன்னிபாடியிலிருக்கும் நல்லறண்டி நவிர நல்லான் பரைகாளி மூன்று பேரும் வேட்டுவர் வந்த செய்தி கேட்டு அரசில்லாப்படை வெட்டுமாவென்று விசனப்பட்டு கொண்டு இருந்தார்கள் அப்போது செல்லாண்டியம்மன் கோட்டைக்கரையம்மனும் இரண்டு வெள்ளை குதிரை மேலேறிக்கொண்டு  வேட்டுவருக்கு கெதிர் வந்து வெட்டுகிறபோது வேட்டுவர் கண்டு சின்னாண்டி வெட்டினான் பெரியாண்டி வெட்டினான் என்று ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு செத்தார்கள் பிழைத்தவர்கள் ஓடிப்போனார்கள் ….." (கன்னிவாடி கண்ண குலம் பட்டயம் ,கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள் புலவர் செ.இராசு )

இது போல பல போலி பட்டயங்கள் (மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம், மாந்தரன் சேரல் மெய்கீர்த்தி, நீலம்பூர் காணி செப்பேடு ஈஞ்ச குல காணி பட்டயம் மற்றும் பல )உருவாக்கப்பட்டு உள்ளது .இப்பட்டயம் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் ஆகும்

 

“'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய்என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி . முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி . முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .

'
கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி . முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
'
பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .

கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.

இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை குன்னுடையன் கதை தங்காள் கதை என பல நூல்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .

கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் தீரன் சின்னமலை என்பவன் படை திரட்டி ஆங்கிலேயர்களோடு போர் செய்தான் என்று ஆங்கிலேயர் ஆவணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பு கிடையாது.

 

Kongu vellalar G.O Ms.No.371 Social welfare dept.new entry Dt .16th may 1975

Sozhia vellalar G.O Ms.No.505 Social welfare dept.new entry Dt .5th July 1975

(Report of tamil nadu second backward classes commission 1985 Vol-3, Ambasankar, page-411)

சாதிகள் பட்டியலில் வெள்ளாளன் என்று இருந்த பெயரை கிபி 1975  இல் கொங்கு வேளாளர் என்று மாற்றப்பட்டு இருக்கிறது .

 

வேளாள சாதியினர் பூர்விக காலத்தில் இருந்து உழவுத்தொழில் தொழில்  வருபவர்கள் .வேளாள சாதியினர் போர் தொழில் செய்தவர்கள் கிடையாது . வேளாள சாதியினர் வேட்டுவ அரசர்களிடம் அரச அதிகாரிகளாக பணியாற்றியதை கல்வெட்டுகள் கூறுகிறது.

 

ஆதாரம் 5:

வேட்டுவ குடியினர் மருத நிலத்தை அரசாட்சி செய்தனர் இதனால் வேட்டுவ  குலத்தின் குல தெய்வமான கொற்றவை (காளியம்மன் ) கோவிலை மருத நிலத்தில் கட்டினார்கள். கொற்றவை ஆதிக்கம் மருத நிலத்தில் இருந்ததால் உழவு தொழில் செய்பவர்களின் கடவுளான இந்திரன் வழிபாடு மருத நிலத்தில் இல்லாமல் போயிட்டது .உழவு தொழில் செய்த வேளாள சாதியினர் மருத நிலத்தின் ஆட்சியாளராக இருக்க வில்லை என்பதை இது சுட்டி காட்டுகிறது வேட்டுவ குடியினர் பல ஊர்களில் காளியம்மன் கோவிலை கட்டி முதல் மரியாதை எனப்படும் முப்பாட்டு உரிமையை வைத்து கொண்டு ஊரில் வாழும் அனைத்து சாதிகளுக்கும் ஒவ்வொரு உரிமையை கொடுத்தார்கள். காலப்போக்கில் வேளாள சாதியினர் பல கோவில்களில் முப்பாடு உரிமைகளை வேட்டுவ குடியினருக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கொண்டார்கள். மேலும் அக்கோயிலை வேளாள சாதியினர் தங்களது குல தெய்வமாக ஆக்கி கொண்டார்கள். இப்படித்தான் இவர்களுக்கு காளியம்மன் கோவில் குல தெய்வம் ஆனது.

 

வேளாள சாதியினர் வேட்டுவ குடியினருக்கு பணம் கொடுத்து விளை நிலங்கள் மற்றும் கோவில் உரிமைகளை வாங்கி கொண்டார்கள் என்று தென்னிலை செப்பேடு (கிபி 18) கூறுகிறது.

 

வேளாள சாதியினர் நான்காம் வர்ணத்தை சேர்ந்தவர்களாக இலக்கியங்களும் கல்வெட்டுகளும் கூறுகிறது ஆகவே வேளாள சாதியினர் அரச வர்ணத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.